சத்யம் விற்பனை நடைமுறைகள் ஆரம்பம்

மும்பை: சத்யம் நிறுவனப் பங்குகளை 51 சதவிகிதம் அளவுக்கு வெளி நிறுவனங்களுக்கு விற்க செபி அனுமதியளித்ததைத் தொடர்ந்து, பங்குகளை வாங்கத் தகுதியான நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்கும் பணியில் மும்முரமாகிவிட்டது சத்யம் இயக்குநர் குழு.

நிறுவனர் ராமலிங்க ராஜுவால் ரூ.7800 கோடிவரை மோசடி செய்யப்பட்ட சத்யம் நிறுவனத்தின் 51 சதவிகித பங்குகளை வெளி நிறுவனங்களுக்கு விற்று மூலதனத்தை திரட்டி, நெருக்கடியிலிருந்து அந்நிறுவனத்தை வெளியில் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தப் பங்குகளை வாங்கு விருப்பமுள்ள நிறுவனங்கள் வருகிற மார்ச் 12-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்.

வாங்க விரும்பும் நிறுவனங்கள் குறைந்த பட்சம் ரூ.1500 கோடிவரை ரொக்க இருப்பு வைத்திருக்க வேண்டும் என்பது முக்கிய நிபந்தனையாகப் பார்க்கப்படுகிறது.

சத்யம் பங்குகளை ஏல முறையில்தான் ஒதுக்கப் போகிறார்கள். அப்படி ஏலத்தில் பங்கேற்க தகுதியுள்ள நிறுவனங்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். அதன்பிறகு அந் நிறுவனங்களிடம் ரகசிய காப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் பெற்ற பிறகு ஏலம் நடைபெறும்.

இந்த ஏலத்தில் 31 சதவிகிதம் புதிய பங்குகள் அளிக்கப்படும், மீதமுள்ள 21 சதவிகிதம் வெளிச்சந்தையிலிருந்து வாங்கிதத் தரப்படும்.

Source & Thanks : /thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.