‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (11.03.09) செய்திகள்

posted in: செய்திகள் | 0

எறிகணைத் தாக்குதல்களால் கடந்த பத்து நாட்களில் ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் பொதுமக்கள் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள அதேநேரம் அவர்களுக்கு சிகிச்சையளிக்க மருந்துப்பொருட்களும் இல்லாத அவலநிலை நிலவுவதாக கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிப்பாளரும் மருத்துவருமான .சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தாக்குதலில் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும் மக்களுக்கு எங்களிடமுள்ள வசதிகளை வைத்தே சிகிச்சை அளித்து வருகிறோம். எனினும் படுகாயமடைவோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் எங்களால் இந்த சிகிச்சையை தொடர்ந்தும் வழங்க முடியாத நிலையே காணப்படுகிறது .
காயமடையும் மக்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு தேவையான அளவு மருந்துப் பொருட்கள் எங்களிடம் இல்லை. குறிப்பாக சத்திர சிகிச்சை மேற்கொள்ளத் தேவையான மயக்க மருந்துகள் எங்களிடம் கையிருப்பில் இல்லை. இது தொடர்பாக நாங்கள் பல தடவைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எடுத்துக்கூறியும் இதுவரை அந்த மருந்துப் பொருட்கள் எங்களுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை .
மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதியில் வீழ்ந்து வெடிக்கும் எறிகணைகளாலேயே மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக அதிகளவான எறிகணைகள் வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் பகுதிகளில் வீழ்ந்து வெடித்திருக்கின்றன. பொக்கணை மற்றும் புதுமாத்தளன் பகுதிகளிலும் எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததால் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.
கடந்த ஒருமாத காலமாக எறிகணைகளில் காயமடைந்தவர்கள் இந்த மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகின்றனர் . குறிப்பாக கடுமையான காயமடைந்தவர்கள் அல்லது உயிர் போகும் தருணத்தில் இருப்பவர்களை அவர்களுடைய உறவினர்கள் இந்த மருத்துவமனைக்கு கொண்டு வருகின்றனர். அவ்வாறு கொண்டு வரப்படும் போது சிலர் வழியிலேயே இறந்து விடுகின்றனர். சிலர் சிகிச்சை பலனின்றி இறந்து விடுகின்றனர்.
மக்கள் இங்கு நெரிசலாக இருக்கின்ற காரணத்தால் எறிகணைத் தாக்குதல்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் இறக்கின்ற சூழல் காணப்படுகின்றது. அத்தகைய சந்தர்ப்பங்களில் அங்கிருங்கும் அயலவர்கள் அல்லது எஞ்சியிருப்போர் அந்தந்த இடங்களிலேயே அவர்களது உடலங்களை புதைத்து விடுகின்றனர். எனவே மருத்துவமனைக்கு குறைந்தளவிலான இறந்த உடலங்களே வந்து சேர்கின்றன .
அதிகளவிலான மக்கள் படுகாயமடைந்த நிலையில் கொண்டு வரப்படுவதனால் அவர்களுக்கு இரத்தப் போக்கை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளையே நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம். சிலருக்கான சத்திர சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. தொடர்ச்சியாக 24 மணிநேரமும் சத்திர சிகிச்சையை மேற்கொண்டாலும் காயமடையும் மக்கள் அனைவருக்கும் எங்களால் சத்திர சிகிச்சை மேற்கொள்ள முடியாது.
மிகக்கடுமையாக காயமடைந்து இரத்தப் போக்கு ஏற்பட்டவர்களுக்கு எங்களால் சிகிச்சை அளிக்க முடியாத நிலை காணப்படுகிறது. நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்பொதே அவர்கள் இறக்கும் ஒரு அவல நிலை காணப்படுகின்றது.
சிகிச்சை பலனின்றி பலர் இறக்கும் நிலையே இங்குள்ளது. இது துரதிர்ஸ்டவசமானது. தற்போது காயமடைந்த நிலையில் 500-க்கும் அதிகமானவர்கள் இங்குள்ளனர். அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக் கப்பல் வந்தால் இவர்களை நாங்கள் மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைப்போம். இல்லையேல் கடுமையான காயமடைந்தவர்களில் ஒரு சிலர் இறக்கக்கூடும்.
இந்த சூழ்நிலையை சமாளிப்பதற்கு நாங்கள் கேட்கும் உதவிகளை அரசாங்கம் உடனடியாக எங்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும். இல்லையேல் மேற்கூறிய நிலை ஏற்படுவதை தடுக்க முடியாது.
அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் இருதரப்புகளுடன் கலந்துரையாடி காயமடைந்த மக்களை ஏற்றிச் செல்லும் என்று நினைக்கிறேன். அதில் எதுவித சிக்கலும் இருக்கப் போவதில்லை. காலநிலை சீரின்மை காரணமாகவே அந்த கப்பல் சேவை இறுதியாக தடைப்பட்டிருந்தது.
கடந்த முதலாம் நாள் முதல் 10 நாட்களுக்குள் 1,000-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். இவ்வளவு எண்ணிக்கையான மக்கள் காயமடைந்த நிலையில் கொண்டு வரப்படுவார்கள் என்பதை நாங்கள் எதிர்ப்பார்த்திருக்கவில்லை.
எனினும் நாங்கள் எமது சேவையை வழங்குகின்றோம். எங்களால் முடிந்தவரை எங்களிடமுள்ள வளங்களைப் பயன்படுத்தி நாங்கள் இவர்களுக்கு மருத்துவ சேவையை வழங்கி வருகின்றோம்.
இங்கு கடுமையாக மழை பெய்து கொண்டிருப்பதால் மருத்துவமனையின் தற்காலிகக் கட்டடங்களில் நீர் புகுந்துள்ளது. காயமடைந்த மக்கள் இதனால் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர் . அதனைவிட இடம்பெயர்ந்துள்ள மக்களும் மழை வெள்ளத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடுமையான எறிகணைத் தாக்குதல்களுக்கும் மழை வெள்ளத்திற்கும் இடையிலான ஒரு சூழ்நிலையிலேயே நாங்கள் பணியாற்றுகின்றோம். மருத்துவமனைக்கு அருகாமையிலும் எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கின்றன . மருந்து தட்டுப்பாடு நிலவுகின்றது. பதற்றமான ஒரு நிலை. பல நூற்றுக்கணக்கில் காயமடைந்தவர்கள் இருப்பதால் சரியான சிகிச்சையை வழங்க முடியாதுள்ளது.
கடந்த முதலாம் நாள் முதல் 7 ஆம் நாள் வரையிலான காலப்பகுதியில் காயமடைந்த 700-க்கும் அதிகமானோரில் 137 சிறுவர்களும் அடங்குகின்றனர். அவர்களில் 32 சிறுவர்கள் இறந்துள்ளனர். கடந்த பத்து நாட்களில் மட்டும் 50-க்கும் அதிகமான சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 200- க்கும் அதிகமான சிறுவர்கள் காயமடைந்துள்ளனர்.
இதைவிட மழை வெள்ளம், வயிற்றோட்டம், போசாக்கின்மை போன்றவற்றாலும் சிறுவர்கள் இறந்து கொண்டிருக்கின்றனர். இப்படி பல நூற்றுக்கணக்கான சிறுவர்கள் மடியக்கக்கூடிய அவல நிலையை நாங்கள் அடைந்திருக்கின்றோம். 24 மணிநேரமும் மருத்துவமனையில் இறந்த உடலங்கள் இருந்த வண்ணமே இருக்கின்றன.
உறவினர்கள் 24 மணிநேரமும் அங்கிருந்து அழுது குழறியபடியே உள்ளனர். 24 மணிநேரமும் அது மரண வீடாகவே காட்சி தருகிறது. மருத்துவமனையின் பிற பகுதிகளிலும் உறவினர்களின் ஒப்பாரியே கேட்கிறது. இத்தகைய சூழ்நிலையில் மருத்துவமனை பணியாளர்கள் கல் நெஞ்சம் படைத்தவர்களாகவே கடமையாற்ற வேண்டியுள்ளது.
இரண்டு மாதத்திற்கு முன்னரே எங்களிடமிருந்த மருந்து கையிருப்புகள் முடிந்துவிட்டன. அதன் பின்னர் எங்களிடம் கையில் கிடைப்பதை வைத்தே சிகிச்சையளித்து வருகிறோம். சம்பந்தப்பட்ட அமைச்சு மற்றும் உயரதிகாரிகளுக்கு இது குறித்த தெளிவாக கூறியிருக்கிறோம். இது மருத்துவமனை என்று கூறப்படினும் இங்கு மருத்துவமனைக்குரிய எந்த கட்டமைப்பும் இல்லை என்றார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடு பகுதியில் சிறிலங்கா படையினரின் ஆட்லெறி பீரங்கி தளத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணியினரும் கேணல் கிட்டு பீரங்கி படையணியினரும் இணைந்து தாக்கியழித்துள்ளனர்.
இது தொடர்பாக வன்னியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிப்பதாவது:
விசுவமடு பகுதியில் உள்ள தேராவில் பகுதியில் சிறிலங்கா படையினர் அண்மையில் அமைத்திருந்த ஆட்லெறி பீரங்கித் தளத்தை நேற்று முன்நாள் திங்கட்கிழமை இரவு தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணியினரும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணியினரும் இணைந்து தாக்கியழித்துள்ளனர்.
ஆறு ஆட்லெறி பீரங்கிகளை கைப்பற்றிய விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணியினரும் கேணல் கிட்டு பீரங்கி படையணியினரும் அவற்றினை அங்கிருந்து இயக்கி சிறிலங்கா படையினர் மீது செறிவான பீரங்கித் தாக்குதல்களை மறுநாள் அதிகாலை வரை நடத்திய பின்னர் அத்தளத்தினை அழித்துவிட்டு தளம் திரும்பினர்.
இதில் அப்பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான எறிகணைகளும் வெடிமருந்துகளும் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன .
இத்தாக்குதலில் சிறிலங்கா படையினர் தரப்பில் 50 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பெருமளவிலானோர் காயமடைந்துள்ளனர் என வன்னி தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சிறிலங்காவுக்கு பயணம் செய்யும் பொருட்டு அந்நாட்டின் அனுமதிக்காக காத்திருப்பதாக நீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரி பிலிப் அல்ஸ்ரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
இலங்கையில் தற்போது தோன்றியுள்ள நிலமை தொடர்பாக ஆராய்வற்கான பேச்சுக்களை தொடங்குவதே இந்த பயணத்தின் நோக்கம். நான் சிறிலங்காவுக்கு பயணம் செய்ய வேண்டிய முக்கியத்துவம் குறித்து ஏற்கனவே தெளிவாக சிறிலங்கா அரசுக்கு தெரிவித்து விட்டேன். தற்போது பந்து அரசின் கையில் உள்ளது.
சிறிலங்காவுக்கான பயணத்திற்கு நான் தயாராக உள்ளேன். அவர்கள் விரும்பினால் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கான அழைப்பிதழை அனுப்பலாம்.
வடக்கு மற்றும் கிழக்கில் மனிதாபிமான நெருக்கடிகள் மோசமடைந்து வருகின்றன. மோதல்களினால் துன்பத்தை அனுபவித்து வரும் மக்களின் நலன்களை சிறிலங்கா அரசும் விடுதலைப் புலிகளும் மதித்து பேணுவது முக்கியமானது என்றார் அவர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சிறிலங்கா படையினரின் பல கிலோ மீற்றர் தூரம் வரை தமிழீழ விடுதலைப் புலிகள் ஊடுருவியுள்ளதுடன் கிளிநொச்சிக்கு அண்மையாக இருந்த படையினரின் பீரங்கி நிலைகளையும் கைப்பற்றியுள்ளனர் என்று கொழும்பு இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிறிலங்கா படையினர் இந்த வாரம் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளனர். படையினரின் 58 ஆவது டிவிசன் படையணியின் முன்னணி நிலைகளை தகர்த்தவாறு விடுதலைப் புலிகளின் 600 உறுப்பினர்கள் ஊடுருவியுள்ளனர்.
விடுதலைப் புலிகளின் இந்த பெருமெடுப்பிலான ஊடுருவல் காரணமாக -9 பாதையின் ஊடான படையினரின் போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களை மீள கைப்பற்ற முடியாத நிலையில் 58 ஆவது டிவிசன் படையணி உள்ளது.
படையினரின் பிரதேசத்திற்குள் 12 கிலோ மீற்றர் தூரம் வரை ஊடுருவிய விடுதலைப் புலிகளின் அணிகள் கிளிநொச்சிக்கு அண்மையாக இருந்த பீரங்கி தளத்தை கைப்பற்றியுள்ளனர்.
அங்கிருந்த 130 மி.மீ பீரங்கிகள் மூன்றை கைப்பற்றி அதனைக்கொண்டும் தாக்குதல்களை நடத்தியுள்ளனர் . கடந்த சனிக்கிழமை மட்டும் நடைபெற்ற மோதல்களில் 200 படையினர் களமுனைகளில் இருந்து அகற்றப்பட்டுள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!

