சர்வதேச விண்வெளி மையத்துக்கு ஆபத்து

நியூயார்க் : சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் பெரும் ஆபத்தில் இருந்து தப்பியது. இதன் மீது தாக்க வந்த ஒரு சிறிய துகள் கடைசி நேரத்தில் திசை மாறியதால் பிரச்னை ஏற்படவில்லை.

விண்வெளியில் சில செயற்கைகோள்கள் பயனற்றுப் போன நிலையில் உள்ளன. இவை அவ்வப் போது மோதிக் கொள்வதால் நிறைய துகள்கள் ஏற்படுகின்றன. இது போன்ற ஒரு சிறிய துகள் நேற்று சர்வதேச விண் வெளி மையத்தை நோக்கி வந்தது. விண்வெளியில் பொருட்கள் அசுர வேகத்தில் செல்வதால், ஒரு சிறிய துகள் மோதினாலும் மிகப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். இதனை உணர்ந்து விண் வெளி ஆய்வு மையத்தில் இருந்த ரஷ்யாவின் யூரி லோன்ச்சாகவ் உள்ளிட்ட 3 விஞ்ஞானிகளுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. உடனே இவர்கள் சிறிய விண்கலத்தில் வெளியேறினர். பின்னர் அந்த துகள் தாக்காமல் நகர்ந்து சென்று விட்டது. இதையடுத்து விஞ்ஞானிகள் மீண்டும் ஆய்வு மையத்துக் சென்று பணிகளை தொடர்ந்தனர்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.