வன்னி மக்களை மீட்கும் திட்டத்தை கைவிட்டது ஒபாமா நிர்வாகம்

வன்னியில் மோதலில் சிக்கியுள்ள மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் திட்டத்தை ஒபாமா நிர்வாகம் கைவிட்டுள்ளது என வாஷிங்ரன் வட்டாரங்களை மேற் கோள்காட்டி இந்தியாவின் “ரெடிவ் இந்தியா” இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இரு தரப்பும் பரஸ்பரம் தாக்குதலை நிறுத்தி, மக்களை வெளியேற்ற இணங்காத சூழ்நிலை காரணமாகவே இந்தத் திட்டம் கைவிடப்பட்டது எனவும் தெரிவிக் கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்படுள்ளவை வருமாறு:

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு அமெரிக்க பசுபிக் கட்டளை பீடத்தின் கடற்படை, விமானப்படையினர் சென்று மக்களை வெளியேற்றத் திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும், இவ்வாறான வெளியேற்றம் சாத்தியமா என்பதை ஆராய்வதற்கு இப்பகுதிக்குச் சென்றுள்ள அமெரிக்க குழு, தற்போதைய நிலையில் இது சாத்தியமில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளது.

இரு தரப்புகளும் பரஸ்பரம் தாக்குதலை மேற்கொள்ளாத நிலைக்கு இருதரப்பும் இணங்காத சூழ்நிலையில் மக்களை வெளியேற்றுவதற்கான திட்டம் சாத்தியப்படமாட்டாது என வாஷிங்டன் வட்டாரம் தெரிவிக்கிறது.

இருதரப்பும் பரஸ்பரம் தாக்குதலை மேற்கொள்ளாது மற்றும் இருதரப்பும் இணங்கும் பட்சத்திலேயே இதனை நடைமுறைப்படுத்த முடியும். என அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

மேலும் இவ்வாறு வெளியேற்றப்படுபவர்களை எங்கு கூட்டிச் செல்வது என்பது பிரிச்சினைக்குரிய விடயமாகக் காணப்பட்டது. அவர்களைத் தமிழ்நாட்டிற்கு கூட்டிச் செல்வது பற்றியும் ஆராயப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.