‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (13.03.09) செய்திகள்

posted in: செய்திகள் | 0

வன்னிப்பெரு நிலப்பரப்பில் நேற்றும் நேற்று முன்நாளும் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணை மற்றும் வான் தாக்குதல்களில் 57 தமிழா்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் பெருமளவிலானோர் காயமடைந்துள்ளனர்.
இதில் நேற்று வியாழக்கிழமை சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 32 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 43 பேர் காயமடைந்துள்ளனர்.
உணவுப்பொருட்களை ஏற்றிய கப்பலில் வந்த அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் படகின் மூலம் நேற்று வியாழக்கிழமை காலை 8:30 நிமிடமளவில் கரையோரத்திற்கு வந்தபோது சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்களை நடத்தினர்.
இதில் சம்பவ இடத்தில் இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்த 5 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 25 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் இருவர் மருத்துமனையில் உயிரிழந்துள்ளனர்.
.நாதன் (வயது 44)
தி.மேரி தியாகினி (வயது 14)
.கனகநாதன் (வயது 47)
யோ.கோபிநாத் (வயது 27)
.சிலம்பரசன் (வயது 20)
.கௌதம் (வயது 06)
.கேதீஸ்வரி (வயது 46)
ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்தை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதி சென்று பார்வையிட்டுள்ளார்.
இதேவேளையில் அனைத்துலக சங்க பிரதிநிதிகள் கரைக்கு வந்த போது மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
மக்களை கொல்கின்ற சிறிலங்கா படை எறிகணைத் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகளிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் மற்றும் பச்சை புல்மோட்டை ஆகிய பகுதிகளில் நேற்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
சோ.சிந்துஜன் (வயது 14)
சோ.சுகன்யா (வயது 20)
.அனெக்ஸ்கிங்ஸ்ரன் (வயது 36)
பே.இந்திரன் (வயது 26)
சி.மனோறஞ்சிதம் (வயது 28)
சி.நாகேஸ்வரி (வயது 49)
சி.கமலகாந்தன் (வயது 35)
.பிரியதர்சினி (வயது 16)
.கணநாதன் (வயது 45)
நோ.இந்திராணி (வயது 58)
.நவரத்தினராசா (வயது 50)
.இராஜேஸ்வரி (வயது 18)
.சுதர்சினி (வயது 15)
ரவிநாத் (10 மாதம்)
.பரமேஸ்வரி (வயது 30)
சு.ருக்குமணி (வயது 66)
.சரண்யா (வயது 08)
செ.லக்சனா (வயது 04)
வி.பிரதீபன் (வயது 04)
ஆகியோர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட போது உயிரிழந்துள்ளனர்.
அம்பலவன்பொக்கணை மற்றும் பச்சைபுல்மோட்டை பகுதியில் சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் நேற்று குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன.
இதில் 2 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
சி.இரத்தினம் (வயது 70)
.கபில்ராஜ் (வயது 15)
ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளையில் மாத்தளன் மருத்துவமனையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட வேண்டிய 5 பொதுமக்கள் நேற்று உயிரிழந்துள்ளனர்.
.யோகேஸ்வரன் (வயது 22)
.கணபதி (வயது 68)
சோ.சிந்துஜா (வயது 17)
ஆகியோர் உயிரிழந்துள்ளனர். ஏனைய இருவரின் பெயர் விபரம் கிடைக்கப்பெறவில்லை.
அதேவேளை, மாத்தளன் பகுதியில் நேற்று முன்நாள் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதில் 25 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் பெருமளவிலானோர் காயமடைந்துள்ளனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
புதுக்குடியிருப்பு, விசுவமடு பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கடுமையான தாக்குதலில் சிறிலங்கா படையினருக்கு ஏற்பட்ட அதிக உயிரிழப்புக்கள் மற்றும் படையப் பொருட்களுக்கு ஏற்பட்ட அழிவுகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக விசுவமடுவில் படையினருக்கு ஏற்பட்ட கடுமையான இழப்புக்கள் தொடர்பாக போர்க் களத்தில் உள்ள படை உயரதிகாரிகளுடன் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நேரடியாக தொடர்பு கொண்டு வினவியதாகவும் கொழும்பு தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளையில் ஊடகத்துறை அமைச்சர் மகிந்த யாப்பா அபயவர்த்தன கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் வன்னி போர் நிலைமை குறித்து தெரிவித்த கருத்துக்களுக்கும் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச விசனம் தெரிவித்து விளக்கம் கோரியிருப்பதாகவும் தெரியவருகின்றது.
கனரக ஆயுதங்களை வன்னி போர்முனையில் படையினர் பயன்படுத்தவில்லை என்றும் அதனாலேயே படையினருக்கு கடந்த சில நாட்களில் கூடுதல் இழப்புக்கள் ஏற்பட்டிருந்தன என்றும் அமைச்சர் மகிந்த யாப்பா அபயவர்த்தன கொழும்பில் நேற்று முன்நாள் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளையில் புதுக்குடியிருப்பு , விசுவமடு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தமிழீழ விடுதலை புலிகள் நடத்திய கடுமையான தாக்குதலில் 700 படையினர் கொல்லப்பட்டும் 500-க்கும் அதிகமான படையினர் காயமடைந்தும் உள்ளதாக கொழும்பில் பெயர் குறிப்பிட விரும்பாத இராணுவ உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

குறிப்பாக விசுவமடு பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் படையினருக்கு கூடுதல் இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன எனவும் காயமடைந்த அதிகாரிகள் தரத்திலான படையினர் சுமார் 77 பேர் வரை கொழும்பு தேசிய மருத்துவமனையிலும் மற்றும் கொழும்பு இராணுவ மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இந்த இராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர்.

எவ்வாறாயினும் புதுக்குடியிருப்பு, விசுவமடு பகுதிகளில் படையினருக்கு ஏற்பட்ட இழப்புக்கள் குறித்து அரசாங்கம் இதுவரை ஊடகங்களுக்கு எதுவும் தெரிவிக்கவில்லை.

சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் வழங்குகின்ற தகவல்களும் பாதுகாப்புத்துறை பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவிக்கின்ற கருத்துக்கள் மாத்திரமே கொழும்பு ஊடகங்களில் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கையின் வடக்கே மோதல் நடை பெறும் பகுதிகளில் சிக்கி பெரும் துயரங்களை எதிர்நோக்கி வரும் மக்கள் பாதுகாப்பாக வெளி யேறுவதற்கு வசதியாக உடனடியாக இலங் கையில் போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று கோரும் தீர்மானம் நேற்று ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட் டுப் பகுதிகளிலிருந்து வெளியேறும் மக்களுக்காக வவுனியாவில் அமைக்கப்பட் டுள்ள முகாம்களின் நிலைமை குறித்தும் ஐரோப்பிய ஒன்றியம் ஆழ்ந்த கவலை வெளி யிட்டுள்ளது.
அத்துடன் , இரு தரப்பையும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை மதிக்குமாறும் மோதல் நடைபெறும் பகுதி, பாதுகாப்பு வலயப் பகுதி ஆகியவற்றில் உள்ள மக்களைப் பாதுகாக்குமாறும் ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்திருக்கின்றது.
சர்வதேச மற்றும் உள்ளூர் மனித உரிமை அமைப்புகள், ஊடகவியலாளர்கள் ஆகியோரை மோதல் இடம்பெறும் பகுதிகள், முகாம்களுக்குச் செல்ல முழுமையாக அனுமதிக்க வேண்டும் என இலங்கை அரசை ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுள்ளது .
அதேவேளை, பொதுமக்கள் வெளியேறுவதற்கு உதவ முன்வந்துள்ள நாடுகள், மனிதாபிமான அமைப்புகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசைக் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் , மோதல் இடம்பெறும் பகுதிகளிலிருந்து மக்கள் சுதந்திரமாக வெளியேறுவதற்கு விடுதலைப் புலிகள் தடை ஏற்படுத்துகின்றனர் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் குற்றம் சுமத்தியிருக்கிறது.
!!!!!!!!!!!!!!!!!!!!!
பிரித்தானியாவின் எதிர்க்கட்சியின் பாதுகாப்பு செயலாளர் லியாம் பொக்ஸ் நேற்று சிறிலங்கா வருகை தந்துள்ளதாக அந்நாட்டின் அரச தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது:
சிறிலங்கா அரசாங்கம், எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இலங்கையின் தற்போதைய நிலை குறித்து பேச்சுக்களை மேற்கொள்ளும் முகமாக பிரித்தானியாவின் எதிர்க்கட்சி பாதுகாப்புத்துறை செயலாளர் லியாம் பொக்ஸ் நேற்று வியாழக்கிழமை சிறிலங்காவுக்கு வருகை தந்துள்ளார்.
சிறிலங்காவில் நாளை சனிக்கிழமை வரை தங்கியிருக்கும் லியாம் பொக்ஸ், தற்போது நடைபெற்று வரும் மோதல்கள் தொடர்பான தனது கருத்துக்களை ஊடகங்களுக்கு வழங்குவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவார் என அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
1997 ஆம் ஆண்டு கால கட்டப்பகுதியில் சந்திரிகா அரசுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் ஓப்பந்தம் மேற்கொள்ளப்படுவதற்கான திட்டங்களை இவர் முன்வைத்திருந்ததும் அண்மையில் சிறிலங்காவுக்கான சிறப்பு பிரதிநிதியை பிரித்தானியா நியமித்ததை இவர் கடுமையாக விமர்சித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மகரகம மத்தேகொடப் பகுதியிலுள்ள வீட்டில் வைத்து நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு , வெள்ளைவானில் வந்த ஆயுதபாணிகளால் கடத்திச் செல்லப்பட்ட ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக்கழக வெகுஜனத் தொடர்பாடல் பிரிவு பேராசிரியர் தம்மிக்க கங்கநாத் திஸாநாயக்க நேற்று அதிகாலை விடுவிக்கப்பட்டுள்ளார்.
இவர் வசமிருந்த சில ஆவணங்கள் மற்றும் இறுவட்டுகளை அபகரித்த பின்னரே கடத்தல்காரர்கள் இவரை கிரிந்திவெலப் பகுதியில் விடுவித்துள்ளனர்.
இது பற்றி மேலும் தெரியவருவதாவது;
மத்தேகொடப் பகுதியிலுள்ள பேராசிரியரின் வீட்டிற்கு புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் வெள்ளை வானொன்றில் சென்ற ஆயுதபாணிகள், துப்பாக்கி முனையில் அவரைக் கடத்திச் சென்றுள்ளனர் .
கடத்தப்படும் போது அவருடன் ஆவணங்கள் சிலவற்றையும் சில இறுவட்டுகளையும் (சி.டி ) கடத்தல்காரர்கள் எடுத்துச்சென்றுள்ளனர்.
பேராசிரியர் கங்கநாத் திஸாநாயக்க கடத்தப்பட்டது தொடர்பாக அவரது உறவினர்கள் அவசரப் பொலிஸ் பிரிவான “119′ க்கும் ககாத்துடுவ பொலிஸ் நிலையத்திற்கும் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இவர், கடத்தப்பட்டு சுமார் நான்குமணி நேரத்தின் பின் அதிகாலை 1.30 மணியளவில் கிரிந்திவெலப் பகுதியில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தனது கடத்தல் குறித்து பின்னர் அவர் கூறுகையில்;
எழுதுவதற்காக என்னிடம் வழங்கப்பட்டுள்ள நூல் ஒன்று தொடர்பாகவே அவர்கள் என்னைக் கடத்தியுள்ளனர் . தங்களைப் பொலிஸார் என்றே முதலில் அவர்கள் அடையாளப்படுத்தினர். அவர்கள் எல்லோரும் ஆயுதபாணிகள்,நான் எழுதும் அந்த நூல் குறித்தே அவர்கள் தொடர்ச்சியாக விசாரித்தனர் , அதுபற்றி துருவித் துருவிக் கேட்டனர். அந்த நூலுடன் தொடர்புடைய இறுவட்டு குறித்தும் விசாரித்தனர். பின்னர் அந்த இறுவட்டைப் பறித்து விட்டனர்.
அதன் பின்பே தன்னை அவர்கள் கிரிந்திவெலவில் வைத்து விடுவித்ததாகவும் தெரிவித்தார் .
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த போது அவரது ஊடக ஆலோசகராகவிருந்த இவர் அந்தக் காலப்பகுதியில் ரூபவாஹினிக் கூட்டுத்தாபன தலைவராகவும் இருந்துள்ளார் .
இவர் எழுதும் புத்தகம் தொடர்பாக கடந்தவாரம் சிங்களப் பத்திரிகையொன்றில் செய்தி வெளியான நிலையிலேயே இவர் கடத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கொழும்பு, வெள்ளவத்தை பசல்ஸ் ஒழுங்கையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை இனந்தெரியாதோரால் கடத்தப்பட்ட ஆசிரியை நேற்று வியாழக்கிழமை இரவு விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை மாலை பசல்ஸ் ஒழுங்கையிலுள்ள தனது வீட்டிற்கு சிநேகிதியுடன் சென்று கொண்டிருந்த போது அப்பகுதியில் வெள்ளை வானொன்றில் வந்தோர் இவரைக் கடத்திச் சென்றனர்.
இராஜகிரிய ரோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலை ஆசிரியையான இவர் கடத்தப்பட்டது தொடர்பாக மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளரும் கொழும்பு மாவட்ட எம். பி.யுமான மனோகணேசனிடமும் வெள்ளவத்தைப் பொலிஸ் நிலையத்திலும் உறவினர்கள் முறைப்பாடு செய்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்றிரவு 9 மணியளவில் கடத்தல்காரர்கள் அதேவானில் இவரைக் கொண்டு வந்து பசல்ஸ் ஒழுங்கையிலுள்ள அவரது வீட்டிற்கு முன்பாக இறக்கி விட்டுச் சென்றுள்ளதாக உறவினர்கள் மனோகணேசன் எம்.பி.க்கு அறிவித்துள்ளனர
!!!!!!!!!!!!!!!!!!!!!!
திருகோணமலையில் ஐந்து அகவை சிறுவன் கடத்தல் – 10 இலட்சம் கப்பம் கோரல்
திருகோணமலையில் ஐந்து அகவையுடைய சிறுவன் ஒருவன் இனம் தெரியாதோரால் கடத்தில் செல்லப்பட்டிருப்பதாக , அங்கு நிலைகொண்டுள்ள சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிறுவனைக் கடத்திச் சென்ற ஆயுத நபர்கள், குறிப்பிட்ட சிறுவனின் பெற்றொரிடம் இருந்து 10 இலட்சம் ரூபா கப்பம் கோரியிருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
பாடசாலைக்கு முன்பாக இந்த சிறுவன் கடத்தப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ள போதிலும், கடத்தப்பட்ட சிறுவன் பற்றிய மேலதிக விபரங்களை சிறீலங்கா காவல்துறையினர் இதுவரை வெளியிடவில்லை .
!!!!!!!!!!!!!!!!!!!!!!
யாழ்நகரில் நேற்று வியாழக்கிழமை படையினரின் சோதனை நடவடிக்கைகள் அதிகரித்துக் காணப்பட்டன .
நகரின் பிரதான சந்திகளிலும் நகருக்கான நுழைவாயில்களிலும் நிறுத்தப்பட்டிருந்த படையினர் வழமைக்கு மாறான சோதனைகளில் ஈடுபட்டிருந்தனர்.
நகரினுள் சென்ற வாகனங்களிலும் துவிச்சக்கரவண்டி மற்றும் மோட்டர் சைக்கிள்களிலும் சென்றோர் இறக்கப்பட்டு தீவிர உடற்சோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர். வாகனங்களும் சோதனைகளுக்குள்ளாக்கப்பட்டன.
படையினர் திடீரென மேற்கொண்ட இந்தச் சோதனை நடவடிக்கைகளால் நகரினுள் சென்ற மக்கள் பல அசௌகரியங்களை எதிர் நோக்கினர். பிற்பகல் வரை இந்தச் சோதனைகள் இடம்பெற்றன .
!!!!!!!!!!!!!!!!!!!
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேசத்தில் If;fpa uhr;rpaj;jpy; Nkhrb fhuzkhf rpiwj;jz;liz ngw;w தேசிய நல்லிணக்க அமைச்ச Uk;; MAjjhupAkhd விநாயகமூர்த்தி முரளிதரனின் (கருணா) அலுவலகமொன்றின் மீது இன்று அதிகாலை ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.
சொறிக் கல்முனை 6ஆம் கட்டையிலுள்ள இவ்வலுவலகம் ஏற்கனவே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அலுவலகமாக செயற்பட்டு வந்ததாகவும் If;fpa uhr;rpaj;jpy; Nkhrb fhuzkhf rpiwj;jz;liz ngw;w தேசிய நல்லிணக்க அமைச்சUk;; MAjjhupAkhd விநாயகமூர்த்தி முரளிதரனின் (கருணா) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அண்மையில் இணைந்து கொண்ட பின்பு அவரது அலுவலகமாக செயற்பட்டதாகவும் பிரதேச வாசிகள் தெரிவித்தனர் .

