லாரிகள் உரசல்: ரூ1 கோடி மதிப்பு 8 கார்கள் சாம்பல்

ஆம்பூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே 8 சொகுசு கார்களுடன் கேரள மாநிலம் கொச்சியை நோக்கி சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி இன்னொரு லாரியுடன் உரசியதில் கண்டெர்னர் லாரி தீப்பிடித்துக் கொண்டது. இதில் ரூ 1 கோடி மதிப்புடைய 8 கார்களும் எரிந்து சாம்பலாகின.

சென்னையில் உள்ள தனியார் கார் தொழிற்சாலையில் இருந்து 8 சொகுசு கார்களை ஏற்றி கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று வந்தது. அதை ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அசுதீன் என்பவர் ஓட்டி வந்தார்.

அந்த கன்டெயனர் வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள மின்னூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. விடியகாலை சுமார் 5.50 மணிக்கு கன்டெய்னர் டிரைவர் முன்னே இரும்பி கம்பிகளை கொண்டு சென்ற ஒரு லாரியை முந்த நினைத்துள்ளார்.

அதேநேரத்தில் இந்த கன்டெய்னர் லாரிக்கு பின்னால் வந்த கார் ஒன்று கன்டய்னெர் லாரியை முந்த முயற்சிசெய்துள்ளது. இதனால் விபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தில் பதட்டமடைந்த டிரைவர் அசுதீன், இரும்பு லாரி மீது லேசாக உரசியுள்ளார்.

உரசிய வேகத்தில் கன்டெய்னர் லாரி தீப்பிடித்து கொண்டது. அதிலிருந்த 8 கார்களும் எரிந்து சாம்பலாகியது. இவற்றின் மதிப்பு ரூ 1 கோடி.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.