பொது விழாக்களுக்கு அனுமதி பெற வேண்டும்: சிறிலங்கா அரசு அறிவிப்பு

சிறிலங்காவில் இனிவரும் காலங்களிள் பொது விழாக்களுக்கான ஏற்பாடுகள் செய்ய முன்னர் பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி பெறப்பட வேண்டும் என மகிந்த அரசாங்கம் அறிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சு அனுமதி கொடுத்தால் மாத்திரமே விழாக்களை நடாத்த முடியும் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை சிறிலங்காவின் தெற்கு நகரான மாத்தறையில் இஸ்லாமியர்கள் ஒழுங்கு செய்திருந்த விழா ஒன்றில் நடைபெற்ற குண்டுத் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டும் மூத்த அமைச்சர் ஒருவர் படுகாயமடந்திருந்ததை தொடர்ந்து அரசாங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தேசிய ரீதியில் எடுக்கப்படும் விழாக்கள் சமய நிகழ்வுகள் என்பனவற்றிற்கு இவ்வாறு பாதுகாப்பு அனுமதி பெறப்படவேண்டும் எனவும் கிராமப்புறங்களில் நடத்தப்படும் விழாக்ககளுக்கு அப்பகுதியில் உள்ள சிறிலங்கா காவல்துறையினரிடம் அனுமதி பெறப்பட வேண்டும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடமும் இதே காலப்பகுதியில் வன்னிப் பகுதியில் அப்பாவி பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து சிறிலங்கா படையின் ஆழ ஊடுருவும் படையினர் தாக்குதல் நடத்தி பலரை கொன்ற பின்னர் பாடசாலையில் விழாக்கள் எடுக்கும்போது சிறிலங்கா படையினரிடமோ அல்லது பாதுகாப்பு அமைச்சிடமே அனுமதி பெறவேண்டும் என அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறிலங்காவில் நடைபெற்று வரும் போர் விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று அரசாங்கம் தெரிவித்து சில நாட்களின் பின்னர் சிங்கள மாவட்டமான மாத்தறையில் நடைபெற்ற குண்டுத் தாக்குதல் அந்நாட்டின் பாதுகாப்பில் கேள்வியை எழுப்பியுள்ளது.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.