இன்று அதிகாலை இவ்வலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் போது கொல்லப்பட்ட நால்வருமே அங்கு தங்கியிருந்ததாகக் கூறப்படுகின்றது.
விடுதலைப் புலிகளே இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பதாக அக்காரியாலயத்துடன் தொடர்புடைய பேச்சாளர் ஒருவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

அரசாங்கப் படையினரும் விடுதலைப் புலிகளும் இறுதிக்கட்ட போரில் மோது வதற்கு தயாராகிக் கொண்டு இருப்பதால் முல்லைத்தீவில் 7 மைல் நீளமான பாதுகாப்பு வலயத்தில் சிக்குண்டுள்ள ஒரு லட்சத்துக்கும் அதிக மான மக்கள் பூண்டோடு அழியும் பேராபத் தானழ்நிலை உருவாகியுள்ளது.
ஆகையால் அவர்கள் கிளிநொச்சி அல் லது முல்லைத்தீவு மாவட்டத்தில் பாது காப்பான இடம் ஒன்றில் தங்குவதற்கு ஏற் பாடு செய்யுங்கள்
இவ்வாறு யாழ். ஆயர் அதிவண. தோமஸ் செளந்தரநாயகம் ஆண்டகை ஜனாதிப திக்கு அவசர வேண்டுகோள் விடுத்துள் ளார். அந்த வேண்டுகோளின் பிரதி விடுத லைப் புலிகளின் அரசியல்துறைப்பொறுப் பாளருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
மக்களை பாதுகாப்பான இடத்துக்குச் செல்வதற்கு உடனடியாக அனுமதிக்கா விடின் அங்குள்ள மக்கள் பூண்டோடு அழியும் அபாயம் உருவாகும் என்றும் அவர் தமது கடிதத்தில் இடித்துரைத்துள்ளார்.

