ஆட்லறிப் படைத் தள அழிப்பில் வீரச்சாவைத் தழுவிய கரும்புலிகளுடன் விடுதலைப் புலிகளின் தலைவர்

தேராவில் பிரதேசத்தில் அமைந்திருந்த சிறிலங்கா இராணுவத்தின் பாரிய ஆட்லறிப் படைத் தளம் விடுதலைப் புலிகளால் செவ்வாய்கிழமை அதிகாலை தகர்த்து அழிக்கப்பட்டுள்ளது.

கரும் புலிகள் படையணியும், கிட்டுப் பீரங்கிப் படையணியும் இணைந்து நடத்திய இந்த வெற்றிகரத் தாக்குதலில் ஆறு ஆட்லறிகளும் மற்றும் வெடி பொருட்களும் தகர்த்து அழிக்கப்பட்டுள்ளன. இதில் 50ற்கும் மேற்பட்ட சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

மூன்று கரும்புலிகள் உட் பட ஏழு போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். விடுதலைப் புலிகளின் தலைவர் அவர்களுடன் கரும்புலிகள் எடுத்துக்கொண்ட நிழற்படங்களை ஈழநாதம் இதழ் நேற்று வெளியிட்டுள்ளது.

இந்த வெற்றிகரத் தாக்குதலில்

கரும்புலி லெப்.கேணல்மாறன்
கரும்புலி மேஜர் தமிழ்மாறன்
கரும்புலி கப்டன் கதிர்நிலவன்

மேஜர் மலர்ச்செம்மல்
கப்டன் ஈழவிழியன்
கப்டன் காலைக்கதிரவன்
கப்டன் கலையினியவன்

ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.