தே‌விபுர‌த்‌தி‌ல் பு‌லிக‌ள் கடு‌ம் தா‌க்குத‌ல் : 500 படை‌யின‌ர் ப‌லி

மு‌ல்லை‌த்‌தீ‌வி‌ல் ‌உள்ள தே‌விபுர‌த்‌தி‌ல் த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் நட‌த்‌திய ஊடறு‌ப்பு‌த் தா‌க்குத‌‌லி‌ல் 500‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட ‌சி‌றில‌ங்க‌ப் படை‌யின‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌‌ள்ளதுட‌ன், மேலு‌ம் 1,000‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்டோ‌ர் காயமடை‌ந்து‌ள்ளன‌ர்.

கட‌ந்த ஞா‌யி‌ற்று‌க்‌கிழமை ‘சாலை‌’க்கு‌த் தெ‌ற்கே அமை‌ந்து‌ள்ள தே‌விபுர‌த்‌தி‌ல் ஊடறு‌ப்பு‌த் தா‌க்குதலை நட‌த்‌திய த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிக‌ளி‌ன் ‌சிற‌ப்பு அ‌ணிக‌ள், ‌சி‌றில‌ங்க‌ப் படை‌யினரு‌க்கு பல‌த்த உ‌‌யி‌ரிழ‌ப்புகளை ஏ‌ற்படு‌த்‌தி உ‌ள்ளன எ‌ன்று‌ பு‌லிக‌ள் ஆதரவு இணைய‌த் தளமான ப‌திவு தெ‌ரி‌வி‌க்‌கிறது.

‌விடுதலை‌ப் பு‌லிக‌ளி‌‌ன் தா‌க்குத‌லி‌ல் 58ஆவது படை‌ப் ‌பி‌ரி‌வி‌ன் 3 க‌ம்பெ‌னிக‌ள் மு‌ற்‌றிலு‌ம் அ‌ழி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன. கட‌ந்த இர‌ண்டு நா‌ட்களாக நட‌‌‌ந்த ஊடறு‌ப்பு‌த் தா‌க்குத‌ல்க‌ளி‌ல் 500‌க்கு‌‌ம் மே‌ற்ப‌ட்ட படை‌யின‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன், 1,000‌க்கு‌‌ம் மே‌ற்ப‌ட்டோ‌ர் காயமடை‌ந்து‌ள்ளன‌ர்.

மேலு‌ம், இ‌ந்த‌த் தா‌க்குத‌ல்க‌ளி‌ல் ‌சி‌றில‌ங்க‌ப் படை‌யின‌ரி‌ன் படை‌க் கரு‌விகளை கை‌ப்ப‌ற்‌றியு‌ள்ள த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள், அ‌ந்த‌க் கரு‌விகளை‌க் கொ‌ண்டே படை‌யினரு‌க்கு எ‌திரான தா‌க்குத‌ல்களை நட‌த்‌தி‌வி‌ட்டு, கட‌ந்த ‌தி‌ங்க‌ட்‌கிழமை இரவு தள‌ம் ‌திரு‌ம்‌பியு‌ள்ளன.

Source & Thanks : tamil.webdunia.

Leave a Reply

Your email address will not be published.