யாழ்.ஆயரின் கடிதத்தின் பிரதிகள் .சி.என். எனப்படும் கிறிஸ்தவ உதவி நிறு வனம் உட்பட பல மத மற்றும் மனிதாபி மான பணி அமைப்புகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
வன்னியில் இறுதிக்கட்டப் போர் தொடங் கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியா கின்றன. அந்தக் கடும் போரில் மக்கள் சிக் குண்டு போவதைத் தவிர்க்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும்
இப்போது கடற்கரையோரமாக பிரக டனம் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு வல யத்துக்குள் மக்கள் சிக்கி வெளித் தொடர் புகளை இழந்து விடுவார்கள் என்ற அச்ச நிலை ஏற்பட்டுள்ளது
மக்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேற்றப்படா விட்டால் அவர்கள் பூண் டோடு அழியும் பேரபாய நிலை உள்ளது. இந்த நிலை ஆபத்தானது என்பதால் அவர் களின் பாதுகாப்பை உறுதிசெய்ய விரை வான, கண்டிப்பான, உறுதியான நட வடிக்கை எடுக்கப்பட வேண்டும்
அந்தரித்து பரிதவிக்கும் மக்கள், சிக் குண்டுள்ள மக்கள் பாதுகாப்பான இடத் துக்குச் செல்வதற்கு கிளிநொச்சி அல்லது முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதுகாப் பான இடங்களுக்கு செல்வதற்கு இருதரப் புகளும் இணைந்து ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கடிதத்தில் கேட்டுள் ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வன்னியில் மோதலில் சிக்கியுள்ள மக் களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் திட் டத்தை ஒபாமா நிர்வாகம் கைவிட்டுள்ளது என வாஷிங்ரன் வட்டாரங்களை மேற் கோள்காட்டி இந்தியாவின்ரெடிவ் இந்தியாஇணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது
இரு தரப்பும் பரஸ்பரம் தாக்குதலை நிறுத்தி, மக்களை வெளியேற்ற இணங் காத சூழ்நிலை காரணமாகவே இந்தத் திட் டம் கைவிடப்பட்டது எனவும் தெரிவிக் கப்பட்டுள்ளது .
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு அமெரிக்க பசுபிக் கட்டளை பீடத்தின் கடற்படை, விமானப்படையினர் சென்று மக்களை வெளியேற்றத் திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், இவ்வாறான வெளியேற்றம் சாத்தியமா என்பதை ஆராய்வதற்கு இப்பகுதிக்குச் சென்றுள்ள அமெரிக்க குழு, தற்போதைய நிலையில் இது சாத்தியமில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளது .
இரு தரப்புகளும் பரஸ்பரம் தாக்குதலை மேற்கொள்ளாத நிலை, இருதரப்பும் இதற்கு இணங்காத சூழ்நிலையில் மக்களை வெளியேற்றுவதற்கான திட்டம் சாத்தியப்படமாட்டாது என வாஷிங்டன் வட்டாரம் தெரிவிக்கிறது.
இரு தரப்பும் பரஸ்பரம் தாக்குதலை மேற்கொள்ளாது மற்றும் இருதரப்பும் இணங்கும் பட்சத்திலேயே இதனை நடைமுறைப்படுத்த முடியும்.
மேலும் இவ்வாறு வெளியேற்றப்படுபவர்களை எங்கு கூட்டிச் செல்வது என்பது பிரிச்சினைக்குரிய விடயமாகக் காணப்பட்டது. அவர்களைத் தமிழ்நாட்டிற்கு கூட்டிச் செல்வது பற்றியும் ஆராயப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
முல்லைத்தீவுக்கு முன்னர் உணவுப் பொருள்களைக் கொண்டு சென்றவின்ரன்கப்பலின் எஞ்சிய உணவுப் பொருள்களும் இறக்கப்படுவதாக ஜனாதி பதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

இக்கப்பல் 500 மெற்றிக்தொன் உண வுப் பொருள்களுடன் கொழும்பில் இருந்து புறப்பட்டு புதுமாத்தளனை அடைந்து பொருள்களை இறக்கும்போது இம்மாதம் 10 ஆம் திகதி புலிகள் ஷெல் தாக்குதல் கள் நடத்தியதால் 145 மெற்றிக்தொன் உணவுப் பொருள்களை இறக்கிய நிலை யில் கப்பல் திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் பின்னர் நேற்று எஞ்சிய 355 மெற்றிக்தொன் உணவுப் பொருள்களும் எடுத்துச்செல்லப்பட்டு அங்கு இறக்கப்பட்டதாக அமைச்சர் தெரி வித்தார்.

இதுவரை விடுவிக்கப்படாத பகுதிக்கு கடந்த இரண்டரை வாரங்களில் மொத்தம் 750 மெற்றிக் தொன் உணவுப் பொருள் களே அனுப்பி உள்ளதாகவும் அதன் பொருட்டு உலக உணவுத்திட்டம் உதவி வழங்கியதாகவும் அமைச்சர் கூறினார்.

இதேவேளை, இவ்வருட முற்பகுதி தொடக்கம் 39 ஆயிரம் பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் வந்துள்ள தாகவும் பெப்ரவரி 10 ஆம் திகதி தொடக் கம் இம்மாதம் 6 ஆம் திகதி வரை 2,224 நோயாளிகள் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவினால் அழைத்து வரப்பட்டு 7 வைத் தியசாலைகளில் சிகிச்சை பெறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை விடுதலைப்புலிகளின் விமானங்களின் உதிரிப் பாகங்களைத் தாங்கள் கைப்பற்றியுள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர்.
புதுக்குடியிருப்பின் வட, கிழக்கு பகுதியில் புதன் கிழமை மாலை நடைபெற்ற தேடுதலின்போதே புலிகளின் விமானங்களது உதிரிப்பாகங்கள் சில மீட்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
விமானங்களுக்குரிய ஏழு ரயர்கள், ஆறு பெட்டி இயக்கும் பிளக்குகள், விமானத்துக்குரிய 12 லீற்றர் ஓயில், மூன்று பாதுகாப்பான பார்வைக் கண்ணாடிகள், விமான ஓடுபாதைக்குரிய இரவு நேர விளக்குகள்8, விமான ஓடு பாதைக்குரிய வெள்ளை விளக்குகள்8, டாக்ஸி பாதை விளக்குகள், விமான ஓடு பாதைக்குரிய விளக்கு செற்1, தீயணைப்புக் கருவி1, ஒட்சிசன் சிலிண்டர்கள்2, ஒட்சிசன் வாயு முக மூடி6, ஒளிவட்ட விளக்குள்30, ஈரோ கிறீஸ் 3 ரின், ஒயில் ரின்கள் உட்பட பல பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பொருட்களை யெல்லாம் புலிகள் வன்னிக்குத் தருவித்து அவற்றையெல்லாம் அங்கு மிகப் பாதுகாப்பாக மறைத்து வைத்திருந்ததாகவும் தற்போது புலிகளின் இறுதிப் பகுதிகளுக்குள் முன்னேறி வரும் படையினர் அவற்றைக் கைப்பற்றிவருவதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!
கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்டதை அடுத்து முதன் முறையாக மட்டக்களப்பு பாலமீன்மடுவையும் பாசிக்குடாவையும் இணைக்கும் கடற்கரையோர பாதை 650 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ளது .

இதற்கென நெக்டெப் திட்டத்தின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகக் கடற்தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புதிய பாதைக்கான அடிக்கல் நடும் வைபவம் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் நேற்று நடைபெற்றது. மட்டக்களப்பு மாநகர மேயர் திருமதி சிவகீதா பிரபாகரன், மாவட்ட கடற்தொழில் உதவிப் பணிப்பாளர் எஸ்.ரி. ஜோரஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன் முதல் கட்டமாக, 90 மில்லியன் ரூபா செலவில் பாலமீன்மடு முதல் சவுக்கடி வரையான 5 கிலோ மீற்றர் பாதை அமைக்கப்படும். அதனைத் தொடர்ந்து பாசிக்குடா வரை பாதை விஸ்தரிக்கப்படும்.