,NjNtisapy; விடுதலைப் புலிகளின் ஊடறுப்புத் தாக்குதல் ஒன்றில் 500-க்கும் அதிகமான சிறீலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 1000-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சாலைக்கு தெற்கே அமைந்துள்ள தேவிபுரத்தினுள் ஊடறுப்புத் தாக்குதலை தொடுத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு அணிகள் சிறீலங்காப் படையினருக்கு பலத்த ஆழணி உயிரிழப்புகளை ஏற்பட்டுத்தியுள்ளனர்.விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் 58வது படைப்பிரிவின் 3 கொம்பனிகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன.
கடந்த இரு நாள் நடந்த ஊடறுப்புத் தாக்குதல்களில் 500-க்கு அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 1000-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர்.ஊடறுப்புப் தாக்குதலின் போது தமிழீழ விடுதலைப் புலிகளினால் சிறீலங்காப் படையினரின் படைக் கருவிகள் பலவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சிறீலங்காப் படையினரின் படைக்கருவிகளை பயன்படுத்தி கடந்த இரு நாட்களும் படையினருக்கு எதிரான தாக்குதல்களை நடத்தி, பல சதுரகிலோ மீற்றர் நிலப்பரப்புகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்ந தமிழீழ விடுதலைப் புலிகளின் அணிகள் கடந்த திங்கட்கிழமை இரவு தளம் திரும்பியுள்ளன
!!!!!!!!!!!!!!!
திருகோணமலை புல்மோட்டையில் இந்திய உதவியுடன் அமையவுள்ள தற்காலிக தள வைத்திய சாலை எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் செயல்படவிருக்கின்றது.

முல்லைத்தீவிலிருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கப்பல் வழியாக அழைத்து வரும் காயமடைந்த மற்றும் நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சையளிப்பதற்காகவே விசேடமாக இந்த வைத்திய சாலை செயல்படவிருக்கின்றது.

அவசர சிகிச்சைப் பிரிவை உள்ளடக்கியதாக இல்மனைட் தொழிற்சாலை வளாகத்திற்குள் அமையவிருக்கும் இவ்வைத்தியசாலை 50 படுக்கைகளைக் கொண்டிருக்கும்.

