கொலைச் சந்தேக நபர்கள் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் கைது

வீரகேசரி இணையம் 3/11/2009 10:22:25 AM – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற கொலை சம்பந்தமாக சுன்னாகம் பொலிஸார் சந்தேகத்தின் பேரிம் இருவரைக் கைது செய்துள்ளனர்.

சுன்னாகம் பனை-தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் புன்னாலைக்கட்டுவன் கள்ளுத் தவறணைக் கிளை முகாமையாளர் இராசு வாமதேவன் (வயது 47). மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர், கிளையைப் பூட்டிவிட்டு இரவில் வரும் போது, வெட்டிக் கொலை செய்யப்பட்டதுடன் அவரிடம் இருந்து ஒரு தொகைப் பணமும் கொள்ளையிடப்பட்டிருந்தது.

இந்தக் கொலை சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொண்ட சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ரி.லுடாவை தலைமையிலான குழுவினர் கடந்த 7ஆம் திகதி சந்தேக நபர்கள் இருவரைக் கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட சந்தேக நபர்களின் வீட்டில் இருந்து ஐந்து கத்திகள் மற்றும் இரத்தம் தோய்ந்த ரீசேட் என்பவற்றைப் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். சந்தேக நபர்கள் மல்லாகம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இருவரையும் விளக்கமறியலில் வைக்கும்படியும் கண்டெடுத்த பொருட்களை இரசாயன பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பும்படியும் கட்டளையிடப்பட்டது. E-mail to a friend

Source & Thanks : virakesari

Leave a Reply

Your email address will not be published.