‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (10.03.09) செய்திகள்

posted in: செய்திகள் | 0

சிறிலங்காவின் தென்பகுதியில் உள்ள மாத்தறையில் இன்று காலை பாரிய குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் முக்கிய அமைச்சர்கள் இருவர் படுகாயமடைந்திருக்கும் அதேவேளையில் சுமார் பத்துப் பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 20-க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
மாத்தறை அக்குரசப் பகுதியில் இம்முறை மீலாதுன் நபிகள் விழா நடைபெற்ற பகுதியிலேயே இன்று செவ்வாய்க்கிழமை காலை குண்டுவெடிப்பு இடம்பெற்றதாக கூறப்படுகிறது. பெருந்தொகையான முஸ்லிம்களும் அமைச்சர்களும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் பல முக்கிய அமைச்சர்கள் கலந்து கொண்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முஸ்லிம் அமைச்சர்களான பெளசி, அமீர் அலி ஆகியோர் கலந்து கொண்ட போதிலும் அவர்கள் காயமடையவில்லை. அமைச்சர் மகிந்த விஜயசேகர படுகாயமடைந்துள்ளார் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது ஒரு தற்கொலைத் தாக்குதல் என சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இடம்பெயர் மக்களுக்கு சிகிச்சையளிக்கும் பொருட்டு இலங்கைக்கு வருகை தரும் இந்திய வைத்திய குழாமுடன் றோ உளவுப் பிரிவினரும் ஊடுறுவக் கூடிய அபாயம் காணப்படுவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லவில் அமைந்துள்ள கட்சித் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இறுதி மூச்சுக்காகப் போராடி வரும் தமிழீழ விடுதலைப் புலிப் பேராளிகளுக்கு ஆதரவளிக்க பல்வேறு சர்வதேச சக்திகள் முயற்சி மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார் .
பொதுமக்களை மீட்கும் பணியில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ள அமெரிக்க கடற்படையினரையும் இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதிக்கக் கூடாதென விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
!:!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கிழக்கு மாகணத்தில் 25 வருடங்களுக்கு மேலாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தற்போது ஆயுதங்களைக் களைந்து ஜனநாயக நீரோட்டத்தில் முழுமையாக ஈடுபடுவது, இம்மாகாணத்தில் இனங்களிடையே நல்லுறவையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்துவதற்குப் பலமாக அமையும் என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் அமைச்சர் எம்.எல்..எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவிக்கின்றார் .

நேற்று திங்கட்கிழமை ஏறாவூர் ரகுமானியா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆயுதங்களை முற்றாகக் களைந்திருப்பதை நினைவுபடுத்தியே இவ்வாறு தெரிவித்தார் . அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது :

“கடந்த ஆண்டு 34ஆவது தேசிய விளையாட்டுப் போட்டியில் கிழக்கு மாகாணம், வட மாகாணம் கலந்து கொள்ளாத நிலையில் 8ஆவது இடத்தைப் பெற்றிருந்தது. எதிர்வரும் மே மாதம் நடைபெறவிருக்கும் 35 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டியில் 7ஆவது இடத்தையாவது கிழக்கு மகாணம்பெற வேண்டும்என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வில்பத்து தேசிய வனப் பிரதேசத்தில் காவல்துறையினரும், விசேட அதிரடிப்படையினரும் நேற்று முதல் விசேட தேடுதல் வேட்டையொன்றை ஆரம்பித்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்டோர் இந்தப் பிரதேசத்துக்குள் ஊடுருவியுள்ளதாக கிடைத்த தகவல் ஒன்றினையடுத்தே இந்தத் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
உலக மகளிர் தின போர்வையில் ஆளும் கட்சியின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவரின் மனைவி ஒருவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
60 வயதுக்கு மேற்பட்ட 13 பெண் கைதிகளுக்கு இவ்வாறு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
படுகொலைச் சம்பவத்துடன் நேரடியாக தொடர்புபட்டார் என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதனால் தண்டனை அனுபவித்து வரும் சிரேஸ்ட அமைச்சர் ஒருவரின் மனைவியும் இந்த பொது மன்னிப்பின் மூலம் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு விடுதலை செய்யப்பட்ட அமைச்சரின் மனைவி ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
யுத்தம் இடம்பெற்றும் பிரதேசங்களில் சுதந்திரமான முறையில் செய்திகளை சேகரிக்க ஊடகங்களுக்கு பூரண அனுமதி அளிக்கப்பட வேண்டுமென இலங்கை அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் அனைத்துலக மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.
தற்போதைய கள நிலவரங்கள் பற்றிய உண்மைத் தன்மைகளை அறிந்து கொள்வதில் சிக்கல்கள் காணப்படுவதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
யுத்த நிலைமைகள் குறித்து அறிந்து கொள்வதும், தகவல்களையும் வெளியிடுவதும் ஜனநாயகத்தின் முக்கிய பண்புகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது மறைமுகமாக கட்டவிழ்த்து விடப்படும் சகல அடக்குமுறைகளும் கண்டிக்கப்பட வேண்டியதென அனைத்துலக மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது .
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானினால் மத்திய அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ள சில கோரிக்கைகள் தமிழீழ விடுதலைப் புலிகளின்
கோரிக்கைகளுக்கு நிகரானதென அமைச்சர்Uk; MAjjhupAkhd கருணா தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினர் கடந்த வாரம் தம்மிடமிருந்த ஆயுதங்களை அரசாங்கத்திடம் ஒப்படைத்திருப்பதைக் கொண்டு அவர்களிடம் வேறு ஆயுதங்கள் இல்லையென்ற முடிவுக்கு வரவும் முடியாதென MAjjhup கருணா குறிப்பிட்டுள்ளார்.
ஆயுத ஒப்படைப்பின் போது கைத்துப்பாக்கிகள் எதனையும் பிள்ளையான் தரப்பு ஒப்படைக்கவில்லை எனவும், கைத் துப்பாக்கிகளைக் கொண்டே கப்பம் கோரல்
மட்டும் கடத்தல் சம்பவங்களை பிள்ளையான் குழு கிழக்கில் அரங்கேற்றி வருவதாகMAjjhup கருணா குற்றம் சுமத்தியுள்ளார் .
மேலும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பிள்ளையான் தரப்பில் வெறும் நான்கு பேர் மட்டுமே எஞ்சப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பிள்ளையான் குழுவினரைப் போன்று தம்மிடம் எவ்வித ஆயுதங்களும் இல்லை எனவும், இதனால் ஆயுதக் களைவு குறித்து கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார் .
கிழக்கு மாகாணத்திற்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட்டால் அது பிரச்சினையை உருவாக்கும் எனவும், இதனால் சிங்கள சமூகத்துடன் பிணக்கு ஏற்படக்கூடும் எனவும் MAjjhupகருணா தெரிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மட்டக்களப்பு மாவட்டத்தில் சில பிரதேசங்களில் டெங்கு காய்ச்சல் அபாயம் இருப்பதாக சுகாதார சேவைகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பாலமுனை ,மற்றும் வாழைச்சேனை பகுதிகளில் ஒரு வகை வைரஸ் காய்ச்சல் அண்மைக்காலமாக பரவி வருகின்ற நிலையில் இது தொடர்பாக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் .