இதற்கு இந்தியா 7 கோடி ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்களையும் மருந்துகளையும் வழங்கியுள்ளதோடு மருத்துவர்களையும் மருத்துவ உதவியாளர்களையும் அனுப்பி வைத்துள்ளது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தேசிய பிரச்சினையைத் தீர்த்து வைக்க இலங்கை இராணுவம் மட்டும் போதுமெனவும் தேவையின்றி சர்வதேச தலையீடுகளுக்கு இடமளிக்க அரசு முயற்சிக்கக் கூடாதெனவும் தெரிவித்துள்ள ஜே .வி.பி., புல்மோட்டையில் அமைக்கப்படுவது மருத்துவமனை அல்ல என்றும் இந்திய இராணுவ முகாமே நிர்மாணிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஜே.வி.பி . செயலாளர் ரில்வின் சில்வா இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது;
தேசிய பிரச்சினையைத் தீர்ப்பதற்காக இராணுவத்தினர் மேற்கொண்டுள்ள நடவடிக்கை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. இந் நிலையில் அரசாங்கம் தமது தேர்தல் வெற்றிக்காக தேர்தல் மேடைகளில் ஒன்றையும் பொதுமக்களுடனான சந்திப்பில் மற்றொன்றையும் தெரிவித்து வருகின்றது.
இதன் மூலம் இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் ஆகிய சர்வதேச சமூகங்கள் எமது உள்விவகாரங்களில் தலையிட பல்வேறு வழிவகைகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையிலேயே புல்மோட்டையில் இந்தியா வைத்தியசாலை அமைப்பதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.
உண்மையில் புல்மோட்டையில் அமைக்கப்படுவது இந்தியாவின் தற்காலிக அவசர மருத்துவமனையல்ல. மாறாக இது இந்திய இராணுவ முகாம். இதன் மூலம் நாட்டில் அவர்களது ஆக்கிரமிப்பை அரசு ஏற்படுத்தியுள்ளது.
எமது தேசிய பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இலங்கை இராணுவத்தினரே போதுமான நிலையில், அரசாங்கம் இடத்துக்கிடம் தேவையற்ற கதைகளைப் பேசி சர்வதேச சக்திகள் எமது நாட்டில் தலையிட வழியேற்படுத்திக் கொடுத்துள்ளது. இதனை நாம் எதிர்க்கின்றோம்.
சர்வதேச சமூகத்துக்காகவே அரசியலமைப்பின் சட்டம் 13 ஆவது திருத்தம் அல்லது அதற்கு மேலான அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் குழு அமைத்து நடவடிக்கையெடுத்து வருகின்றது . இந்த அரசுக்கோ அல்லது ஜனாதிபதிக்கோ நாட்டில் அதிகாரங்களைப் பரவலாக்க மக்கள் ஆணை வழங்கவில்லை. இதனை செய்ய முற்பட்டால் அதற்கெதிராக நாம் நடவடிக்கையெடுப்போம்.
அதிகாரங்களைப் பரவலாக்குவது தொடர்பான குழுவில் டக்ளஸ் தேவானந்தா, சிவனேசதுரை சந்திகாந்தன் , குமார் ரூபசிங்க, ராஜித சேனாரட்ண உட்பட சிலர் உள்ளனர். இந்தக் குழுவிலுள்ளோர் முன்னர் பிரிவினையைக் கோரிப் போராடியவர்களும் பிரிவினைக்கு ஆதரவளிப்பவர்களுமாகும். எனவே, வெளிநாட்டு சக்திகளின் தலையீடுகளுக்கு அனுமதியளிக்காத அதேநேரம், பிரிவினையைக் கோரும் நாட்டிலுள்ள சக்திகளுக்கு இடமளிக்க வேண்டாமென அரசைக் கோருவதாக அவர் தெரிவித்தார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சிறீலங்காவின் மத்திய மலைநாட்டின் பல பகுதிகளில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் இனவாதிகளின் உதவியுடன் தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றி இரத்தத்தை பெற்று வன்னியில் காயமடைந்துவரும் படையினருக்கு பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது.
இரத்தம் வழங்குவது உடல் நலத்துக்கு நன்கு சிறந்தது என்றும், இரத்தம் வழங்கினால் ஒருமுறை வழங்க 250 ரூபாய் தருவதாகவும் கூறி மக்களிடம் இருந்து குருதியை பெற்றுக்கொள்வதாகவும் , பின்னர் பணம் எதுவும் வழங்காமல் அவர்கள் சென்றுவிடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் இவ்வாறு பணம் வழங்காது குருதியை பெற்றுவிட்டு அக்குழுவினர் சென்றுவிட ஆத்திரமடைந்த குருதிக் கொடையாளர் சிலர் உள்ளுர் அரசியல்வாதி ஒருவரது வீட்டை முற்றுகையிட்டபோது இந்த தகவல் வெளிவந்துள்ளது.
அனைத்துலக சட்டங்களின்படி பணம் கொடுத்து குருதியைப் பெற்றுக்கொள்ளுதல் தண்டனைக்குரிய குற்றமாகும் .
ஆனால் சிறீலங்காவில் தொடரும் போரினால் பெரும் தொகை படையினர் தொடர்ந்தும் கொல்லப்பட்டும் , காயமடைந்தும் வரும் நிலையில் அவர்களுக்கான குருதிக்கு தொடர்ந்தும் பற்றாக்குறை இருந்து வருகின்றது.
இதனைத் தொடர்ந்து சிறீலங்காவின் அரசியல்வாதிகள் பலர் நாட்டுப்பற்று என கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றி இவ்வாறு குருதியைப் பெற்றுக்கொள்கின்றனர்.
!!!!!!!!!!!!!!!!!!!
யாழ் தென்மராட்சிக்கான செல்பேசிகளின் தொடர்பு நேற்று (செவ்வாய்க்கிழமை) முதல் துண்டிக்கப்பட்டுள்ளன .
விடுதலைப்புலிகளின் நெடுந்தூர எறிகணைகள் நேற்று பளை, முகமாலை மற்றும் கிளாலிவரை சென்று தாக்கியுள்ள நிலையில் விடுதலைப்புலிகள் மேலும் தாக்கக்கூடும் என்ற அச்சத்தில் இவ்வாறான முன்னேற்பாடுகளை படையினர் செய்துள்ளனர்.
விடுதலைப்புலிகளின் எறிகணைத் தாக்குதலைத் தொடர்ந்து உசன் படை முகாமினுள் உள்ள தொடர்பு பரிவர்த்தனைக் கோபுரம் மற்றும் சாவகச்சேரி சந்தியில் உள்ள கோபுரத்தின் செயற்பாடுகள் சிறீலங்கா படையினரின் உத்தரவுக்கு அமைய நிறுத்தப்பட்டுள்ளன.
தென்மராட்சியில் இருந்து செல்பேசிகள் மூலம் விடுதலைப் புலிகளுக்கு அவர்களின் இலக்கு பற்றி யாராவது தகவல் வழங்கலாம் என்ற சந்தேகத்திலேயே படையினர் இநத நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
விடுதலைப்புலிகளின் தாக்குதல் வெடிப்பொலிகள் யாழ் நகர்வரை கேட்டதாகவும், பின்னர் சிறீலங்கா படையினரின் பல்குழல்கள் மற்றும் தூரவீச்சு எறிகணைகள் தொடர்ந்து இயங்கியதை தாம் அவதானித்துள்ளதாகவும் பொதுமக்கள் கூறினர்.
.
!!!!!!!!!!!!!!!!!
35 பாரவூர்தி உணவில் 13 பாரவூர்திகள் மாயம் – 22 மட்டுமே யாழ் களஞ்சியத்தில்
சிறீலங்கா அரசின் பெரும் எடுப்பிலான பரப்புரையுடன் யாழ் குடாநாட்டுக்கு தரைவழிப்பாதையூடாக அனுப்பி வைக்கப்பட்ட உணவுப் பாரவூர்திகளில் 13 பாரவூர்திகளில் கொண்டு செல்லப்பட்ட உணவுகள் எங்கு சென்றது என தெரியவில்லை என யாழ் நாவற்குழி களஞ்சிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக யாழ் மாவட்டத்துக்கு 35 பாரவூர்திகளில் உணவு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும், அவற்றினை களஞ்சியப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தாம் பணிக்கப்பட்டிருந்ததாகவும் பின்னர் வெறும் 22 பாரவூர்திகள் மட்டுமே களஞ்சியம் வந்துள்ளதாகவும், ஏனையவை வரவில்லை எனவும் அவை எங்கு சென்றன என தெரியவில்லை என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
சிறீலங்கா படையினருக்குரிய படையக்கருவிகள் மக்களுக்கான உணவு தொடரணியுடன் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்றும், விடுதலைப்புலிகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்கும் பொருட்டு சிறீலங்கா படையினர் இந்த ஏற்பாட்டை செய்துள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
உணவுப் பொருள்கள் அடங்கிய பாரவூர்திகள் தென்மராட்சியைச் சென்றடைய முன்னர், படையினரை ஏற்றிய 25 பேரூந்துகள் பாரவூர்திகள் தென் பகுதியில் இருந்து அங்கு வந்து சேர்ந்து விட்டதாகப் யாழ் செய்தியாளர்xUtH நேற்று கூறியிருந்தார்.
பேரூந்தில் பயணித்த படையினரை இலக்கு வைத்து -9 நெடுஞ்சாலையிலுள்ள கிளாலி, முகமாலை , பளைப் பிரதேசங்களை நோக்கி விடுதலைப் புலிகள் எறிகணைத் தாக்குதல் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
!!!!!!!!!!!!!!!!!
புன்னாலைக்கட்டுவன் பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற கொலை சம்பந்தமாக சுன்னாகம் பொலிஸார் சந்தேகத்தின் பேரிம் இருவரைக் கைது செய்துள்ளனர்.

