ரூ.54 லட்சம் விலையுள்ள புது மாடல் சொகுசு காரை அறிமுகப்படுத்தியது மெர்சிடஸ் பென்ஸ்

புதுடில்லி : ஜெர்மனியின் மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம், அதன் புதிய ஸ்போர்ட்ஸ் மாடல் ‘ எம் – கிளாஸ் ‘ சொகுசு காரை நேற்று புதுடில்லியில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே அது வெளியிட்ட ‘ எம் – கிளாஸ் ‘ மாடலின் மாற்றி அமைக்கப்பட்ட மாடல் தான் இது. 3.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 3 லிட்டர் டீசல் இஞ்சின் என்று இரு மாடல்களில் இந்த கார் வெளிவந்திருக்கிறது.

இதன் விலைகள் முறையே ரூ.53.77 லட்சம் மற்றும் ரூ.54 லட்சம். இந்த காரை அறிமுகப்படுத்தி பேசிய மெர்சிடஸ் – பென்ஸ் இந்தியாவின் சி.இ.ஓ., மற்றும் மேலாண் இயக்குநர் வில்பிரட் ஆல்பர், இந்த புது மாடல் எம் – கிளாஸ் கார் எல்லா சொகுசு அம்சங்களையும் கொண்டதாக இருக்கும் என்றார். இந்திய ரோடுகளுக்கு தகுந்தபடி உயரத்தை மாற்றி அமைக்க கூடிய ஏர் சஸ்பென்சன், 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன், அனைத்து சக்கர டிரைவிஸ் சிஸ்டம் போன்ற வசதிகளை கொண்டிருக்கும் என்றார். மேலும் இப்போது 250 பேர் மட்டுமே பணியாற்றி வரும் எங்களது பெங்களுரு ஆர் அண்ட் டி சென்டர், இன்னும் சில வருடங்களில் 500 முதல் 1000 பேர் வரை பணியாற்றும் சென்டராக <உயர்த்தப்படும் என்றார். ஜெர்மனிக்கு வெளியே இருக்கும் மிகப்பெரிய ஆர் அண்ட் டி சென்டராக இன்மேல் பெங்களுரு ஆர் அண்ட் டி சென்டர்தான் இருக்கும் என்றார். கடந்த 10 வருடங்களாக இந்திய சந்தையில் மெர்சிடஸ் – பென்ஸ் இருந்து வருகிறது.பென்ஸின் போட்டி நிறுவனமான பி.எம்.டபிள்யூ., 2007 மார்ச்சில் இந்தியாவில் ஒரு அசம்ளி சென்டரை நிறுவி கார்களை தயாரித்து இங்கு பென்ஸ் விற்பனையை ஒட்டிய விற்பனையை செய்து வருகிறது. இந்த நிதி ஆண்டின் ஏப்ரல் – டிசம்பரில் பி.எம்.டபிள்யூ., இங்கு 2,560 கார்களை விற்றிருக்கிறது. அது கடந்த வருட விற்பனையை விட 44 சதவீதம் அதிகம். பென்ஸ் கார்கள் இங்கு 2,700 விற்பனை ஆகி இருந்தாலும் கடந்த வருட விற்பனையை விட 22 சதவீத வளர்ச்சியைத்தான் அடைந்திருக்கிறது. இது குறித்து ஆல்பர் தெரிவிக்கையில், நாங்கள் இங்கு நெட்வொர்க்கை அதிகரிக்க இன்னும் ஒரு 150 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருக்கிறோம். அதிக அளவில் டீலர்களையும் இங்கு நியமித்து, லேட்டஸ்ட் மாடல் கார்களை அறிமுகப்படுத்தப்போகிறோம் என்றார். மேலும் பெங்களுரு தவிர, பூனேயில் ஒரு இஞ்சினியரிங் சென்டரையும் அமைக்க இருக்கிறோம் என்றார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.