இந்திய வைத்திய குழுவினருடன் றோ உளவுப் பிரிவினரும் ஊடுருவக் கூடிய அபாயம்: தேசிய சுதந்திர முன்னணி

இடம்பெயர் மக்களுக்கு சிகிச்சையளிக்கும் பொருட்டு இலங்கைக்கு வருகை தரும் இந்திய வைத்திய குழாமுடன் றோ உளவுப் பிரிவினரும் ஊடுறுவக் கூடிய அபாயம் காணப்படுவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லவில் அமைந்துள்ள கட்சித் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இறுதி மூச்சுக்காகப் போராடி வரும் தமிழீழ விடுதலைப் புலிப் பேராளிகளுக்கு ஆதரவளிக்க பல்வேறு சர்வதேச சக்திகள் முயற்சி மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுமக்களை மீட்கும் பணியில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ள அமெரிக்க கடற்படையினரையும் இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதிக்கக் கூடாதென விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.