சுன்னாகம் பனைதென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் புன்னாலைக்கட்டுவன் கள்ளுத் தவறணைக் கிளை முகாமையாளர் இராசு வாமதேவன் (வயது 47). மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர், கிளையைப் பூட்டிவிட்டு இரவில் வரும் போது, வெட்டிக் கொலை செய்யப்பட்டதுடன் அவரிடம் இருந்து ஒரு தொகைப் பணமும் கொள்ளையிடப்பட்டிருந்தது.

இந்தக் கொலை சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொண்ட சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ரி.லுடாவை தலைமையிலான குழுவினர் கடந்த 7ஆம் திகதி சந்தேக நபர்கள் இருவரைக் கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட சந்தேக நபர்களின் வீட்டில் இருந்து ஐந்து கத்திகள் மற்றும் இரத்தம் தோய்ந்த ரீசேட் என்பவற்றைப் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். சந்தேக நபர்கள் மல்லாகம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இருவரையும் விளக்கமறியலில் வைக்கும்படியும் கண்டெடுத்த பொருட்களை இரசாயன பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பும்படியும் கட்டளையிடப்பட்டது
!!!!!!!!!!!!!!!!!!!!
போலி நகைகளை அடைவு வைக்க வந்த நபர் ஒருவர், வங்கி ஊழியர்கள் கொடுத்த தகவலின் பெயரில் பொலிஸாரால் பிடிக்கப்பட்டார். சுன்னாகம் தேசிய சேமிப்பு வங்கியில் நகைகளை அடைவு வைக்க வந்த நபர் கொண்டு வந்த நகைகளில் சந்தேகமுற்ற வங்கி ஊழியர்கள் இது சம்பந்தமாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர் .

இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட வங்கிக்குச் சென்ற பொலிஸார் சந்தேக நபரைக் கைது செய்துள்ளதுடன் அவரிடம் இருந்து ஆறு பவுண் நிறையுடைய போலி தங்க நகைகளையும் கைப்பற்றினர்.

அளவெட்டியைச் சேர்ந்த இந்த நபரைக் கைது செய்த சுன்னாகம் பொலிஸார் மல்லாகம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்
!!!!!!!!!!!!!!!!
காணாமல் போன மூதாட்டி ஒருவர், சடலமாக மீட்கப்பட்டுள்ளர். அவரின் சடலம் வீட்டுப் பின்பறத்தில் புதைக்கப்பட்ட நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது .

யாழ்ப்பாணம் மாட்டின் வீதியைச் சேர்ந்த வேதநாயகம் லில்லிமலர் (வயது 80) என்பவர் கடந்த டிசெம்பர் மாதம் கிறிஸ்மஸ் தினமான 25ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக முறையிடப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையம் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகம் என்பவற்றில் உறவினர்கள் இது தொடர்பான முறைப்பாட்டைச் செய்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற இறந்தவரின் வீட்டில் குடியிருந்த பெண்மணி ஒருவர், குறிப்பிட்ட மூதாட்டியைத் தனது கணவர் கொலை செய்து வீட்டின் பின்புறத்தில் புதைத்துள்ளதாகவும், தன்னை குறிப்பிட்ட தினத்தில் இருந்து வெளியில் செல்ல விடாது தடுத்து வைத்திருப்பதாகவும் தெரிவித்து முறைப்பாடு செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பொறுப்பதிகாரி ரி.எஸ். ருக்மல் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலம் புதைக்கப்பட்ட இடத்தைக் கண்டுபிடித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிபதி .வசந்தசேனனுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த நீதிபதி முன்னலையில் பொலிஸார் சடலத்தைத் தோண்டி எடுத்தனர். சடலம் புதைக்கப்பட்ட இடம், ஓலையால் சுற்றி அடைக்கப்பட்டு மலசல கூடம் போன்று காட்சியளிக்கும் வகையில் குழியின்மேல் சிமெந்து போடப்பட்டு எவருக்கும் சந்தேகம் ஏற்படாத வண்ணம் காணப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரிகள் எஸ். சுகுந்தன், கே.இரத்தினசிங்கம் ஆகியோர் முன்னிலையில் சடலம் வெளியே எடுக்கப்பட்டு உறவினர்களால் அடையாளம் காணப்பட்டது.

யாழ்ப்பாணம் பொலிஸார் சந்தேகத்தின் பெயரில் ஒருவரைக் கைது செய்துள்ளதுடன் வீட்டில் இருந்தவரைத் தேடி வருகின்றனர். சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இளம் ஆசிரியை ஒருவர் வெள்ளை வானில் வந்தோரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக தங்களிடம் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளதாக மக்கள் கண்காணிப்புக்குழுவின் அமைப்பாளரும் கொழும்பு மாவட்ட எம்.பி.யுமான மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
வெள்ளவத்தை பஸல்ஸ் ஒழுங்கையில் தனது சிநேகிதி ஒருவருடன் வந்த ராஜகிரிய றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் கல்விகற்பிக்கும் 31 வயதான ஆசிரியையே வெள்ளை வானொன்றில் வந்தோரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
எனினும் கடத்தல்காரர்கள் ஆசிரியையின் சிநேகிதியை எதுவும் செய்யவில்லை.
இந்தக் கடத்தல் தொடர்பாக ஆசிரியையின் உறவினர்கள் தன்னிடம் முறைப்பாடு செய்துள்ளதாக மனோகணேசன் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஆசிரியையின் உறவினர்கள் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளனர்.
!!!!!!!!!!!!!!!
முல்லைத்தீவில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து வரும் மக்களுக்காக அமைக்கப்படும் முகாம்கள், சர்வதேச தராதரத்துக்கு அமையக்காணப்பட வில்லை என்றால் ஐக்கிய நாடுகளின் நிதி யுதவி கிடைக்காமல் போகலாம் என எச் சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை செய்தியாளர்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் அகதி முகாம்கள் குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
:
வன்னியில் ஒவ்வொரு நாளும் பல உயி ரிழப்புகள் ஏற்படுகின்றன என்று ஐக்கிய நாடுகள் சபை கருதுகின்றது. எனினும், எண்ணிக்கைகளை உறுதிசெய்ய முடியாதுள்ளது.
வன்னியில் அமைக்கப்படும் இடைத் தங்கல் முகாம்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை சில உதவிகளை அளித்துள்ளது .
எனினும், நாம் இந்த முகாம்களில் நடமாட்ட சுதந்திரம் இன்மை குறித்துக் கவலை கொண்டுள்ளோம்.
குறிப்பிட்ட முகாம்கள் சர்வதேச தராதரத்துக்கு அமைய ஏற்படுத்தப்படாவிட்டால், நாம் நிதியுதவி வழங்குவதை அது பாதிக்கும். இதனால் அந்த முகாம்களில் உள்ளவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனினும் முகாம்களின் நிலைமை குறித்து உன்னிப்பாக அவதானித்த பின்னரே நீண்டகால நிதியுதவி குறித்து தீர்மானிக்க வேண்டும் என்றார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக வெளிநாட்டு நிறுவனங்களிடம் கடன்பெறுவது மிகவும் ஆபத்தானது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
இதனை விடுத்து நாட்டின் அபிவிருத்திக்காக வேறு வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமென அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து அரசாங்கம் 1.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெற்றுள்ளதுடன், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான ஜப்பான் வங்கியிடமிருந்தும் 750 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாகப் பெற்றுள்ளது.
பொருளாதாரத்தில் மிகவும் பலமான நிலையில் உள்ளநாடுகள் கூட இன்று நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை இன்று உலகமே எதிர்கொண்டுள்ளது.
ஆனால், இலங்கை இப்பிரச்சினையிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முடியும்.
எமது பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு வேறுவழியில்லாத நிலையில் உலக வங்கி சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெறப்படுகின்றது. இப்பிரச்சினையை எதிர்கொள்வதற்கு எமது சொந்தவழிமுறையில் இதற்காண மாற்று ஏற்பாட்டை நாம் இனங்காண வேண்டும்.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் அரசாங்கத்தால் வெற்றி பெற முடியாதென பலதரப்புகளிடையே பேசப்பட்டு வந்தது.ஆனால் அவர்கள் இன்று உண்மையை தெரிந்து கொண்டுள்ளனர். இதே வழிமுறையில் நாட்டின் நிதி நெருக்கடிக்கும் இலங்கையால் தீர்வுகாணமுடியும் எனவும் ஜே .வி.பி தெரிவித்துள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!
எந்தவொரு இலங்கையருடனும் தொடர்பு கொள்ளாது மனித உரிமைகள் காப்பகம் இலங்கை பற்றி கருத்துத் தெரிவிப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டுமென்று அனர்த்த முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சின் செயலாளரும் சமாதான செயலகத்தின் செயலாளர் நாயகமுமான பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் திங்கட்கிழமை நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கை மீதான விவாதத்தில் அரசசார்பற்ற அமைப்புகள் வெளியிட்ட கருத்துத் தொடர்பாக ரஜீவ் விஜயசிங்கவை மேற்கோள்காட்டி சமாதான செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
ஜெனீவாவில் என்னுடன் சந்திப்பொன்றை நடத்த மறுத்த மனித உரிமைகள் காப்பகம் எந்தவொரு இலங்கையருடனும் தொடர்பு கொள்ளாது இலங்கை பற்றிக் குறிப்பிடுவதைத் தவிர்த்துக் கொள்ளல் வேண்டும். மாறாக, தமது கூற்றுக்குச் சான்றாக அவர்கள் ஒரே அதிகார பீடத்தைச் சேர் ந்த பல்வேறு வெள்ளையின அதிகாரிகளை மேற்கோள் காட்டுகிறார்கள்.
நாம் எமது இணையத்தளத்தினூடாகத் தவறென எடுத்துக் காட்டியிருக்கும் பி.பி.சி . அறிக்கையொன்றை மனித உரிமைகள் காப்பகம் மேற்கோள் காட்டியுள்ளது. அவ்வறிக்கை . சி.ஆர்.சி. அதிகாரியொருவருடன் நடத்திய நேர்காணல் ஒன்றைப் பெரிதுபடுத்தியுள்ளதோடு அவர் கூறியவையும் திரித்துக் கூறப்பட்டுள்ளன என்பதை என்னிடம் பின்னர் .சி .ஆர்.சி. தெரிவித்தது.
இப்போது அந்த நேர்காணலின் எழுத்துருவை .சி.ஆர்.சி. அவர்களது இணையத்தளத்தில் தரவேற்றம் செய்துள்ள நிலையில், பி.பி.சி.யின் இந்த அறிக்கை எவ்வாறு தவறாக வழிநடத்துகிறது என்பதை அதனூடாக புரிந்துகொள்ளலாம்.
மேலும் மனித உரிமைகள் காப்பகம், .நா.மற்றும் அதன் பேச்சாளரான கோர்டன் வெஸ் என்பவரையும் மேற்கோள் காட்டியுள்ளது. ஆயினும் அவரின் கூற்று திரித்துக் கூறப்பட்டுள்ளது என்பதை யூ.என்.டி.பி. யின் தலைவர் குறுங் குறிப்பு மூலம் தெரிவித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!
வடக்கு கிழக் குக்கு அதிகாரப் பகிர்வு வழங்குவ தற்காக அமைச்சர் கள் சிலர் இரகசிய ஆலோசனை நடத்தி வருகிறார்கள். நாட்டை இரண்டாகப் பிரிக்கும் இந்த முயற்சியை அரசு கைவிட வேண்டும். படையினர் இரத்தம் சிந்தி, வியர்வை சிந்தி பல தியாகங்களைச் செய்து பெற்ற வெற்றியை இச் செயல் அவமதிக் கிறது.
இவ்வாறு சாடியுள்ளார் ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பியின்) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா.
பிட்டகோட்டேயில் அக்கட்சி நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவே இதைத் தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறியவை வருமாறு :
எமது படையினர் பல தியாகங்களுக்கு மத்தியில் வடக்கைப் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து மீட்டுக்கொண்டு வருகின்றனர். இந்த நாட்டுக்காக அவர்கள் பெற்றுத்தரும் வெற்றி கௌரவிக்கப்படல் வேண்டும்.

