கிளிநொச்சியில் விடுதலைப் புலிகள் பீரங்கி தளத்தை கைப்பற்றி தாக்குதல் நடத்தியுள்ளனர்: கொழும்பு இணையத்தளம்

சிறிலங்கா படையினரின் பல கிலோ மீற்றர் தூரம் வரை தமிழீழ விடுதலைப் புலிகள் ஊடுருவியுள்ளதுடன் கிளிநொச்சிக்கு அண்மையாக இருந்த படையினரின் பீரங்கி நிலைகளையும் கைப்பற்றி அதனைக்கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று கொழும்பு இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிறிலங்கா படையினர் இந்த வாரம் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளனர். படையினரின் 58 ஆவது டிவிசன் படையணியின் முன்னணி நிலைகளை தகர்த்தவாறு விடுதலைப் புலிகளின் 600 உறுப்பினர்கள் ஊடுருவியுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் இந்த பெருமெடுப்பிலான ஊடுருவல் காரணமாக ஏ-9 பாதையின் ஊடான படையினரின் போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களை மீள கைப்பற்ற முடியாத நிலையில் 58 ஆவது டிவிசன் படையணி உள்ளது.

படையினரின் பிரதேசத்திற்குள் 12 கிலோ மீற்றர் தூரம் வரை ஊடுருவிய விடுதலைப் புலிகளின் அணிகள் கிளிநொச்சிக்கு அண்மையாக இருந்த பீரங்கி தளத்தை கைப்பற்றியுள்ளனர். அங்கிருந்த 130 மி.மீ பீரங்கிகள் மூன்றை கைப்பற்றி அதனைக்கொண்டும் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை மட்டும் நடைபெற்ற மோதல்களில் 200 படையினர் களமுனைகளில் இருந்து அகற்றப்பட்டுள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.