நவாஸ் ஷெரீப்புக்கு வீட்டுக் காவல்: பாக். முடிவு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், அவரது சகோதர் ஷாபாஸ் ஷெரீப் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களை வீட்டுக் காவலில் வைக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.

முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பால் பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளை பணியில் அமர்த்த வேண்டும், தற்போதைய நீதிபதிகள் சிலரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பாகிஸ்தான் வழக்கறிஞர்கள் பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கு, நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) உட்பட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஊர்வலம் நடக்கும் போது அரசுக்கு எதிராக வன்முறை வெடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

வழக்கறிஞர்களின் பேரணியைத் தடுத்து நிறுத்தி சட்டம்- ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் என்று பாகிஸ்தான் அரசுக்கு ராணுவம் கெடு விதித்திருந்தது.

இந்நிலையில் நவாஸ் ஷெரீப், அவரது சகோதரர் ஷாபாஸ் ஷெரீப், ஜமாத்- இ- இஸ்லாமி தலைவர் காஸி ஹுசைன் அகமது உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களை வீட்டுக் காவலில் வைக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.

இதேபோல், போராட்டத்தை முன்னின்று நடத்தவுள்ள வழக்கறிஞர்களைத் தேடி கைது செய்யும் நடவடிக்கையும் தொடங்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

லாகூரில் உள்ள ஜமாத்- இ- இஸ்லாமி இயக்கத் தலைவர்கள், வழக்கறிஞர்களின் வீடுகளில் காவல்துறையினர் இன்று சோதனை மேற்கொண்டிருப்பதாகவும், பாகிஸ்தான் ஊடகங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் கூறுகின்றன.

Source & Thanks : tamil.webdunia.com

Leave a Reply

Your email address will not be published.