பயங்கரவாதிகளை யுத்தத்தின் ஊடாக இல்லாதொழிப்பதன் மூலம்தான் வடக்கு, கிழக்கில் தமிழர்கள் நிம்மதியாக வாழ்வர். ஆனால், இதற்கு மாறாக அதிகாரப் பகிர்வை வழங்கும் நடவடிக்கை ஒன்றில் அரசு ஈடுபட்டுள்ளது.

அதிகாரப்பகிர்வு மீண்டும் ஒரு பிரிவினைவாதத்துக்கே வழியேற்படுத்தும். தற்போது அரச அமைச்சர்கள் சிலர் இது தொடர்பாக இரகசியமான முறையில் கூடி ஆராய்ந்து வருகின்றனர்.
சமீபத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான், அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா, டிலான் பெரேரா மற்றும் ராஜித சேனாரட்ன ஆகியோர் இது தொடர்பாகக் கூடி ஆராய்ந்துள்ளனர்.
யுத்தம் முடிவுற்றதும் வடக்கு, கிழக்குக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்குவதே அரசின் ஒரே திட்டம். இந்த முயற்சிக்கு நாம் எமது எதிர்ப்பைத் தெரிவிக்கிறோம்.

நாட்டை இரண்டாகப் பிரிக்கக்கூடிய இந்த முயற்சியை அரசு கைவிடவேண்டும் என்று நாம் கோரிக்கை விடுக்கின்றோம். அதிகாரப்பகிர்வு முயற்சியானது படையினர் இரத்தம் சிந்தி, வியர்வை சிந்தி பல தியாகங்களைச் செய்து பெற்ற வெற்றியை அவமதிக்கும் ஒன்றாக அமையும் என்றார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

அதிவண யோசப் ஸ்பித்தேரி அடிகளார் இலங்கைக்கான புதிய வத்திக்கான் தூதுவராக பரிசுத்த பாப்பரசரால் நியமிக்கப்பட்டுள்ளார்.
மோல்ரா நாட்டைச் சேர்ந்த 49 வயதான இவர் பனாமா, ஈராக், மெக்ஸிக்கோ, வெனிஸ்வெலா , போத்துக்கல், கிறீஸ் ஆகிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி வத்திக்கானில் உள்ள இராஜதந்திர பணியகத்தில் சில காலம் பணியாற்றியுள்ளார்.
இலங்கையில் கடந்த நான்கு வருடங்களாக வத்திக்கான் தூதுவராக பணியாற்றி வந்த அதிவணமரியா செனாரி சிரியாவின் வத்திக்கான் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளதையடுத்து புதிய தூதுவர் இலங்கைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
india
!!!!!!!!!!!!!!!!!!
பாராளுமன்ற தேர்தலுக்காக ஜெயலலிதா உண்ணாவிரதம்:,Uf;fpwhH vd கருணாநிதி அறிக்கை Clhf ஜெயலலிதா it fz;bj;Js;shh;
மத்திய அரசில் அங்கம்வகித்து அதன் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருக்கும் தி.மு ..வும்பா... வும் தமிழகத்தில் மட்டும் இலங்கைப் பிரச்சினை விஷயத்தில் நீலிக் கண்ணீர் வடிப்பது ஏன்? என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், அக்கட்சியின் தேசிய செயலாளருமான டி. ராஜா பேசியிருக்கிறார் என் செய்வது; தி.மு.. – பா... ஆகிய இரண்டு கட்சிகளின் ஆதரவு பெற்று ராஜ்ய சபாவுக்குள் நுழைந்தவர்; இதுவும் பேசுவார்இன்னமும் பேசுவார் ! மத்திய அரசுக்கு தி.மு.. வும், பா...வும் ஆதரவு கொடுப்பது பற்றி ஆதங்கப்பட்டுள்ளார். தோழமைக் கட்சிகளுக்கு துரோகம் விளைவிப்பது எப்படி என்பதை இவரிடம் கற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய ஜெயலலிதாவின் மேடையில்கையாலாகாத கருணாநிதி ஆட்சித் திறமையின்மை என்றெல்லாம் திட்டிய வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