பாலமுனை பகுதியில் 73 பேர் டெங்கு வைரஸ் காய்ச்சலினால் பீடிக்கட்டிருப்பதாக இனங்காணப்பட்டுள்ளனர் .

இவர்களில் ஒரு சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்புகள் டெங்கு காய்ச்சல் காரணமாகவே ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலைகள், தனியார் கல்விக்கூடங்கள் மற்றும் ஏனைய கல்விசார் அமைப்புகளின் கட்டடங்களின் வரைபடங்களை தம்மிடம் கையளிக்குமாறு சிறீலங்கா படையினர் கோரி வருகின்றனர்.
குறிப்பாக அண்மையில் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள், அவற்றினை நிர்மாணித்துள்ள ஒப்பந்தக்காரர் ஆகியோரின் விபரங்கள் என்பனவற்றினை சிறீலங்கா படையினர் திரட்டிச் செல்கின்றனர்
இருப்பினும் எக்காரணத்ததுக்காக இவ்வாறு தகவல்களை சிறீலங்கா படையினர் சேகரிக்கின்றார்கள் எனத்தெரியாது கல்விச்சாலை முதல்வர்கள் மற்றும் கட்டிட ஒப்பந்தக்காரர்கள் கடும் அச்சத்தில் உள்ளதாக பதிவின் யாழ் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
கடந்த சில நாட்களாக யாழ்ப்பாணத்தில் கல்விச்சாலைகள், ஆலயங்கள் மற்றும் பொது இடங்கள் என்பன சிறீலங்கா படையினரின் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படிருந்தன.
இந்த நிலையில் இவ்வரைபடங்களை சிறீலங்கா படையினர் கோரியிருப்பது மாணவர்கள், பெற்றோர் , மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் மேலும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
சிறீலங்கா அரசும் படைகளும் யாழ் கல்விச் சமூகத்திற்கு தொடர் அச்சுறுத்தில் விடுப்பதன்மூலம் யாழ் மாணவர்களின் கல்வியை நீண்ட நோக்கத்தில் சிதைக்க எண்ணியிருப்பதாக கவலை வெளியிடப்பட்டுள்ளத
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கையில் அமைதியை நிலைநாட்டி, அபிவிருத்தியை மேற்கொள்ளவும், பயங்கரவாதத்தை ஒழிக்கவும் தமது அரசு உதவி செய்யும் என, வியட்னாம் அரசாங்கம் சிறீலங்கா அரசுக்கு உறுதிமொழி வழங்கியுள்ளது.
வன்னியில் வல்வளைப்புத் தாக்குதலை நடத்திவரும் சிறீலங்கா அரசின் அமைச்சர்கள் நாளாந்தம் ஒவ்வொரு நாடுகளுக்கும் பெரும் செலவில் பயணம் மேற்கொண்டு, தமது அரசுக்கு உதவி செய்யுமாறு உலக நாடுகளிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இவ்வாறு வியட்னாம் சென்றுள்ள சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் றோஹித போகொல்லாக , அந்த நாட்டின் பிரதமர் நிகுயென் ரன் டுங்கை (Nguyen Tan Dung) சந்தித்துப் பேச்சு நடத்தியபோது இந்த உறுதிமொழி வழங்கப்பட்டது.
இதன்போது கருத்துரைத்த போகொல்லாகம, ஐக்கிய நாடுகள் சபையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தமது அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு வழங்கியமைக்கு வியட்னாமிற்கு நன்றி தெரிவித்ததுடன், வியட்னாம் பிரதமரை தமது நாட்டிற்குப் பயணம் செய்யுமாறும் அழைப்பு விடுத்தார்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் சிறீலங்கா அரசுக்கு எதிரான பிரேரணை, மற்றும் விவாதத்திற்கு பெப்ரவரி மாத ஆரம்பத்தில் பிறேசில் அழைப்பு விடுத்திருந்த போதிலும் , ரஸ்யா, யப்பான், வியட்னாம் போன்ற நாடுகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தன .
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளித்து வருவதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் அமைப்பு தொடர்பாக விசாரணை நடத்துவது குறித்து கம்போடிய அரசாங்கம் பரிசீலனை செய்துவருவதாக அந்நாட்டு ஊடகமொன்று நேற்று திங்கட்கிழமை தெரிவித்திருக்கிறது.
இது தொடர்பாக கம்போடிய வெளிவிவகார அமைச்சு உள்துறை அமைச்சர் சார் கெங்கிற்கு கடிதமொன்றை அனுப்பியிருப்பதாக கம்போடியா தினசரி தெரிவித்துள்ளது.
அமெரிக்காவை தளமாக கொண்ட தமிழ் மன்றமொன்று கம்போடியாவில் இயங்குவதாக அமெரிக்கத் தூதரகத்திடமிருந்து கடிதமொன்று வெளிவிவகார அமைச்சுக்கு கிடைத்துள்ளது. பெப்ரவரி 26 ஆம் திகதியிடப்பட்ட கடிதமென பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
“இந்த அமைப்பு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கவும்’ என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், தமிழ்மன்றமொன்று கம்போடியாவில் இயங்குகின்றதா என்பது பற்றிய விபரம் அதில் தெரிவிக்கப்படவில்லை.
2007 ஜூலையில் சர்வதேச பாதுகாப்பு விவகாரங்களை வெளியிடும் சஞ்சிகையான “ஜேன்ஸ் இன்ரலிஜன்ஸ் ரிவியூ’ வெளியிட்ட தகவலில் புலிகளுக்கு ஆயுதங்களை பெற்றுக்கொள்ளும் குறிப்பிடத்தக்க இடமாக கம்போடியா விளங்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பெற்றுக்கொள்ளும் வட்டாரங்கள் தொடர்பாக குறிப்பிட்டிருக்கவில்லை. அதனை அச்சமயம் கம்போடிய அரசாங்கம் மறுத்திருந்தத