இப்பாதை அமைப்பதன் மூலம் 25,000 கரையோர மக்கள் நன்மை அடையவுள்ளனர் . அத்துடன் வாழைச்சேனை, செங்கலடி, ஏறாவூர் பிரதேசங்களைச் சேர்ந்த 1500 மீன் வியாபாரிகள் இதனால் அதிக பயனடைவர் என முதலமைச்சர் சந்திரகாந்தன் தெரிவித்தார்.
.
!!!!!!!!!!!!!!
கொழும்பு நகரில் வாகன நெரிசலைத் தவிர்க்கும் நோக்கிலான “”சிற்றி லைனர்சொகுசு பஸ்சேவை நேற்று வியாழக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த பஸ் சேவைக்கான ஆரம்ப வைபவம் கட்டுபெத்தை ஜேர்மன் தொழில்நுட்பக் கல்லூரி அருகே நேற்றுக்காலை 9 மணிக்கு இடம்பெற்றது.
இந்த சேவையை நடத்துவது பற்றி பல வருடங்களாக கூறப்பட்டு வருகின்றபோதும், இனியும் இதனை ஒத்திப் போடுவதில்லை என இறுதியாக தீர்மானிக்கப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
காலை 6 மணிமுதல் நடைபெறவுள்ள இந்த பஸ் சேவையில், பயணம் செய்வோரின் 150 வாகனங்களுக்கு இலவச தரிப்பிட வசதிகளை வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முதலில் வரும் வாகனங்களுக்கு சேவையில் முன்னுரிமை என்ற அடிப்படையில், வாகன தரிப்பிட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதற்கிணங்க, காலையில் கொழும்பு நகருக்கு வருவதற்காக தமது சொந்த வாகனங்களில் வரும் பயணிகள் இந்த தரிப்பிடங்களில் தமது வாகனங்களை நிறுத்திய பின்னர், அங்கிருந்து சொகுசு பஸ் மூலமாக கொழும்பு நகருக்கு பயணிக்க முடியும்.
பயணிகளின் நன்மைகருதி, கொழும்பு நகரின் வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் சொகுசு பஸ் சேவையை நடத்துவதற்கான தீர்மானத்தை அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேற்கொண்டதாக அமைச்சின் ஊடகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இச்சேவையை சீராக முன்னெடுக்கும் வகையில், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் அமல் குமாரகே, பயணிகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவன்ன ஆகியோரின் ஒத்துழைப்புடன் இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
கிழமை நாட்களில் காலை 6 மணி முதல் 8.30 மணிவரை நடைபெறும் இச்சொகுசு பஸ் சேவை மூலம், லிபர்ட்டி சுற்றுவட்டம், கங்காராமே விகாரை ஆகிய இடங்களூடாக அரைமணி நேரத்தில் பயணிகள் கொழும்பு கோட்டையை வந்தடைய முடியும்.
மாலையில் புறக்கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக 4.30 மணிமுதல் 7.30 மணிவரை நடைபெறும் இப்பஸ் சேவை மூலம் பயணிகள் அரைமணி நேரத்தில் மொறட்டுவையை வந்தடைய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!
தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்டுள்ள இராணுவ தளபாடங்களைக் கொண்டு இரண்டு பெரிய இராணுவப் படைகளை அமைக்க முடியும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் புலிகளிடம் காணப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்ட யூகங்களைவிடவும் பெருந்தொகையான ஆயுதங்கள் இதுவரையில்
மீட்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜாதிக ஹெல உறுமய கட்சியின் சட்ட ஆலோசகர் உதய கம்மன்பிலவின் உத்தியோகபூர்வ இணையத்தள ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டபோது இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தாம் இலங்கைக்கு வந்திருந்த போது விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடிக்க முடியாதெனக் கூறும் தரப்பினரும், முடியும் எனக் கூறும் தரப்பினரும் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும், கடந்த மூன்று ஆண்டுகளில் யுத்தம் மூலம் புலிகளை தோற்கடிக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் இருந்த மக்கள் தங்களது எண்ணத்தை மாற்றிக் கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புலம்பெயர் தமிழ் மக்களினால் வழங்கப்பட்ட நிதியுதவிகளைக் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த நிறுத்த காலத்தில் பாரியளவு ஆயுதங்களை தருவித்துள்ளதாக கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!
இத்தாலியில் இருந்து கைத்துப்பாக்கி, ரைபிள் மற்றும் அவற்றிற்குரிய ரவைகளைக் கொண்டு வந்த சிங்கள இளைஞர் ஒருவரை கட்டுநாயக்க பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை அதிகாலை விமானம் மூலம் வந்த இவரின் பொதிகளில் இவை மறைத்து வைக்கப்பட்டிருந்ததை சுங்க அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.
பின்னர் பொலிஸாரிடம் இவர் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இவர் மினுவாங்கொடையைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
!!!!!!!!!!!!!!!!!!
ஈழத்தமிழ் மக்களின் வாழ்வுரிமையை வலியுறுத்தி தொடரும் புலம்பெயர் போராட்டங்களின் மத்தியில் , ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்கள் அனைவரும் எதிர்வரும் 16ஆம் நாள் ஐரோப்பிய ஆணையகத்திற்கு முன்பாக அணிதிரளத் தயாராகி வருகின்றனர்.
• பொதுமக்களுக்கான உடனடி உணவு, மருத்துவ உதவிகள் வழங்கப்பட வேண்டும்,
• ஆக்கிரமிப்புப் படைகள் வெளியேற்றப்பட வேண்டும்,
• தமிழரின் பாதுகாப்புக் கவசங்கள் கழையப்படக்கூடாது..

போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஐரோப்பிய ஆணையகத்தை நோக்கி பேரணியும், கண்டனக்கூட்டமும் இடம்பெறவுள்ளது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும், விடுதலை இயக்கத்தையும் அங்கீகரிக்கோரும் இந்த மாபெரும் உரிமைப் போர் எதிர்வரும் 16ஆம் நாள் காலை 10:00 மணியளவில் பெல்ஜியத்தின் தலைநகர் Gare du nord, bd albert II (2) தொடரூந்து நிலையத்திலிருந்து ஆரம்பமாக இருக்கின்றது.
நாளாந்தம் பலியெடுக்கப்படும் எம் உறவுகளின் உயிர் குடிக்கும் பயங்கரவாத அரசின் முகத்திரையைக் கிழிக்கவும், அழிக்கப்படும் இனத்தைப் பாராமுகமாக இருக்கும் அனைத்துலகின் மனசாட்சியை உலுப்பவும் ஐரோப்பிய தமிழர்கள் அணிதிரள வேண்டும் என புலம்பெயர் ஐரோப்பிய தமிழ் இளையோர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
வன்னியில் பொதுமக்களிற்கு ஏற்படும் இழப்புக்கள் தொடர்பாகவும், மக்களின் அவலம் பற்றியும் சிறீலங்கா அரசு பொய்யான பரப்புரையை மேற்கொண்டு மேற்குலகை ஏமாற்றிவரும் இந்தக் காலகட்டத்தில், புலம்பெயர் தமிழ் மக்கள் அந்தப் பரப்புரையை உடைந்தெறிந்து, மக்களைக் காப்பது அவசியம் எனச்சுட்டிக்காட்டப்படுகின்றது.
புலம்பெயர்ந்த தமிழ் மக்களது ஓர்மம் நிறைந்த சழைக்காத தொடர் போராட்டங்கள் காரணமாகவே அனைத்துலக நாடுகள் ஈழப்பிரச்சினையில் சற்றேனும் கவனம் செலுத்த ஆரம்பித்திருப்பதுடன், அரசுக்கான கண்டனங்களையும், கட்டுப்பாடுகளையும் விதிக்க தலைப்பட்டிருப்பதால், ஐரோப்பிய ஆணையகத்திற்கு முன்பாக நடைபெறவுள்ள போராட்டத்திலும் மக்கள் பெரும் திரளாகக் கலந்துகொள்ள வேண்டிய அவசியம் பற்றியும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வன்னி மக்களின் அவலத்தை தடுத்து நிறுத்தக்கோரும் மற்றொரு போராட்டம் சுவிஸ்வாழ் தமிழ் மக்களால் ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் அதேநாள் நடத்தப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!
india
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கையில் நடைபெற்றுவரும் போரில் அந்நாட்டு ராணுவம் வெற்றி பெற்ற பிறகே, அங்குள்ள இனப்பிரச்னைக்கு தீர்வு காணமுடியும் என்று இந்திய வெளியுறவுத்துறை செயலர் சிவசங்கர்மேனன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், அந்நாட்டு வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளின்டன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த சிவசங்கர்மேனன், இலங்கையில் போர் நடைபெற்றுவரும் பகுதியில் சிக்கியுள்ள அப்பாவித் தமிழர்களை அங்கிருந்து வெளியேற்ற, முதலில், தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
பின்னர், சண்டையில் ராணுவம் வெற்றி பெற்று, அந்த பகுதி முழுவதும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அதன்பிறகு , அங்குள்ள தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் அளிப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இலங்கை பிரச்னை தொடர்பாக சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ள கருத்துக்கள், இலங்கை அதிபர் ராஜபக்ஷே தெரிவித்துவரும் கருத்துக்களை ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கது

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கட‌ந்த ஒ‌ன்றரை மாத‌ங்களாக மரு‌த்துவமனை‌யி‌ல் ‌‌‌சி‌கி‌ச்சை பெ‌‌ற்று வ‌ந்த முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி இ‌ன்று தலைமை‌ச் செயலக‌ம் வ‌ந்தா‌ர். அவரை அமை‌ச்ச‌ர்க‌ள், அ‌திகா‌ரிக‌ள் வரவே‌ற்றன‌ர்.

கடுமையான முதுகுவ‌லி காரணமாக முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கட‌ந்த ஜனவ‌ரி 26ஆ‌ம் தே‌தி செ‌ன்னை போரூ‌ர் ராம‌ச்ச‌ந்‌திரா மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்‌ப‌ட்டா‌ர் . ‌பி‌ன்ன‌ர் அவரு‌க்கு அறுவைசி‌கி‌ச்சை நடைபெ‌ற்றது. இதை‌த் தொட‌ர்‌ந்துசில நா‌ட்க‌ள் மரு‌த்துவமனை‌யி‌ல் இரு‌ந்த முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி, மா‌ர்‌ச் 1ஆ‌ம் தே‌திவீடுதிரு‌ம்‌பினா‌ர்.

‌வீ‌ட்டி‌ல் 12 நா‌ட்களாக ஓ‌ய்வு எடு‌த்த முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி , இ‌‌ன்று செ‌ன்னை தலைமை‌ச் செயல‌கம் வ‌ந்தா‌ர். அவ‌ரை அமை‌ச்ச‌ர்க‌ள், அ‌திகா‌ரிக‌ள் வரவே‌ற்றன‌ர்.

இதை‌த் தொட‌ர்‌ந்து தனது ப‌ணிகளை முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கவ‌னி‌‌க்க‌த் தொட‌ங்‌கினா‌ர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வழ‌க்க‌றிஞ‌ர்களை தாக்கிய காவல‌‌ர்களை த‌ற்கா‌லிக ப‌ணிநீ‌க்க‌ம் செய்ய கோரி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, நீதிபதி முகோபாத்யாயா 3 நாட்கள் விடுமுறை எடுத்ததால் அடுத்த வாரத்துக்கு த‌ள்‌‌ளிவைக்கப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் கடந்த மாதம் 19ஆம் தேதி வழ‌க்க‌றிஞ‌ர்கள்காவல‌ர்க‌ள் இடையே மோதல் ஏற்பட்டது. வழ‌க்க‌றிஞ‌ர்களை தாக்கிய காவல‌ர்களை த‌ற்கா‌லிக ப‌‌ணிநீ‌க்‌க‌ம் செய்ய வேண்டும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் வழ‌க்க‌றி‌ஞ‌ர்கள் சங்க தலைவர் பால்கனகராஜ் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை, முகோபாத்யாயா தலைமையிலான அம‌ர்வு விசாரிக்கும் என்று தலைமை நீதிபதி எச்.எல் .கோகலே அறிவித்தார். ஆனால், உயர் நீதிமன்றத்துக்கு நீதிபதி முகோபாத்யா நேற்று முன்தினம் வரவில்லை. மனுதாரர் சார்பில் மூத்த வழ‌க்க‌றிஞ‌ர்கள் ஆஜராகி, வேறு நீதிபதிகளை கொண்டு அவசர வழக்காக விசாரிக்க, தலைமை நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதைக் கேட்ட தலைமை நீதிபதி கோகலே, ”முகோபாத்யாயா வரும் வரை காத்திருங்கள்என்றார் . இந்நிலையில், முகோபாத்யா நேற்று வருவார் என்று வழ‌க்க‌றிஞ‌ர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் , சனிக்கிழமை வரை 3 நாட்கள் அவர் விடுப்பு எடுத்திருப்பதாக நேற்று காலை பதிவாளர் ஜெனரல் அறிவித்தார். இதனால், இந்த வழக்கு திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், தலைமை நீதிபதி கோகலே தலைமையில், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை ஒரு மணி நேரம் நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் எதுவும் வெளியிடப்படவில்லை.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் பயங்கர கடல் சீற்றம் காரணமாக ராட்சத அலைகள் ஊருக்குள் புகுந்து நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