இதிலிருந்து என்ன தெரிகிறது? ஜெயலலிதாவிற்கும், அவருடைய கட்சியினருக்கும் கோபம் என் மீதுதான் என்றும்இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றியோ, சிங்கள அரசைப் பற்றியோ, மத்திய அரசைப் பற்றியோ அவர்களுக்கு கவலையோ கோபமோ இல்லை என்றும் தெரிகிறது அல்லவா? கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் வெளியாகும் என்பார்கள், அம்மையாரின் புளுகு ஒரே நாளில் வெட்ட வெளிச்சமாகி விட்டது; அதுவும் அந்த உண்ணாவிரத மேடையிலேயே! vd fUzepjp njuptpj;Js;shh;
!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கைத் தமிழர்களுக்காக நான் உண்ணாவிரதம் மேற்கொண்டதற்கு உலக அளவில் வரவேற்பு இருப்பதைக் கண்டு கருணாநிதி கதிகலங்கி ஆடிப்போயிருக்கிறார்என்று .தி.மு.. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்
உண்ணாவிரத மேடையில் இருந்த வாசகங்களை வினாவாக எழுப்பி ஜெயலலிதாவிற்கும் கட்சியினருக்கும் கருணாநிதி மீது தான் கோபம் என்றும் சிங்கள அரசின் மீதோ மத்திய அரசின் மீதோ அவர்களுக்கு கோபம் இல்லை என்றும் கருணாநிதி பதிலளித்திருக்கிறார். இதன் மூலம் மத்திய அரசு தவறு செய்து கொண்டிருக்கிறது என்பதை கருணாநிதி மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளது தெளிவாகிறது.
இலங்கைத் தமிழர்களை அழிப்பதற்கு உறுதுணையாக இருக்கும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை கருணாநிதி தட்டிக்கேட்டிருக்க வேண்டும்; கருணாநிதி அதை செய்யவில்லை. இதனால் இலங்கைத் தமிழர்கள் துயரத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இலங்கைத் தமிழர்களுக்காக நான் உண்ணாவிரதம் மேற்கொண்டதற்கு தமிழக மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் உலக அளவில் வரவேற்பு இருப்பதைக் கண்டு கருணாநிதி கதிகலங்கி ஆடிப்போயிருப்பதை அவரது அறிக்கை உணர்த்துகிறது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கையில் ஆயுத மோதலுக்கு தீர்வு காணாமல் போர்ப்பகுதியில் சிக்கியிருக்கும் மக்களை மீட்கப்போகிறோம் என்று படையை அனுப்பி வைத்தால் சோமாலியாவில் ஏற்பட்ட தோல்விதான் இலங்கையிலும் ஏற்படும் என்பதை இந்தியாவும், அமெரிக்காவும் மறந்துவிடக் கூடாது என்று பா... ‌நிறுவன‌ர் ராமதாஸ் கூ‌றியு‌ள்ளா‌‌ர்.

!!!!!!!!!!!!!!!!!!
வழக்கறிஞர்கள்காவலர்கள் இடையேயான மோதல் குறித்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கறிஞர்கள்காவலர்கள் இடையேயான மோதல் குறித்து, உயர் நீதிமன்றமே பொதுநல வழக்கு ஒன்றை பதிவு செய்தது. இதுகுறித்து 3 நீதிபதிகள் கொண்ட குழு விசாரணை செய்து இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் முகோபாத்தியா, வி.தனபாலன், கே.சந்துரு ஆகியோர் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இதுதவிர, தாக்குதலில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் 15 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்த கிரிமினல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும், இந்த வழக்கோடு சேர்த்து விசாரிக்கப்படும் என்றும் தெரிகிறது.

இரு வாரங்களுக்கும் மேலாக, வழக்கறிஞர்களின் போராட்டம் நீடித்து வரும் நிலையில், இன்றைய வழக்கு விசாரணைக்கு பின்னர் பிறப்பிக்கப்படும் உத்தரவை பொறுத்து வழக்கறிஞர்கள் தங்களது அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வார்கள் என்று தெரிகிறது.

ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி மீது முட்டை வீசப்பட்ட சம்பவத்திலும், உயர் நீதிமன்றமே முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தது , இந்த வழக்கும் இன்று நீதிபதிகள் முகோபாத்தியா, டி.முருகேசன், பிரபாஸ்ரீதேவன், வி.தனபாலன், கே.சந்துரு ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.

இந்த வழக்கு விசாரணைக்கு பின்னரே, வழக்கறிஞர்கள்காவலர்கள் இடையேயான மோதல் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

!!!!!!!!!!!!!!!!!!!
உயர் நீதிமன்ற மோதல் தொடர்பாக, வழக்கறிஞர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், திமுக வழக்கறிஞர்கள் இன்று முதல் நீதிமன்றம் செல்ல முடிவு செய்துள்ளனர் . இதனால், வழக்கறிஞர்கள் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற மோதல் எதிரொலியாக, வழக்கறிஞர்கள் தொடர்ந்து நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தி.மு.. வழக்கறிஞர்களின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. சட்டத்துறை செயலாளர் ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி தலைமைல் நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைப்புச்செயலாளர் பெ.வீ .கல்யாணசுந்தரம், ..ஜின்னா எம்.பி., தலைமைக்கழக சட்ட ஆலோசகர் என் .ஜோதி, சட்டத்துறை இணைச் செயலாளர்கள் வெ.ரவி, இரா.கிரிராஜன் ஆகியோர் உள்பட 200க்கும் அதிகமான தி.மு.. வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் , வழக்கறிஞர்களின் போராட்டத்தின்போது, காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி, தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோரின் படங்கள் எரிக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்தும், இதில் தொடர்புடையவர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் அறிவுரைகளை ஏற்றும், சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி எச்.எல்.கோகலேவின் வேண்டுகோளை மதித்தும், தமிழக முதல்வர் கருணாநிதியின் உருக்கமான வேண்டுகோளினை ஏற்றும், பொதுமக்களின் நலன் கருதியும் , தமிழகத்திலுள்ள அனைத்து தி.மு.. வழக்கறிஞர்களும், இன்று முதல் நீதிமன்றங்களுக்கு செல்வது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திமுகவை சேர்ந்த அரசு வழக்கறிஞர்கள் ஏற்கனவே நீதிமன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிமன்ற தாக்குதல் தொடர்பாக ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கையை கண்டித்து, வழக்கறிஞர்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இன்றும் மெமோரியல் ஹால் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.

இந்நிலையில், திமுக வழக்கறிஞர்கள் திமுக வழக்கறிஞர்கள் இன்று முதல் நீதிமன்றம் செல்ல முடிவு செய்திருப்பதால் வழக்கறிஞர்கள் இடையே மோதல் வெடிக்கும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

!!!!!!!!!!!!!!!!!!!!!!
மேகாலயாவில் தேசியவாத காங்கிரஸ் தலைமையிலான மேகாலயா முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் விலக்கிக் கொண்டதை அடுத்து அரசு பெரும்பான்மையை இழந்தது.

வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில் முதல்வர் தங்கூபர் ராய் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியில் உள்ளது.

மொத்தம் 60 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப் பேரவையில், ஆளும் மேகாலயா முற்போக்கு கூட்டணிக்கு 33 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தது. சில தினங்களுக்கு முன் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சுயேட்சை உறுப்பினர்கள் இருவர் திடீரென விலக்கிக் கொண்டு , காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். எனினும் பெரும்பான்மை பலம் இருந்ததால் அரசு பதவியில் நீடித்தது.

இந்நிலையில், கே.ஹெச்.என்..எம். கட்சி உறுப்பினரும் மாநில அமைச்சருமான பால் லிங்டோ, அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டு தனது அமைச்சர் பதவியையும் இன்று ராஜினாமா செய்துள்ளார்.

இதையடுத்து, மேகாலயா முற்போக்கு கூட்டணி சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளது . இதனால் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் பி.. சங்மா, எதிர்க்கட்சியான காங்கிரசுடன் இணைந்து புதிய கூட்டணியை ஏற்படுத்த ரகசியமாக முயற்சி மேற்கொண்டுளார். தற்போதைய கூட்டணிக்குள் பிளவு ஏற்படுத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார். எனவே பதவி விலக முடிவு செய்ததாக, பால் லிங்டோ தெரிவித்தார் .

தங்கூபர் ராய் தலைமையிலான மேகாலயா அரசு பதவிக்கு வந்த ஓராண்டுக்குள் தற்போது நெருக்கடியில் சிக்கியுள்ளது.எதிக்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு சட்டப் பேரவையில் 26 உறுப்பினர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
!!!!!!!!!!!!!!!!
ஒரிசா சட்ட‌ப்பேரவை‌யி‌ல் இன்று நடைபெறும் ந‌ம்‌பி‌க்கை வா‌க்கெடு‌ப்‌பி‌ல் வெற்றி பெற , பிஜு ஜனதா தளம் கட்சி, தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளது.