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வன்னியில் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட பகுதியில் நேற்று திங்கட்கிழமை மேலுமொரு பொலிஸ் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. வன்னியில் ஐந்தாவது பொலிஸ் நிலையமாக முழங்காவில் பகுதியில் நேற்றுக்காலை இந்தப் பொலிஸ் நிலையம் திறக்கப்பட்டது.
கடந்த வருடம் சிலாவத்துறை, மடுக்கோயில், விடத்தல்தீவு மற்றும் இலுப்பைக் கடவை பகுதியில் நான்கு பொலிஸ் நிலையங்கள் திறக்கப்பட்ட நிலையில், நேற்று முழங்காவில் பகுதியில் இந்த பொலிஸ் நிலையம் திறக்கப்பட்டது.
இந்தத் திறப்பு விழாவில் கொழும்பு பொலிஸ் தலைமையகத்தைச் சேர்ந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர்களான மகிந்த பால சூரிய, கிங்ஸ்லி ஏக்கநாயக்க, வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க, மன்னார் பொலிஸ் அத்தியட்சர் வசந்த விக்கிரமசிங்க, உதவிப் பொலிஸ் அத்தியட்சர் லாபிரான் ஹசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதேவேளை, விரைவில் நாச்சிக்குடா மற்றும் பூநகரியிலும் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நான்கு கொலைகளைப் புரிந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு எதிரிக்கு நான்கு மரணதண்டனைகள் விதிக்கப்பட்டன. நான்கு மரணதண்டனைகளையும் நான்கு ஆயுள் தண்டனைகளாக மாற்றும்படி ஜனாதிபதிக்கு சிபார்சு செய்யப்பட்டுள்ளது.
திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் நேற்று திங்கட்கிழமை இத் தீர்ப்பை வழங்கினார். “கௌரவ நீதிபதியவர்களே, இதுவரை நீங்கள் தூக்குத்தண்டனை விதித்துள்ளீர்கள். இதுவரையில் ஒருவரையும் தூக்கிலிட்டுக் கொல்லவில்லை. என்னைத் தூக்கிலிட்டுக் கொல்லுமாறு உத்தரவிடும்படி தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்என்று முன்னாள் இராணுவச் சிப்பாயான எதிரி சனத் பிரேமரத்ன மரணதண்டனை விதிக்கப்படுவதற்கு முன்பாக ஏதாவது சொல்லவிருக்கிறதா என்று நீதிபதி வினவியபோது கூறினார்.
35 வயதான எதிரி மீது நான்கு கொலைகளைப் புரிந்ததாகவும் இருவரைக் கொலை செய்ய எத்தனித்ததாகவும் தனித்தனி இரண்டு வழக்குகளில் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.
முதலாவது வழக்கில் இராணுவக் கோப்ரல் விமல் விஜவீர, லான்ஸ் கோப்ரல் நியூட்டன் சில்வா ஆகியோரை சுட்டுக் கொலை செய்ததாகவும் இன்னொரு இராணுவக் கோப்ரல் ஜயசிங்காவை கொல்ல முயற்சித்ததாகவும் எதிரி மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இச்சம்பவம் 08.05.93 இரவு கோமரங்கடவல இராணுவ முகாமில் இடம்பெற்றது. அப்போது எதிரி இராணுவச் சிப்பாயாக கடமையாற்றி வந்தார் .
இரண்டாவது வழக்கில் 19.10.1999 அன்று இரவு கோமரங்கடவல கிராமவாசிகளான ..காமினி (35 வயது), அவரது 4 வயது மகன் இசுறு ஆகியோரைச் சுட்டுக் கொலை செய்ததாகவும் காமினியின் மனைவி சுசிலா ரத்னமாலாவை கொலை செய்ய முயற்சித்ததாகவும் எதிரி மீது குற்றஞ் சுமத்தப்பட்டிருந்தது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
india
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட ஜப்பான் அரசு உதவி செய்ய வேண்டும் என்று சென்னையில் உள்ள ஜப்பான் துணைதூதரிடம் இலங்கை தமிழர்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் நேரில் கோரிக்கை மனு அளித்தனர்.
இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் ஏற்படவும், இந்தியா அளித்து வரும் இராணுவ உதவி உள்ளிட்ட அனைத்துவிதமான உதவிகளையும் நிறுத்த வலியுறுத்தியும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
மேலும், இந்த பிரச்சினையில் உலக நாடுகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்கும் வகையில் சென்னையில் உள்ள அமெரிக்க தூதர், இங்கிலாந்து துணை உயர்ஸ்தானிகர் ஆகியோரையும் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
இந்த நிலையில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க தலைவர்கள் பழ.நெடுமாறன் , வைகோ, டாக்டர் ராமதாஸ் ஆகியோர் சென்னையில் உள்ள ஜப்பான் துணைதூதர் கசுவோ மினோகேவாவை நேற்று சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். பா... தலைவர் ஜி.கே.மணி, இந்திய கம்யூனிஸ்டு மாநில துணைச் செயலாளர் மகேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னிய அரசு ஆகியோரும் அவர்களுடன் சென்றிருந்தனர் .