குமரி மாவட்டத்தில் வழக்கமாக ஜுன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை கடலில் சீற்றம் அதிகளவில் இருக்கும். ஆனால், சுனாமி ஏற்பட்ட பிறகு கடலில் அடிக்கடி சீற்றம் ஏற்பட்டுவருகிறது . இந்நிலையில், நேற்று, இரயுமன்துறை, மிடாலம் உள்ளிட்ட பல கடற்கரை கிராமங்களில் ராட்சத அலைகள் எழும்பி, ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. ராமன்துறை என்னுமிடத்தில் 50 க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், அங்குள்ள மக்கள் பாதுகாப்பான பகுதிகளில் தஞ்சமடைந்தனர். இரயுமன்துறையில் 80க்கும் மேற்பட்ட வீடுகளை கடல் நீர் சூழ்ந்ததால் அப்பகுதியில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. அங்குள்ள சாலைகளை கடல்மணல் மூடியுள்ளதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவுப் பாறைக்கு செல்லும் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது
!!!!!!!!!!!!!!!!!!
வா‌க்காள‌ர்களு‌க்கு ல‌ஞ்ச‌ம் கொடு‌த்தது தொட‌ர்பான சமா‌ஜ்வாடி க‌ட்‌சி‌யி‌‌ன் தலைவ‌ர் முலாய‌ம்சி‌ங் யாத‌வி‌‌ற்கு தே‌ர்த‌‌ல் ஆணைய‌ம் தா‌க்‌கீது அனு‌ப்‌பியு‌ள்ளநிலை‌யி‌ல், தே‌ர்த‌ல் நட‌த்தைவி‌திகளைமீ‌றியத‌ற்காக அ‌ந்த‌க் க‌ட்‌சி‌யி‌ன் அ‌ங்‌கீகார‌த்தை ர‌த்து செ‌ய்யவோ அ‌‌ல்லதுசி‌ன்ன‌த்தை ர‌த்து செ‌ய்யவோ தே‌ர்த‌ல் ஆணைய‌ம் நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று பா... கோ‌ரி‌க்கைவிடு‌த்து‌ள்ளது.

இதுகு‌றி‌த்து பா ... பே‌ச்சாள‌ர்பிரகா‌ஷ் ஜவதேக‌ர் கூறுகை‌யி‌ல், “ஹோ‌லி ப‌ண்டிகையை மு‌ன்‌னி‌ட்டு நட‌த்த‌ப்ப‌ட்டநிக‌‌ழ்‌ச்‌சி எ‌ன்று சொ‌ல்ல‌ப்படு‌ம் அ‌ந்தநிக‌ழ்‌ச்‌சி உ‌ண்மை‌யி‌ல் ஒரு அர‌சிய‌ல்நிக‌ழ்‌ச்‌சி ஆகு‌ம். மேடை‌யி‌லிரு‌ந்த தனது சகா‌க்க‌ள் ம‌க்களு‌க்கு‌ப் பண‌ம் கொடு‌த்தன‌ர் எ‌ன்று முலாய‌ம்சி‌ங் யாத‌வ் தனது வாயாலேயே ஒ‌ப்பு‌க்கொ‌ண்டு‌ள்ளா‌ர் . அ‌ந்த நா‌ள் ஜனநாயக‌த்‌தி‌ன் கறு‌ப்பு நா‌‌ள்எ‌ன்றா‌ர்.

“சமா‌ஜ்வாடி‌க் க‌ட்‌சி‌யி‌ன் இ‌ந்த நடவடி‌க்கை ஜனநாயக‌த்தை பண நாயகமாக மா‌ற்‌றி‌வி‌ட்டது. தே‌ர்த‌ல் நட‌த்தை ‌‌வி‌திமுறைகளைமீ‌றியத‌ற்காக சமா‌ஜ்வாடி க‌ட்‌சி‌யி‌ன் அ‌ங்‌கீகார‌த்தை ர‌த்து செ‌ய்யவோ அ‌ல்லது அ‌க்க‌ட்‌சி‌‌யி‌ன் பொது‌ச்சி‌ன்ன‌த்தை (சை‌க்‌கி‌ள்) ர‌த்து செ‌ய்யவோ தே‌ர்த‌ல் ஆணைய‌ம் நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று கோ‌ரி இ‌ந்‌திய‌த் தே‌ர்‌த‌ல் ஆணைய‌த்‌தி‌ற்கு மனு அனு‌ப்‌பியு‌ள்ளோ‌ம்எ‌ன்றா‌ர் அவ‌ர்.
!!!!!!!!!!!!!!!!!!
தேசிய அளவில் காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு மாற்றாக புதிதாக உருவாகியுள்ள மூன்றாவது அணி, பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று உத்தரபிரதேச முதலமைச்சர் மாயாவதி புதிய நெருக்கடியைக் கொடுத்துள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சிகள், அதிமுக, பகுஜன்சமாஜ், தெலுங்குதேசம் உள்ளிட்ட ஒன்பது கட்சிகள் இணைந்து, கர்நாடக மாநிலம் தும்கூரில் நேற்று மூன்றாவது அணி கோலாகலமாகத் துவக்கப்பட்டது. இந்த அணியில் உள்ள தலைவர்களுக்கு, வரும் 15ஆம் தேதி டெல்லியில் மாயாவதி விருந்து அளிக்கிறார். அப்போது, பிரதமர் வேட்பாளர் யார் என்பதை மூன்றாவது அணி அறிவிக்க வேண்டும் என்று மாயாவதி தெரிவித்துள்ளார். பிரதமர் வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டும் என்று அவரது கட்சி பிரதிநிதி சதீஷ் மிஸ்ரா மூலமாக மூன்றாவது அணித் தலைவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன . மூன்றாவது அணிக்கு மாயாவதி கொடுத்துள்ள இந்த நெருக்கடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
!!!!!!!!!!!!!!!!!
கடந்த சில நாட்களுக்கு முன்பு இமாசல பிரதேசம் மாநிலம் கங்ரா மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி மாணவர்ராக்கிங்” செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்பு மேலும் ராக்கிங் கொடுமையால் என்ஜினீயரிங் கல்லூரி மாணவி ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
ஆந்திரமாநிலம் பாப்டியாவில் மேலாண்மை என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. நேற்று இக்கல்லூரியில் படிக்கும் 20வயது மாணவியை சீனியர் மாணவிகள் விடுதியில் மொட்டை மாடிக்கு அழைத்து சென்றனர்.
அங்கு, அவரது ஆடைகளை களைந்து நிர்வாண மாக்கி தங்கள் முன் நடன மாடும்படிராக்கிங்” செய்தனர்.
இதனால் அவமானம் அடைந்த அந்த மாணவி விஷம் குடித்து விட்டார். விடுதியில் மயங்கி கிடந்த அவரை அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. மாணவியைராக்கிங்” செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!
world
பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்று குற்றம் சாற்றியுள்ள முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், தனது 5 ஆண்டு பதவிக் காலத்தை அதிபர் ஜர்தாரி பூர்த்தி செய்ய மாட்டார் என்றும் கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் கடுமையான அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் திட்டப்படி நேற்று கராச்சியில் இருந்து மாபெரும் பேரணி தொடங்கியது. இந்த பேரணி வரும் 16ம் தேதி இஸ்லாமாபாத்தில் முடிவடைகிறது. அன்றைய தினத்தில் பாகிஸ்தானில் பல்வேறு அரசியல் திருப்பங்கள் ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தானின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து சர்வதேச நாடுகள் கவலையடைந்துள்ளன.