ஒரிசாவில் நட‌ந்து வரு‌ம் பிஜுஜனதா தளம் கட்சிக்கு பார‌‌திய ஜனதா கட்சி ஆதரவு அளித்து வந்தது. இந்த நிலையில், கடந்த 7ஆ‌ம் தேதி, பிஜு பட்நாயக் அரசுக்கு அளித்து வந்த ஆதரவைவில‌க்‌கி‌க் பெற்றுக்கொள்வதாக, பார‌திய ஜனதா அறிவித்தது. இதனால், ந‌வீ‌ன் பட்நாயக் அரசு‌க்குசி‌க்க‌‌ல் ஏ‌ற்ப‌ட்டது.

இந்த நிலையில், மெஜாரிட்டியை நிரூபிக்கும் படி, ‌முதலமை‌ச்ச‌ர் ந‌வீ‌ன் பட்நாயக்குக்கு, ஆளுநர் எம்.சி. பண்டாரி உத்தரவிட்டார். இதற்கான நம்பிக்கை ஓட்டெடுப்பு, இன்று நடக்கும் விசேஷ சட்ட‌ப்பேரவை‌ கூட்டத்தில் நடைபெறுகிறது. இந்த ஓட்டெடுப்பில் வெற்றி பெற, பிஜு ஜனதா தளம் , தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

முதலமை‌ச்ச‌ர் ந‌வீ‌ன் பட்நாயக், நேற்று ஆளுநர் பண்டாரியை சந்தித்தார். அப்போது அவர், தனக்கு ஆதரவு கொடுக்கும் 76 உறு‌ப்‌பின‌ர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை கொடுத்தார்.

147 உறு‌ப்‌பின‌ர்க‌ள் கொண்ட ஒரிசா சட்டப்பேரவையில் ஆளும் பிஜு ஜனதா தளத்துக்கு 61 உறு‌ப்‌பின‌ர்க‌ள் உள்ளனர். இவர்கள் தவிர, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் 4 உறு‌ப்‌பின‌ர்கள், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 2 உறு‌ப்‌பின‌ர்க‌ள், கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சியின் தலா ஒரு உ‌‌று‌ப்‌பின‌ர் ஆகியோரும் ஆதரவு அளிக்க தயாராக உள்ளனர்.

மேலும் 7 சுயேச்சைகளும், நம்பிக்கை ஓட்டெடுப்பில், அரசுக்கு ஆதரவாக ஓட்டளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது. எனவே அரசுக்கு ஆதரவாக செயல்பட இருக்கும் உறு‌ப்‌பின‌ர்க‌ளி‌ன் எண்ணிக்கை 76 ஆகிறது.

ஓட்டெடுப்பில் வெற்றி பெற தேவையான எண்ணிக்கை 74. எனவே நம்பிக்கை ஓட்டெடுப்பில் ந‌‌வீ‌ன் பட்நாயக் அரசு வெற்றி பெற்று விடும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

இந்த நிலையில் பார‌திய ஜனதா கட்சியை சேர்ந்த ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் மகேஷ் சாகு, பா.. கவை விட்டு விலகி விட்டதாகவும், அரசுக்கு ஆதரவாக ஓட்டு போடப்போவதாகவும் அறிவித்து இருக்கிறார். அவர், பிஜு ஜனதா தளம் கட்சியில் சேரப்போவதாகவும் அறிவித்து இருக்கிறார் .
!!!!!!!!!!!!!!!!!!!!!
காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு மாற்றாக உருவாக்கப்பட்டுள்ள மூன்றாவது அணியின் துவக்க விழா பெங்களூருவில் நாளை நடைபெறுகிறது. அதிமுகவிற்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாக தேவகௌடா தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தெலுங்கு தேசம், மத சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து மூன்றாவது அணியை அமைத்துள்ளன . இதன் துவக்கவிழா, பெங்களூருவில் நாளை நடைபெறுகிறது. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த அணியில் பங்கேற்குமாறு அதிமுகவிற்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாக மதசார்பற்ற ஜனதா தளத் தலைவர் தேவகௌடா கூறியுள்ளார். மேலும் , தொலைபேசி மூலமும் அதிமுகவிற்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன . ஆனால், இந்த விழாவில் ஜெயலலிதா பங்கேற்கமாட்டார் என்று தெரிகிறது. எனினும், அதிமுக சார்பில் .பன்னீர்செல்வம் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பா...வுக்கு 9 இடம்toq;f; .தி.மு.. முடிவு vLj;Js;sjhf mjpKf tl;lhuq;fs; njuptpf;fpd;wd
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.. – காங்கிரஸ் கூட்டணி ஒரு அணியாகவும் , .தி.மு.., .தி.மு.., கம்யூ னிஸ்டு கட்சிகள் ஒரு அணியாகவும், பாரதீய ஜனதா தனி அணியாகவும் போட்டியிடுகின்றன.
கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு குறித்து இரு அணிகளும் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. எந்த அணியிலும் சேராமல் இருக்கும் பா..., தே.மு .தி.. ஆகிய கட்சிகளின் நிலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த கட்சிகள் எந்த அணியில் சேரலாம் என ஊசலாட்டத்தில் இருப்பதால் கூட்டணி மற்றும் தொகுதிப்பங்கீடு இறுதி செய்யப்படாமல் உள்ளது.
அனேகமாக தி.மு..- காங்கிரஸ் கூட்டணியில் தே.மு.தி.. சேரும் என்றும் அந்த கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளது என்றும் கூறப்படுகிறது.
இதனால் பா..., .தி.மு.. கூட்டணியில் சேருவது உறுதியாகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கம்யூனிஸ்டு தலைவர் நல்லகண்ணு கூறுகையில் , .தி.மு..- கம்யூனிஸ்டு கூட்டணியில் பா... சேரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பா.. .வுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது . கடந்த முறை தி.மு.. கூட்டணியில் பா...வுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தற்போது .தி.மு.. கூட்டணியில் 9 தொகுதிகள் ஒதுக்க முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதேபோல் .தி.மு.. கூட்டணியில் இடம் பெற்றுள்ள .தி.மு .., கம்யூனிஸ்டு கட்சிகள் ஏற்கனவே தங்கள் வென்ற தொகுதிகள் தவிர கூடுதலாக தொகுதிகள் கேட்கின்றன. தொடர்ந்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
!!!!!!!!!!!!!!!!!!!!
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் நடந்த போராட்டத்தின்போது நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கப்பட்ட மலைவாசிப் பெண் ஒருவர் அங்கு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாக தெரிவித்திருக்கிறார்.
லக்ஷ்மி ஒராயன் என்கிற அந்த பெண்மணி, அசாம் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியிடப்போவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவர் இன்னமும் தனது வேட்புமனுவை தாக்கல் செய்யவில்லை.
2007 ஆம் ஆண்டு அஸ்ஸாமின் தலைநகர் கவுஹாத்தியில் நடந்த ஒரு போராட்டத்தில் அவர் கலந்து கொண்டபோது, உள்ளூர்வாசிகளால் அவர் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கப்பட்டார்.
அஸ்ஸாமின் தேயிலைத் தோட்டங்களில் கூலிகளாக பணிபுரியும் ஆயிரக்கணக்கான மலைவாசிமக்களுக்கு கூடுதல் உரிமைகள் கோரி அந்த போராட்டம் நடத்தப்பட்டது.
!!!!!!!!!!!!!!!!!
world
!!!!!!!!!!!!!!!
mnkupf;fhtpd; myghkh efupy; ,de;njupahj Jg;ghf;fpjhup elj;jpa fz;Kbjdkhd Jg;ghf;fp Rl;by; Fiwe;jJ 9 NgH nfhy;yg;gl;Ls;sjhf mq;fpUe;J fpilf;Fk; nra;jpfs; njuptpf;fpd;wd.
!!!!!!!!!!!!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், அவரது சகோதர் ஷாபாஸ் ஷெரீப் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களை வீட்டுக் காவலில் வைக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.

முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பால் பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளை பணியில் அமர்த்த வேண்டும், தற்போதைய நீதிபதிகள் சிலரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பாகிஸ்தான் வழக்கறிஞர்கள் பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கு, நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) உட்பட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஊர்வலம் நடக்கும் போது அரசுக்கு எதிராக வன்முறை வெடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

வழக்கறிஞர்களின் பேரணியைத் தடுத்து நிறுத்தி சட்டம்ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் என்று பாகிஸ்தான் அரசுக்கு ராணுவம் கெடு விதித்திருந்தது.