அவர்கள் இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து ஜப்பான் துணைதூதரிடம் அரை மணி நேரத்திற்கு மேலாக விவாதித்தனர். சந்திப்பு முடிந்த வெளியே வந்த பின்னர்பா. .. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
இலங்கைக்கு ஜப்பான் அதிக நிதியுதவி செய்து வருகிறது. அந்த நிதியைக்கொண்டு பாகிஸ்தான் , சீனா போன்ற நாடுகளில் இருந்து ஆயுதங்களை வாங்கி தமிழர்களை படுகொலை செய்து வருகிறது.
இலங்கையில் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட ஜப்பான், ஆர்வமாக உள்ள போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்ற 10 கோடி தமிழர்களின் வேண்டுகோளை ஜப்பான் துணைதூதரிடம் தெரிவித்தோம் . தமிழர் கலாசாரம், தமிழர் பண்பாடு, தமிழர் வரலாறு குறித்து அவர் நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்.
இலங்கைக்கு ஜப்பான் அளித்து வரும் உதவிகளை நிறுத்தாவிட்டால் உலகம் முழுவதும் வாழும் 10 கோடி தமிழர்கள் ஜப்பான் நாட்டின் ஆட்டோமொபைல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை புறக்கணிக்கும் ஒரு கருத்தையும் அதனால் ஜப்பானுக்கு ஏற்படும் வர்த்தக இழப்புகளை புள்ளி விவரங்களுடன் விளக்கினோம். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மும்பைத் தாக்குதல் சம்பவம், இலங்கைப் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து அமெரிக்க அயலுறவு அமைச்சர் ஹிலாரியுடன், இந்திய அயலுறவுத்துறை செயலர் சிவசங்கர் மேனன் ஆலோசனை நடத்தினார்.

நான்கு நாள் அரசு முறைப் பயணமாக இந்திய அயலுறவுத்துறை செயலர் சிவசங்கர் மேனன் அமெரிக்கா சென்றுள்ளார்.

தலைநகர் வாஷிங்டன்னில் அந்நாட்டு அயலுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனைச் சந்தித்தார். அப்போது பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள், ஆப்கானிஸ்தான்பாகிஸ்தான் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிராந்திய விவகாரங்கள் விவாதிக்கப்பட்டதாக, வெள்ளைக் மாளிகை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

ஹிலாரிமேனன் சந்திப்பு சுமார் அரை மணி நேரம் வரை நீடித்ததாகவும் மும்பைத் தாக்குதல் சம்பவம் குறித்தும் இலங்கையில் நடைபெற்று வரும் படுகொலைகள் குறித்தும் இரு தலைவர்களும் முக்கிய ஆலோசனை நடத்தியதாகவும், வெள்ளை மாளிகை செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.

