உலக மகா கோடீஸ்வரர்கள் – மிட்டல்-4, முகேஷ்-5, அனில்-6

வாஷி்ங்டன்: போர்ப்ஸ் இதழின் உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 22 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில், லட்சுமி மிட்டல் 4வது இடத்தையும், முகேஷ் அம்பானி 5 மற்றும் அவரது தம்பி அனில் அம்பானி 6வது இடங்களையும் பெற்றுள்ளனர்.

உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர்கள் பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இதில் முதல் பத்து இடங்களில் நான்கு இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். மொத்தம் 22 இந்தியர்கள் உலக மகா கோடீஸ்வரர்கள் வரிசையில் இடம் பெற்றுள்ளனர்.

கேட்ஸை பின்னுக்குத் தள்ளிய பஃபட்..

இதுவரை முதலிடத்தில் அசைக்க முடியாத நபராக இருந்து வந்த பில் கேட்ஸை பின்னுக்குத் தள்ளி விட்டு முதலிடத்தைப் பிடித்துள்ளார் வாரன் பஃபட். கேட்ஸ் தொடர்ந்து 13 வருடங்களாக முதலிடத்தில் இருந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2வது இடத்தில் இருப்பவர் மெக்சிகோ நாட்டு டெலிகாம் அதிபரான கார்லோஸ் ஸ்லிம் ஹெல். இவரது சொத்து மதிப்பு 60 பில்லியன் டாலர்கள்.

3வது இடத்தில் கேட்ஸ்..

3வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார் பில் கேட்ஸ். மைக்சாப்ட் அதிபரான கேட்ஸின் சொத்து மதிப்பு 58 மில்லியன் டாலர்களாகும்.

லட்சுமி மிட்டல் 4வது இடத்தில் இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு 45 பில்லியன் டாலர். லண்டனில் வசித்து வரும் மிட்டல், ஐரோப்பாவின் பெரும் பணக்காரர் என்றும் போர்ப்ஸ் வர்ணித்துள்ளது.

5வது இடத்தில் முகேஷ் அம்பானி. இவரது சொத்து மதிப்பு 43 பில்லியன் டாலர்கள்.

அனில் அம்பானிக்கு 6வது இடம். அண்ணனை விட ஒரு பில்லியன் டாலர் சொத்து குறைவு. அதாவது 42 பில்லியன் டாலர் இவரது சொத்து மதிப்பு.

உலகின் பெரும் பணக்கார ரியல் எஸ்டேட் அதிபரான டி.எல்.எப் நிறுவனத்தின் தலைவரான கே.பி.சிங் 30 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 8வது இடத்தில் உள்ளார்.

இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள மற்ற இந்தியர்கள் விவரம்…

ஷிவ் நாடாருக்கு 277வது இடம்..

சசி மற்றும் ரவி ரூயா(43), ஆஸிம் பிரேம்ஜி (60), சுனில் மிட்டல் மற்றும் குடும்பத்தினர் (64), குமார் பிர்லா (76), ரமேஷ் சந்திரா (86), கெளதம் அடானி (91), சாவித்ரி ஜின்டால் மற்றும் குடும்பத்தினர் (110), அனில் அகர்வால் (164), ஆடி கோத்ரேஜ் மற்றும் குடும்பத்தினர் (178), ஜி.எம். ராவ் (198), இந்து ஜெயின் (236), திலீப் சங்வி (260), ஜெய் பிரகாஷ் கெளர் (277), ஷிவ் நாடார் (277), உதய் கோடக் (288), சைரஸ் பூனவாலா (307), ஆனந்த் ஜெயின் (327), சந்த்ரு ரஹேஜா (368), துள்சி டான்டி (368), ராகேஷ் வாத்வான் (428).

இவர்களில் கெளதம் அடானி மற்றும் சமீர் கெலாட் ஆகியோரை குறிப்பிடத்தக்க கோடீஸ்வரர்கள் என போர்ப்ஸ் வர்ணித்துள்ளது.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.