மீண்டும் உற்பத்தியை அதிகரிக்கும் அஷோக் லேலண்ட்!

சென்னை: இதுவரை வாரத்துக்கு மூன்று தினங்கள் மட்டுமே வேலை என்றிருந்ததை மீண்டும் 5 நாட்களாக மாற்றியுள்ளது அஷோக் லேலண்ட நிறுவனம்.

பெருளாதார நெருக்கடி, கமர்ஷியல் பிரிவு வாகன விற்பனைச் சரிவு போன்றவற்றால் உற்பத்தி நாட்களை கடந்த நவம்பர் மாதம் வாரத்துக்கு மூன்று தினங்களாகக் குறைத்துவிட்டது இந்த நிறுவனம்.

இந்த மூன்று தினங்களுக்கு மட்டும் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. ஓசூர் உள்ளிட்ட இந்த நிறுவனத்தின் 6 கிளைகளிலும் இதே நிலைதான் நீடித்து வந்தது.

இந்நிலையில், திடீரென்று உற்பத்தி நாட்களை மூன்றிலிருந்து 5 ஆக மீண்டும் உயர்த்தியுள்ளது லேலண்ட்.

வேலை நாட்களை அதிகரித்தாலும், உற்பத்தி அளவை மீண்டும் அதிகரிப்பது குறித்து அந்நிறுவனம் எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை.

கமர்ஷியல் வாகனங்களான பஸ், லாரி மற்றும் ட்ரக்குகள் உற்பத்தி மற்றும் விற்பனையில் இந்தியாவின் இரண்டாவது பெரிய உற்பத்தியாளர் அஷோக் லேலண்ட்தான்.

Source & Thanks : /thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.