எனினும், இலங்கையில் போர் முனையில் சிக்கியுள்ள அப்பாவி மக்களை மீட்க அமெரிக்க ராணுவ உதவியை நாடுவது குறித்து விவாதிக்கப்படவில்லை என்று இந்திய அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்து கருத்து எதையும் தெரிவிக்கவும் இந்திய அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

முன்னதாக அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான இணையமைச்சர் வில்லையம்ஸ் பர்ன்ஸை சந்தித்துப் பேசினார். இதேபோல் ஆப்கானிஸ்தான்பாகிஸ்தான் நாடுகளுக்கான அதிபரின் சிறப்புத் தூதர் ரிச்சர்ட் சி ஹால்புரூக்கையும் சந்திக்கிறார்.

அதிபராக பராக் ஒபாமா பதவியேற்ற பின் அமெரிக்காவில் அந்நாட்டு உயரதிகாரிகளை சிவசங்கர் மேனன் சந்தித்திருப்பது இதுவே முதல்முறையாகும்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வழ‌க்க‌றிஞ‌ர்களு‌க்கு‌ம், காவல‌ர்களு‌க்கு‌ம் ஏ‌ற்ப‌ட்ட மோதல் தொடர்பாக காவ‌ல்துறை அதிகாரிகள் 15 பே‌ர் மீது ‌‌நீ‌திம‌ன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் சங்கம் சென்னை உய‌ர்நீ‌திம‌ன்ற‌த்த‌ில் மனுதாக்கல் செய்துள்ளது.

செ‌ன்னை உய‌ர்நீ‌திம‌ன்ற வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் சங்க தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் உயர் நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த மனுவில், கடந்த 19ஆம் தேதி உயர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த மோதல் தொடர்பாக வழ‌க்க‌றிஞ‌ர்கள் மீது 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன . ஆனால் காவ‌ல்துறை‌யின‌ர் மீது ஒரு வழக்குகூட பதிவு செய்யப்படவில்லை. இது பாரபட்சமானது .

சம்பவத்தில் படுகாயமடைந்த நீதிபதிகள், வழ‌க்க‌றிஞ‌ர்களுக்கு நஷ்டஈடு வழங்கவும், நீதிமன்ற சொத்துக்கள் சேதமடைந்ததற்கும் 2 கோடி ரூபாயை டெபாசிட் செய்யுமாறு த‌மிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

நீதிமன்றத்திற்குள் அத்துமீறிய காவ‌ல‌ர்க‌ள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலைமை செயலர் ஸ்ரீபதி, உள்துறை செயலர் மாலதி, த‌‌மிழக காவ‌ல்துறை தலைமை இய‌க்குன‌ர் கே .‌பி.ஜெயின், செ‌ன்னை மாநகர கா‌வ‌ல்துறை ஆணைய‌ர் ராதாகிருஷ்ணன் உள்பட 20 பேர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எ‌ன்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் சங்கம் சார்பில் ஆஜரான சீனியர் வழ‌க்க‌றிஞ‌ர் டி.வி.ராமானுஜன், ஏற்கனவே கடந்த மாதம் 19ஆ‌‌ம் தேதி நடந்த சம்பவம் தொடர்பாக உய‌ர்நீ‌திம‌ன்றமே முன்வந்து விசாரித்த பொதுநல வழக்கு வரும் 11ஆ‌ம் தேதி விசாரணைக்கு வருகிறது என்று தெரிவித்தார். இதற்கு தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் பழைய வழக்கோடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

இந்த வழக்கை விசாரிக்க இருக்கும் நீதிபதிகளில் ஒருவர் (முகோபாத்தியா) உடல்நலக் குறைவால் இருப்பதால் , அவர் 11ஆ‌‌ம் தேதி வருவாரா? என்பது தெரியவில்லை என்றும், அன்றையதினம் வராவிட்டால் வழக்கு விசாரணை தாமதமாகும் என்பதால் இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று டி.வி.ராமானுஜன் வற்புறுத்தி வாதாடினார். மேலும், நீதித்துறை மீதும் , கண்ணியத்தின் மீதும் தாக்குதல் நடந்துள்ளது என்றும் அவர் வாதாடுகையில் குறிப்பிட்டார் .

இதைக்கேட்ட தலைமை நீதிபதி கூறுகை‌யி‌ல், எங்களுக்கும் அக்கறை உண்டு. ஏன் திரும்ப , திரும்ப தாக்குதல் என்று கூறுகிறீர்கள். நீதிபதி 11ஆ‌ம் தேதி வரமாட்டார் என்று கற்பனை செய்து கொண்டு இப்போது கேட்க முடியாது. அவர் அன்றையதினம் வராவிட்டால் , நிர்வாக ரீதியாக உத்தரவு பிறப்பிக்கப்படும். இந்த வழக்கும் முக்கியம்தான். அதேபோல மற்ற வழக்குகளும் முக்கியம்தான் எ‌ன்று குறிப்பிட்டார்.

