கருணாவின் நாடகத்திற்காக கடத்தப்பட்ட கிழக்கு இளைஞர்கள்

கருணாவின் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் 2000 பேருடன் இணைகின்ற நாடகத்திற்காக தமிழ் இளைஞர்கள் 6 பேருந்துகளில் கடத்தப்பட்டுள்ளனர். திருக்கோவில், அக்கரைப்பற்று என பல அம்பாறை சார்ந்த மாவட்டங்களின் கிராமங்கள் மற்றும் வீதிகள் தோறும் புகுந்த ஆயுததாரி கருணாவின் முதன்மை விசுவாசியான இனியபாரதியின் ஆயுதக் கும்பல் பலவந்தமாக ஆட்களை இழுத்து பேருந்துகளில் ஏற்றியுள்ளனர்.

இதில் பாடசாலை மாணவர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர். வழமைபோன்று ஏதோ கூட்டத்திற்கு என நினைத்து இந்த இளைஞர்கள் இருந்த நிலையில் பேருந்துகளில் அடைக்கப்பட்ட இவர்கள் கொழும்புக்கு பலாத்காரமாக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இடை நடுவில் வைத்து இரகசியமாக வீட்டாருடன் தொடர்பு கொண்டு விடயத்தினை தெரிவித்துள்ளனர். நாடகம் முடிந்ததும் பலர் திரும்பி வர வசதிகள் எதுவுமின்றி வீதிகளில் தவித்த நிலையில், நேற்று இடம்பெற்ற அக்குரச குண்டு வெடிப்புச் சம்பவத்தினை தொடர்ந்து இவர்களில் பலர் சந்தேகத்தின் பெயரில் கைதாகியுள்ளதாக தெரியவருகின்றது.

இந்நிலையில் மட்டக்களப்பு சிறஒpலங்கா காவல்நிலையம் கையில் கைக்குழந்தையுடன் உறவினர்கள் காத்துக்கிடப்பதாக இறுதியாக எமக்குக் கிடைத்த கிழக்குத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Source & Thanks : ankathi

Leave a Reply

Your email address will not be published.