பளை, முகமாலை, கிளாலி நோக்கி விடுதலைப் புலிகள் ஆட்டிலறித் தாக்குதல்

யாழ்ப்பாணம் பளை, முகமாலை மற்றும் கிளாலி, பகுதிகளில் ஏ 9 வீதியை இலக்கு வைத்து நீண்ட இடைவெளியின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆட்டிலறித் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

நேற்று திங்கட்கிழமை இரவு ஆரம்பித்த எறிகணைத் தாக்குதல்கள் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் வரை நீடித்ததாகவும், விடுதலைப் புலிகள் வீசிய எறிகணைகள் சிறீலங்கா படையினரது முகாம்களிலும், முகாம்களிற்கு அருகிலும் வீழ்ந்து வெடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் எறிகணை வீசியபோது சிறீலங்கா படையினரை ஏற்றிய 25 வரையிலான பேரூந்துகள் யாழ் குடாநாட்டிற்கு ஏ-9 பாதையூடாக அனுப்பி வைக்கப்பட்டிருப்பதால், விடுதலைப் புலிகளின் இலக்கு இந்தப் பேரூந்துகளாக இருக்கலாம் என படைத்தரப்பு எண்ணுகின்றது.

ஏனெனில் உணவுப் பொருள்கள் அடங்கிய 22 லொறிகள் நாவற்குழியைச் சென்றடைய முன்னர், படையினரை ஏற்றிய 25 பேரூந்துகளும் தென் பகுதியில் இருந்து தென்மராட்சியை வந்தடைந்ததாக தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் எறிகணைத் தாக்குதலைத் தொடர்ந்து கிளாலி, விடத்தல்பளை மற்றும் உசன் போன்ற பிரதேச மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்ட போதிலும், பொதுமக்கள் அருகாமையில் இல்லாத படையினரது முகாம்கள் அமைந்துள்ள பகுதிகளை நோக்கியே விடுதலைப் புலிகள் எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.