இந்நிலையில் நவாஸ் ஷெரீப், அவரது சகோதரர் ஷாபாஸ் ஷெரீப், ஜமாத்இஸ்லாமி தலைவர் காஸி ஹுசைன் அகமது உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களை வீட்டுக் காவலில் வைக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.

இதேபோல், போராட்டத்தை முன்னின்று நடத்தவுள்ள வழக்கறிஞர்களைத் தேடி கைது செய்யும் நடவடிக்கையும் தொடங்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

லாகூரில் உள்ள ஜமாத்இஸ்லாமி இயக்கத் தலைவர்கள் , வழக்கறிஞர்களின் வீடுகளில் காவல்துறையினர் இன்று சோதனை மேற்கொண்டிருப்பதாகவும், பாகிஸ்தான் ஊடகங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் கூறுகின்றன
!!!!!!!!!!!!!!!!!!
மடகாஸ்கரில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியைத் தீர்க்க அந்நாட்டின் சிவிலியன் தலைவர்களுக்கு வரும் வெள்ளிக்கிழமை வரையிலான ஒரு காலக்கெடுவை அந்நாட்டின் இராணுவத்தின் தலைவர் வழங்கியுள்ளார்.
அடுத்த எழுபத்து இரண்டு மணி நேரத்தில் தீர்வு எட்டப்படவில்லை என்றால் தேசிய ஒற்றுமையைப் பாதுகாக்கும் வகையில் தேச விவகாரங்களை முன்னெடுக்கும் பொறுப்பை இராணுவம் ஏற்கும் என்று பிரிகேடியர் ஜெனரல் எட்மண்ட் ரசொலொமஹண்ட்ரி கூறினார்.
இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றும் என்பதுதான் அதன் அர்த்தமா என்று வினவப்பட்டபோது அப்படிக் கைப்பற்றாது என்று அவர் பதிலளித்தார்.
நூற்றுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ள இந்த நெருக்கடியைக் கையாண்ட விதத்தில் தான் தவறுகள் இழைத்துள்ளதை மடகாஸ்கர் அதிபர் மார்க் ரவாலோமனானா ஒப்புக்கொண்டிருந்தார்.
!!!!!!!!!!!!!
சீனாவின் பொருளாதார நிலைமைகள் குறித்து அந்நாட்டின் மூத்த அதிகாரிகள் மந்தமான மதிப்பீடுகளை வெளியிட்டிருக்கிறார்கள். நாட்டின் வேலைவாய்ப்பு நிலைமை மிக மோசமாக இருப்பதாக ஒரு மூத்த அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
மற்றவர்கள் ஏற்றுமதி மற்றும் தயாரிப்புத்துறைகளின் எதிர்காலம் குறித்து கவலைகளை வெளியிட்டுள்ளனர் . ஆயிரக்கணக்கான சீன உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டதைத் தொடர்ந்து மிகபெரும் எண்ணிக்கையிலான வேலையிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.
தேசிய மக்கள் காங்கிரஸின் ஆண்டுக் கூட்டத்தில் இந்த கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன . இதேசமயத்தில் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்கள் சீனா தற்போது பொருளாதார ரீதியில் கடும் வீழ்ச்சியை சந்திப்பதாக தெரிவிக்கும் செய்தியுடன் அமைச்சர்களின் கருத்துக்கள் ஒத்துப்போவதாக இருக்கின்றன.
கடந்த ஆண்டின் இதே மாதத்தில் இருந்த விலைகளோடு ஒப்பிடும்போது நுகர்வோர் விலைப்பட்டியல் சுமார் ஒன்று புள்ளி ஆறு சதவீதம் சரிவு ஏற்பட்டிருப்பதானது, உள்ளூர் நுகர்வின் அளவில் ஏற்பட்டிருக்கும் சரிவை காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.
!!!!!!!!!!!!!
இராக்கிலே பாக்தாத்தின் மேற்குப் பகுதியில் இராணுவ அதிகாரிகள் மற்றும் பழங்குடியினத் தலைவர்கள் இடையிலான ஒரு கூட்டத்தை இலக்குவைத்து தற்கொலை குண்டுதாரி ஒருவர் தாக்கியதில் குறைந்தபட்சம் 33 பேர் கொல்லப்பட்டும் நாற்பதுக்கும் அதிகமானோர் காயமடைந்தும் இருக்கின்றனர்.
அபு கிரெய்ப் வட்டகையில், இராணுவ அதிகாரிகளும் சமூகப் பெரியவர்களும் சந்தைப் பகுதியை சுற்றிப்பார்ப்பதற்காக நகர மன்றத்திலிருந்து வெளியே வந்தபோது குண்டுதாரி தாக்கியுள்ளார்.
தேசிய நல்லிணக்க முயற்சிகளின் ஓர் அங்கமாக அவர்களிடையே கூட்டம் நடந்தது.
அக்கூட்டம் பற்றி செய்தி சேகரிக்கச் சென்ற நிருபர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது .
இராக்கில் கடந்த சில நாட்களில் கிளர்ச்சிக்காரர்கள் நடத்தியுள்ள மூன்றாவது பெரிய தாக்குதல் இது.
!!!!!!!!!!!!!!!
திபெத்தை பூமியில் இருக்கும் நரகமாக சீனா மாற்றி விட்டது என திபெத்தின் ஆன்மீக குரு தலாய் லாமா அவர்கள் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
தாம் நாடுகடந்து வாழத் துவங்கியதன் 50 ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி அவர் நிகழ்த்திய உரையில் இந்த கடுமையான குற்றச்சாட்டினை அவர் முன்வைத்தார்.
திபெத்தை சீனா ஆக்கிரமித்ததன் மூலம் அந்த பகுதிக்கு துன்பத்தையும் அழிவையும் கொண்டு வந்ததாகவும், இதனால் பல்லாயிரக்கணக்கான திபெத்தியர்கள் இறந்ததாகவும் அவர் கூறினார்.
அர்த்தமுள்ள சுயாட்சி தேவை என்கிற தமது கோரிக்கையை அவர் மீண்டும் வலியுறுத்தினார் .
இதற்கு பதிலளிக்கும் விதமாக திபெத் பகுதியில் தான் ஏற்படுத்தியிருக்கும் பொருளாதார முன்னேற்றங்களை சீனா முதன்மைப்படுத்தியிருக்கிறது.
பொய்யான வதந்திகளை பரப்புவதாக தலாய் லாமா அவர்கள் மீது சீனா குற்றம் சாட்டியது.
இந்த 50ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வுகளை ஒட்டி திபெத்தை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருக்கின்றன.
!!!!!!!!!!!!!
sports
ஹேமில்டன் நக‌‌ரி‌ல் நட‌ந்து வரு‌ம் 4வது ஒரு நா‌ள் போ‌ட்டி‌யி‌ல் இ‌ந்‌திய அ‌ணி வெ‌ற்‌றி பெற 271 ர‌ன்களை ‌நியூ‌ஸீலாந‌்து அ‌ணி ‌நி‌ர்ண‌யி‌த்து‌ள்ளது.

பூவா தலையா வெ‌ன்று முத‌லி‌ல் பே‌ட்டி‌ங் செ‌ய்த ‌‌நியூ‌ஸீலா‌ந்து அ‌ணி 47 ஓவ‌ரி‌ல் 5 ‌வி‌க்கெ‌ட் இழ‌ப்பு‌க்கு 270 ர‌ன்க‌ள் எடு‌த்‌திரு‌ந்தது.

41.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்‌திரு‌ந்தபோது மழை குறு‌க்‌கி‌ட்டது. இதனா‌ல் 47 ஓவ‌ராக குறை‌க்க‌ப்‌ப‌ட்டது.

மழையா‌ல் ஆ‌ட்ட‌ம் தடைப‌ட்டதா‌‌ல் ட‌‌க்வொ‌ர்‌த் லூயீ‌ஸ் ‌வி‌தி‌‌ப்படி இ‌ந்‌திய அ‌ணி‌க்கு 271 ர‌ன்க‌ள் வெ‌ற்‌றி இல‌க்கான ‌நி‌ர்ண‌யி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

jw;nghOJ ,e;jpa mzp 19.2 Xtupy; tpf;Nfl; ,og;gpd;wp 169 Xl;lq;fSld; MLfsj;jpy; MbtUfpwJ
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Leave a Reply

Your email address will not be published.