ஆளங்குளம் சந்தியில் இனந்தெரியாத நபர்களால் பஸ் ஒன்று தீக்கிரை : இன்று அதிகாலை சம்பவம்

வீரகேசரி இணையம் 3/12/2009 10:22:23 AM – வாழைச்சேனை – பொலன்னறுவை வீதியிலுள்ள ஆலங்குளம் சந்தியில் இன்று அதிகாலை இ.போ.ச. பஸ் ஒன்று இனந்தெரியாத நபர்களினால் வழிமறிக்கப்பட்டுத் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து நேற்றிரவு கல்முனை நோக்கிப் புறப்பட்ட இ.போ.ச. பஸ்ஸே இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பஸ்ஸில் 50இற்கும் மேற்பட்டோர் பயணம் செய்து கொண்டிருந்த போதிலும், அவர்களை இறக்கி விட்டே இந் நபர்கள் பஸ்ஸுக்குத் தீ வைத்து விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.(புனானைக்கும் நாவலடிச் சந்திக்கும் இடையில்)

6 பேர் கொண்ட குழுவினரே பஸ்ஸுக்குத் தீ வைத்துள்ளதாகவும் அந்நபர்கள் சீருடையுடன் வந்ததாகவும் தகவல்கள் மூலம் தெரிய வருகின்றது.

முற்றாகத் தீக்கிரையான மேற்படி பஸ் கல்முனை டிப்போவுக்கு உரியதெனக் கூறப்படுகின்றது. வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். E-mail to a friend

Source & Thanks : virakesari

Leave a Reply

Your email address will not be published.