மாத்தறை குண்டுத்தாக்குதலின் எதிரொலி: 100-க்கும் அதிகமான தமிழர்களிடம் விசாரணை

மாத்தறை மாவட்டத்தில் உள்ள அக்குரச கொடாப்பிட்டியவில் இடம்பெற்ற அமைச்சர்கள் மீதான குண்டுத் தாக்குதலை அடுத்து அங்கு இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையில் நூற்றுக்கும் அதிகமான தமிழர்கள் மீது தாக்குதல் விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.

மாத்தறை மாவட்டத்தில் தமிழர்கள் வாழும் கிராமங்கள் தோட்டங்களில் கடுமையான தேடுதல் சோதனை நடவடிக்கைள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு வரை நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சோதனை நடவடிக்கையில் 17 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மாத்தறை அக்குரச காவல் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக பிரதி அமைச்சர் இராதாகிருஸ்ணனிடம் முறையிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளையில் கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி சென்ற பயணிகள் பேருந்திலேயே பயணம் செய்த இளைஞர்கள் ஐந்து பேர் மாத்தறை நகரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கொழும்பு தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.

மாத்தறையில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலை அடுத்து கொழும்பிலும் தேடுதல் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.