இந்நிலையில் , பாகிஸ்தானில் தற்போது ஏறபட்டுள்ள அரசியல் குழப்பங்களுக்கு காரணமான முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், இதுகுறித்து தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் , முன்னாள் அதிபர் முஷாரப் ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உதவியுடன், அதிபர் ஜர்தாரி நாங்கள் தேர்தலில் போட்டியிடுவதை தடுத்து வருகிறார். இதனால், உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது பாகிஸ்தான் மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் என்றார்.

அதிபர் ஜர்தாரி தனது 5 ஆண்டு பதவிக்காலம் முழுவதையும் பூர்த்தி செய்ய இயலாது என்று கூறிய நவாஸ் ஷெரீப், ஜர்தாரி அரசுக்கு எதிரான தனது போராட்டத்துக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கவர்னர் ஆட்சி உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் சர்தாரியை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

பாகிஸ்தானில் முன்னாள் அதிபர் முஷாரப்பால் பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளை மீண்டும் பதவியில் அமர்த்துவது, பஞ்சாப் மாகாணத்தில் கவர்னர் ஆட்சியை விலக்கிக் கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நவாஸ் ஷெரீப் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.
அந்நாட்டு பாராளுமன்றத்தை வரும் 16ஆம் தேதி முற்றுகையிடுவதற்காக இஸ்லாமாபாத்தை நோக்கி மிகப்பெரும் பேரணி நடைபெற்று வருகிறது. பேரணியினர் மீது போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கி சூடு நடத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால், அந்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கலவரம் வெடித்துள்ளது.
இந்நிலையில், அந்நாட்டு அமைச்சர் ரஹ்மான் மாலிக், பாராளுமன்றத்தை பேரணியினர் நெருங்க அனுமதிக்க மாட்டோம் என்று கடுமையாகத் தெரிவித்துள்ளார். இதனிடையே, அமெரிக்க பிரதிநிதிகள ஹோல்புரூக்கும், பேட்டர்சன்னும் சர்தாரியுடன் இன்று டெலிகான்பரன்ஸ் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பஞ்சாப் மாகாணத்தில் கவர்னர் ஆட்சி உடனடியாக விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்றும், தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
2012 இன் ஆரம்பத்தில் உலக சனத்தொகை 700 கோடியை எட்டிவிடுமெனவும் 2050 இல் 900 கோடியாகிவிடுமெனவும் ஐ.நா. மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
அதிகளவு சனத்தொகைப் பெருக்கம் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிலேயே ஏற்படும்.
2010 2050 வரையான காலப்பகுதியில் உலக சனத்தொகையின் அரைப்பங்கை கொண்டதாக 9 நாடுகள் இருக்குமென கூறப்படுகிறது. அதில் இந்தியா, அமெரிக்கா, சீனா, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகியவை அடங்கியுள்ளன.
ஏனைய நாடுகள் நைஜீரியா, எதியோப்பியா, கொங்கோ குடியரசு, தான்சானியா ஆகியவை அதிகளவு சனத்தொகையை கொண்ட நாடுகளாக இருக்கும்.
அண்மைய மதிப்பீடுகளில் பாரிய மாற்றங்கள் இல்லையென்று பொருளாதார, சமூக விவகாரத் திணைக்களத்தின் குடித்தொகை பிரிவின் பணிப்பாளர் ஹானியா ரிவிசன் நிருபர்களுக்கு தெரிவித்துள்ளார்.
2050 இல் உலக சனத்தொகை 901 கோடியாயிருக்குமென மதிப்பிடப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
உலக சனத்தொகை எதிர்பார்ப்புகள் தொடர்பாக 2008 இற்கான மீளாய்வு அறிக்கையை அவர் சமர்ப்பித்திருக்கிறார் .
பெண் ஒருவருக்கு 2.5 பிள்ளைகள் என்ற விகிதத்தில் தற்போது உலகளாவிய ரீதியில் பிறப்பு வீதம் உள்ளது. இப்போதிலிருந்து 2050 வரை பெண் ஒருவருக்கு 2.1 பிள்ளைகள் என்ற விகிதத்தில் பிறப்பு வீதம் வீழ்ச்சியடையுமென கணிப்பிடப்படுவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
மிகக்குறைந்தளவு வளர்ச்சியடைந்த 49 நாடுகளில் சனத்தொகை வேகமாக அதிகரித்துவருகிறது. வருடாந்தம் 2.3 வீதத்திற்கு சனத்தொகை பெருகி வருவதாக குடித்தொகை மதிப்பீட்டு பிரிவு தெரிவித்துள்ளத
!!!!!!!!!!!!!!!!!!!
அமெரிக்காவில் பல பில்லியன் டாலர்கள் மூலதன மோசடி சம்பந்தமான குற்றச்சாட்டுக்களை நியூயோர்க் நீதிமன்றத்தில் பேர்னாட் மடோவ் என்பவர் ஏற்றுக்கொண்டிருக்கிறார்.
பொய், மோசடி, கறுப்புப் பணம் மோசடி செய்தல் போன்ற பல குற்றங்களை இழைத்ததாக முன்னாள் மூலதன ஆலோசகரான மடோவ் ஒப்புக்கொண்டுள்ளார்.
அந்த வகையில், இப்படியான மோசடிகளை ஒப்புக்கொண்ட முதலாவது மோசடி மன்னன் இவர்தான் என்று விபரிக்கப்படுகிறது.
சுமார் 20 வருடங்களாக இந்தக் குற்றங்களை செய்த இவர், பல்வேறு நிறுவனங்கள் மூலம் பொது மக்களிடம் இருந்து பெருந்தொகைப் பணத்தை கறந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது .
எதிர்வரும் ஜூன் மாதத்தில் நீதிமன்றம் தண்டனையை அறிவிக்கும்.
!!!!!!!!!!!!!!
அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ் மீது இராக்கில் காலணிகளை வீசியெறிந்த பத்திரிகையாளருக்கு மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டுத்தலைவர் ஒருவரை அவமதித்தமைக்காக முண்டா ஷார் அல் சைதி என்ற இந்தப் பத்திரிகையாளர் குற்றவாளியாக காணப்பட்டதாக பாக்தாத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தீர்ப்பு அறிவிக்கப்பட்டபோது நீதிமன்றத்தில் இருந்த அவரது உறவினர்களும், ஆதரவாளர்களும் ஆத்திரத்துடன் கத்தினார்கள்.
அல் சைதி மேன்முறையீடு செய்வார் என்று அவரது வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.
!!!!!!!!!!!!!!!!!!
1 euro = 146.89 sl /66.55 in
1us $ = 114.15sl /51.72in
1swiss fr = 95.86sl / 43.43in
1 uk pound =158.29sl /71. 72 in
1 saudi riyal =30.43 sl /13.79in

Leave a Reply

Your email address will not be published.