இதன்பிறகு வழ‌க்க‌‌றிஞ‌ர் ராமானுஜன் வாதாடுகையில், ‘ஸ்ரீகிருஷ்ணா, இந்த வழக்கில் சம்பந்தமில்லாதவற்றை விசாரித்துள்ளார் என்றும், இது நியாயமான அறிக்கை இல்லைஎன்றும் தெரிவித்தார். எங்களிடம் நிறைய ஆதாரங்கள் உள்ளது என்றும், அவற்றைநீ‌திம‌ன்ற‌த்‌தில் தாக்கல் செய்கிறோம் என்றும் தெரிவித்தார் .

இதை கேட்ட தலைமை நீதிபதி ஆவணங்களை தாக்கல் செய்யுங்கள். 11ஆ‌ம் தேதி பார்க்கலாம் என்று தலைமை நீதிபதி தெரிவிக்கவே, கூடியிருந்த வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் அனைவரும் கலைந்து சென்றனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நியூயார்க்கில் ஏலத்தில் எடுத்த மகாத்மா காந்தியின் உடைமைகள் அனைத்தையும், டெல்லி உட்பட அனைத்து மாநில தலைநகரங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் என்று விஜய் மல்லையாவிற்கு, தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று கேட்டுக் கொண்டுள்ளது.

மத்திய அரசிடம் அந்த உடைமைகளை ஒப்படைக்கும் முன் மல்லையா அவற்றை காட்சிக்கு வைக்குமாறு அந்நிறுவனம் கோரியுள்ளது.

யு.பி. குழும தலைவரான மல்லையாவிற்கு `திகன்டாஎனும் என்ஜிஓ அனுப்பியுள்ள கடிதத்தில், தேசத்தந்தையின் உடைமைகளை நாட்டு மக்கள் பார்ப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்றும், மாநில தலைநகரங்களில் ஓரிரு நாட்கள் அவற்றை காட்சிக்கு வைக்கலாம் என்றும் கூறியுள்ளது.

மகாத்மா காந்தி பயன்படுத்திய தண்ணீர் குவளை, கைக்கெடிகாரம், தட்டு, ஒரு கிண்ணம் ஆகியவற்றை அமெரிக்காவைச் சேர்ந்த ஜேம்ஸ் ஓடிஸ் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன் ஏலம் விட்டார். அவற்றை இந்தியாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா 1.8 மில்லியன் டாலருக்கு ஏலம் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தஞ்சாவூர் அருகே கோயிலில் சேவைப் பணி செய்ய வந்த தலித் மாணவிகளை கோயிலில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம், ஒக்காடு மேலையூர் கிராமத்தில் திருவிளங்கி, ஈசுவரர் திருக்கோவில் உள்ளது . இந்த கோயிலில் தூய்மைப்பணி மேற்கொள்ள, ஒரத்தநாடு பாரதிதாசன் மகளிர் கல்லூரி மாணவிகள் சென்றுள்ளனர்.

அவர்கள் கோயிலில் தூய்மைப் பணி செய்து கொண்டிருந்தபோது , அங்கு வந்த சிலர் தாழ்த்தப்பட்ட மாணவிகள் கோயிலுக்குள் இருக்க அனுமதி இல்லை . எனவே, தாழ்த்தப்பட்ட மாணவிகள் வெளியேறி விடுங்கள் என்றும், உங்களால் கோவிலின் புனிதம் கெட்டு விடும் என்று கூறி அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளரிடம் புகார் சொல்லி அழுதுள்ளனர்.

கோவிலுக்கு தூய்மைப்பணி செய்ய வந்த மாணவிகளை, சாதியைச் சொல்லி இழிவுபடுத்தி கொடுமை செய்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

world
!!!!!!!!!!!!!!!!!!!
ஈரானில் இருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்கு குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தில் இருந்து இந்தியா விலகினாலும், திட்டம் கண்டிப்பாக நிறைவேறும் என்று பாகிஸ்தான் அதிபர் சர்தாரி தெரிவித்துள்ளார்.

7.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் 2600 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த திட்டம் அமைய உள்ளது. இதனை நிறைவேற்றுவது தொடர்பாக, கடந்த 1994ஆம் ஆண்டு மூன்று நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால், பல்வேறு பிரச்னைகள் காரணமாக, இதனை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், இந்தத் திட்டத்தில் இருந்து விலகிக்கொள்வதாக இந்தியா அறிவித்துள்ளது . இதுதொடர்பாக ஈரான் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த சர்தாரி, இந்தியா பின்வாங்கினாலும் , ஈரானுடன் இணைந்து தடையில்லாமல் இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்று கூறினார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தை வரும் 16ம் தேதிக்குள் சீர்செய்ய வேண்டும் என அந் நாட்டு அதிபர் சர்தாரிக்கு ராணுவத் தளபதி கியானி திடீர் `கெடுவிதித்துள்ளார். இதனால் அங்கு மீண்டும் ராணுவமே ஆட்சியைக் கைப்பற்றும் நிலை உருவாகியுள்ளது .

கியானி, பாகிஸ்தான் ராணுவ உளவுத்துறையான ஐஎஸ்ஐயின் முன்னாள் தலைவர் என்பதும் , தீவிரமான முஷாரப் ஆதரவாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் முஷாரப் அதிபர் பதவியிலிருந்து விரட்டப்பட்டு நடத்தப்பட்ட தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் , நவாஸ் ஷெரீப்பின் முஸ்லிம் லீக் மற்றும் பெனாசிர்சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவை இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வருகின்றன.

