தே‌சிய பாதுகா‌ப்பு ச‌ட்ட‌த்தை ர‌த்து செ‌ய்ய‌க் கோ‌ரி சீமான் மனு

தேசிய பாதுகாப்பு சட்டத்‌தி‌ன் ‌கீ‌ழ் த‌மிழக அரசு த‌ன்னை கைது செ‌ய்ததை ரத்து செய்யக்கோரி சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌ல் இயக்குநர் சீமான் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

புதுச்சேரியில் சட்டக்கல்லூரி மாணவர்கள் நடத்திய இலங்கை தமிழர் ஆதரவு உண்ணாவிரதத்தில் இந்திய இறையா‌ண்மை‌க்கு எதிராக பேசியதாக கூ‌றி புதுச்சேரி காவல்துறையால் கைதுசெய்யப்பட்டு இய‌க்குன‌ர் ‌‌‌‌‌சீமா‌ன் ‌சிறை‌யி‌ல் உ‌ள்ளா‌ர்.

இதை‌த் தொடர்‌ந்து திருநெல்வேலி மாவ‌ட்ட‌ம் பாளையங்கோட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் இந்திய இறையா‌ண்மை‌க்கு எதிராக பேசியதாக கூ‌றி இயக்குநர் சீமான் மீது வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்ய‌ப்ப‌ட்டது. இதை‌த் தொட‌ர்‌ந்து இய‌க்குன‌ர் ‌சீமா‌ன் தேசிய பாதுகாப்பு சட்ட‌த்‌தி‌ன் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர்.

த‌ற்போது புது‌ச்சே‌ரி ‌சிறை‌யி‌ல் இரு‌க்கு‌ம் இய‌க்குன‌ர் ‌‌‌சீமா‌ன், த‌ன்னை த‌மிழக அரசு தே‌சிய பாதுகா‌ப்பு ச‌ட்ட‌த்‌தி‌ன் ‌கீ‌ழ் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டதை ர‌த்து செ‌ய்ய‌க் கோ‌ரி செ‌‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மனு‌த் தா‌க்க‌ல் செ‌ய்து‌ள்ளா‌ர்.

Source & Thanks : tamil.webdunia.com

Leave a Reply

Your email address will not be published.