கொழும்பில் வெள்ளை வான் குழுவினரால் தமிழ் ஆசிரியை கடத்தல்

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு வெள்ளவத்தையில் தமிழ் ஆசிரியை ஒருவர் வெள்ளை வானில் வந்த அடையாளம் தெரியாத ஆயுதக்குழுவினரால் கடத்தப்பட்டுள்ளதாக உறவினர்கள் வெள்ளவத்தை காவல் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.

கொழும்பில் உள்ள ராஜகிரிய றோமன் கத்தோலிக்க பாடசாலையில் கற்பிக்கும் 30 வயதான கணபதிப்பிள்ளை கேதீஸ்வரி என்ற ஆசிரியையே நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கடத்தப்பட்டதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

வெள்ளவத்தையில் பசல்ஸ் ஒழுங்கையில் உள்ள அவரின் வீட்டுக்கு நேற்று மாலை வெள்ளை வானில் சென்ற ஆயுததாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என கூறி பலவந்தமாக வானில் ஏற்றிச் சென்றதாக பிரதி அமைச்சர் இராதாகிருஸ்ணனிடம் உறவினர்கள் முறையிட்டுள்ளனர்.

இதேவேளையில் குறித்த ஆசிரியையை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் செல்லவில்லை என்று வெள்ளவத்தை காவல்துறையினர் தன்னிடம் கூறியதாக பிரதி அமைச்சர் இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.