அதிபராக சர்தாரியும் பிரதமராக அவரது கட்சியைச் சேர்ந்த யூசுப் ராசா கிலானியும் உள்ளனர். ஆனால் , ஆட்சி அமைந்தவுடனேயே நவாஸ்சர்தாரி இடையே மோதல் மூண்டுவிட்டது.

இந் நிலையில் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது சகோதரர் ஷாபாஸ் ஆகியோர் தேர்தலில் போட்டியிட அந் நாட்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதன் பின்னணியில் சர்தாரி இருப்பதாக நவாஸ் குற்றம் சாட்டிய நிலையில் பஞ்சாபில் முதல்வராக இருந்த அவரது தம்பி ஷாபாசின் ஆட்சி கலைக்கப்பட்டு அங்கு ஜனாதிபதி ஆட்சி அமலானது.

இதை எதிர்த்து நவாஸ் ஷெரிப் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் . முஷாரப் நியமித்த நீதிபதிகளை நீக்கிவிட்டு புதிய நீதிபதிகளை நியமி்க்கக் கோரி வரும் 16ம் தேதி நவாஸ் ஆதரவு வக்கீல்கள் மாபெரும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடையே ஆப்கானி்ஸ்தானை ஒட்டிய பாகிஸ்தானின் வட மேற்கு எல்லைப்புற மாகாணங்களில் தலீபான்களின் அதிகாரம் வேகமாக பரவி வருகிறது.

அங்கு அவர்களுடன் ஒரு அமைதி ஒப்பந்ததிலும் சர்தாரி அரசு கையெழுத்திட்டது. இதன்படி வடமேற்கு எல்லையில் உள்ள ஸ்வாட் மாகாணத்தில் தலிபான்களின் வசம் ஆட்சி கைமாறியுள்ளது.

இதை இந்தியா , அமெரிக்கா உள்பட உலக நாடுகள் முழுவதும் கவலையோடு பார்த்துக் கொண்டுள்ள நிலையில் சமீபத்தில், அமெரிக்கா சென்றார் பாகிஸ்தான் ராணுவ தளபதி பர்வேஷ் கியானி.

அப்போது பாகிஸ்தானின் தலிபான் ஆதிக்கத்தை ஒடுக்கவும், அரசியல் குழப்பத்தை சீர் செய்யவும் உதவுமாறு அவருக்கு அமெரிக்கா சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்ததாகத் தெரிகிறது .

இதையடுத்து நாடு திரும்பிய கியானி, ராணுவ உயர் அதிகாரிகளுடன் கடந்த 6ம் தேதி அன்று ஆலோசனை நடத்தினார். அப்போது பாகிஸ்தானில் நிலவும் அரசியல் குழப்பம் , தலிபான்கள் ஆதிக்கம் ஆகியவை குறித்து அமெரிக்கா தெரிவித்த கவலை குறித்து பேசப்பட்டது .

இந் நிலையில், பாகிஸ்தானில் சட்டம்ஒழுங்கை நிலை நாட்டுமாறு அதிபர் சர்தாரிக்கு தளபதி கியானி நேற்று திடீரென உத்தரவிட்டுள்ளார்.

வரும் 16ம் தேதி நவாஸ் ஆதரவாளர்கள் நடத்தும் போராட்டத்தை தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார் . இதனால் நவாசுடன் சமாதானமாக செல்ல வேண்டிய நிலைக்கு சர்தாரி தள்ளப்பட்டுள்ளார்.

நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர சர்தாரி தவறினால் அங்கு ஆட்சியை ராணுவம் கைப்பற்றும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
அதே சமயம், ராணுவத்துடன் பிரதமர் யூசுப் ராசா கிலானி நெருக்கம் காட்டி வருகிறார். இதனால் அவரை வைத்து சர்தாரி அரசை கியானி கவி்ழ்க்கலாம் என்ற கருத்தும் பரவியுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மனித கருவில்குருத்தணு (stemcell) பரிசோதனைகள் செய்வதற்கு அமெரிக்க அரசு விதித்திருக்கும் தடையை முடிவுக்குக் கொண்டுவருவது பற்றிய ஒரு அறிவிப்பை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வெளியிட்டுள்ளார்.
மனிதக் கருக்களை இத்தகைய பரிசோதனைகளில் பயன்படுத்துவது, தார்மீக அடிப்படையில் தவறானது என்று எழுப்பப்பட்ட விமர்சனங்களுக்கு ஓரளவு முகம் கொடுக்கும் வகையில், அதிபர் ஜார்ஜ் புஷ்ஷால் 2001ல் இந்தத் தடை விதிக்கப்பட்டது.
அல்ஸெய்மர்ஸ் , பார்க்கின்ஸன்ஸ், மற்றும் நீரிழிவு போன்ற நோய்களுக்கு சிகிச்சை வழங்குவதில் புதிய முன்னேற்றத்துக்கு அதிபர் ஒபாமாவின் இந்த நடவடிக்கை இட்டுச்செல்லும் என்று நம்பப்படுகிறது.
!!!!!!!!!!!!!!!!
மேலை நாட்டு பாணியிலான ஜனநாயகத்தை சீனா ஒருக்காலும் ஏற்றுக்கொள்ளாது என சீன நாடாளுமன்றத்தின் தலைவர் வூ பங்குவோ கூறியுள்ளார்.
பல கட்சிகள் மாறி மாறி சுழற்சி முறையில் ஆட்சி அதிகாரத்தில் பங்குவகிக்கும் ஒரு அமைப்பை சீனா ஒருக்காலும் அறிமுகப்படுத்தாது என்று, சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸ் எனப்படும் நாடாளுமன்றத்தின் வருடாந்திரக் கூட்டத்தில் உரையாற்றுகையில், வூ கூறினார் .
கம்யுனிஸ்ட் கட்சி அதிகார வரிசையில், அதிபர் ஹூ ஜிண்டாவுக்கு அடுத்தபடியான இரண்டாவது இடத்தை வூ வகிக்கிறார்.
கம்யூனிசக் கட்சியின் தலைமை பலப்படுத்தப்பட வேண்டுமே தவிர, அதை எந்த வகையிலும் பலவீனமாக்கக்கூடாது என்று அவர் கூறினார்.
சீனாவிலும் வெளிநாடுகளிலும், சீன அமைப்பு மேலும் தளர்த்தப்படவேண்டும் என்று வரும் கோரிக்கைகளை வேண்டுமென்றே நிராகரிப்பதுபோல் வூ அவர்களின் இந்த அறிக்கை தோன்றுவதாக செய்தியாளர்கள் கூறுகிறார்கள
!!!!!!!!!!!!!!!!!!!!
ஆப்கானிஸ்தானின் தெற்கிலே கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக நடத்தப்பட்டுவரும் மோதல்களில் அமெரிக்க மற்றும் நேட்டோ கூட்டணிப் படைகள் வெற்றிபெற்றுவரவில்லை என்று அப்படைகளுடைய தளபதி கூறியுள்ளார்.
உள்ளூர் மக்களின் ஆதரவை தாம் வென்றெடுப்பதில் உதவக்கூடிய தொடர்ச்சியான பாதுகாப்பினை தம்மால் வழங்க முடியாது இருப்பதே இந்தத் தோல்வியின் காரணம் என்று ஜெனரல் டேவிட் மெக்கியர்னன் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கு கூடுதலாக அனுப்பப்படவுள்ள 17 ஆயிரம் அமெரிக்கத் துருப்பினரில் பெரும்பான்மையானோர் நாட்டின் தென்பகுதியிலேயே பணியமர்த்தப்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
கூடுதல் படையினர் வருவதன் விளைவாக தெற்கு ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு சூழல் இந்த ஆண்டுக் கடைசியிலிருந்து மேம்படத் துவங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!
அமெரிக்க போர் கப்பலானயு.எஸ்.என்.எஸ். இம்பீசபில்” சீனாவின் ஹைனான் தீவு அருகே சென்று கொண்டிருந்தது. சீன கடல் எல்லையில் இருந்து 120 கிலோ மீட்டர் தூரத்தில் அது சென்றது. அப்போது சீனாவின் போர் கப்பல் ஒன்றும் மற்றும் 4 கப்பல்களும் சேர்ந்து அந்த கப்பலை இடைமறித்தன. கப்பல் அங்கிருந்து சென்று விடாமல் தடுக்க மரக்கட்டைகளை கடலில் போட்டனர். இதனால் கப்பல் அங்கிருந்து செல்ல முடியவில்லை. 5 கப்பல்களும் அதை சுற்றி நின்று கொண்டன.
அமெரிக்க கப்பல் அத்துமீறி நுழைந்ததாக கூறி சீனா இந்த நடவடிக்கை எடுத்து உள்ளது. ஆனால் இதுபற்றி முழுமையான தகவல் எதையும் சீனா வெளியிடவில்லை.
ஆனால் சீனா சர்வதேச விதிமுறைகளை மீறி எங்கள் போர் கப்பலை முற்றுகையிட்டு இருக்கிறது என்று அமெரிக்கா கூறியுள்ளது. சர்வதேச கடல் எல்லையில் செல்லும கப்பலை தடுக்கும் அதிகாரம் சீனாவுக்கு கிடையாது என்றும் கூறியுள்ளது.
!!!!!!!!!!!!!
sports
!!!!!!!!!!!
நியூசிலாந்திற்கு எதிராக நடைபெறும் 4வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சச்சின் டென்டுல்கர் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து நாட்டில் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 5 ஒருநாள் போட்டிகளில் ஆடிவருகிறது. இதுவரை நடைபெற்றுள்ள 3 போட்டிகளில் 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. மழைகாரணமாக ஒரு போட்டி நடைபெறவில்லை. இந்நிலையில், 4வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், தொடரைக் கைப்பற்றிவிடும். இதுபோன்ற சூழலில், 3வது ஒருநாள் போட்டியில் 163 ரன்கள் எடுத்த சச்சின், வயிற்றில் தசைப்பிடிப்பு காரணமாக, 4வது ஒருநாள் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
1 euro = 144.91 sl / 65.50in
1us $ =114.20sl / 51.61in
i swiss fr = 99.10 sl /44.79in
1 uk pound = 157.38 sl /71.13 in
i saudi riyal = 30.44sl /13.76in


Leave a Reply

Your email address will not be published.