‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (09.03.09) செய்திகள்

posted in: செய்திகள் | 0

சிறிலங்கா படையினரால் இரண்டு மாதங்களுக்கு முன்னர் கைப்பற்றப்பட்ட விசுவமடு பகுதியில் நேற்று முன்நாள் கடுமையான மோதல்கள் நடைபெற்றதாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது .
இது தொடர்பாக படைத்தரப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது:
விசுவமடுவில் நிலைகொண்டுள்ள 57 ஆவது படையணியினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
நேற்று முன்நாள் சனிக்கிழமை காலை 6:30 நிமிடமளவில் தொடங்கிய கடுமையான மோதல் மாலை 4:30 நிமிடம் வரை நீடித்துள்ளது என படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
எனினும், இந்த மோதல்களின் போது படைத்தரப்புக்கு ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து படைத்தரப்பு தகவல் எதனையும் வெளியிடவில்ல
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
20 வருடங்களின் பின்னர் ஏ9 வீதியூடாக இன்று கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு உணவு பொருட்கள் அனுப்பப்படவுள்ளன.

இந்த நடவடிக்கையின் மூலம் வடக்கு மற்றும் தெற்கு மக்களுக்கிடையேயான உறவை மேலும் பலப்படுத்த முடியுமென அத்தியாவசிய சேவைகளின் ஆணையளர் நாயகம் எஸ்.திவாரட்ண தெரிவித்துள்ளார்.

இவ்வாறு எடுத்துச் செல்லப்படும் இந்த அத்தியாவசிய பொருட்களில் அரிசி, சீனி, மற்றும் பருப்பு உட்பட 400 மெட்ரிக் தொன் உணவுப் பொருட்கள் அடங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்தியவசிய பொருட்கள் இன்றைய தினமே யாழ்ப்பாணம் கைதடியைச் சென்றடையுமென எதிர்பார்க்கப்படுவதாக ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வடக்கை முழுமையாகக் கைப்பற்றியவுடன் அரசியல் தீர்வு ஒன்றை முன்வைப்பதற்கு அரசாங்கம் தயாராக இருக்கின்றது. அரசியல் தீர்வைத் தயாரிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளோம். தமிழ் மக்களின் நலன்கருதி கூட்டமைப்பு இவ்விடயத்தில் பொறுப்புடன் செயற்படும் என எதிர்பார்க்கின்றோம்என்று வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் சில தமிழ் கட்சிகளுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றோம். அரசியல் தீர்வு விடயத்தில் சர்வதேச சமூகமும் எமக்கு ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் பௌச்சருடனான உரையாடலின்போது புலிகளிடம் சிக்கியுள்ள மக்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது . முக்கியமாக விடுதலை புலிகள் மக்களை தடுத்து வைத்துக் கொண்டிருப்பதனால் அனைத்து விடயங்களும் தாமதமாகிக் கொண்டிருக்கின்றன என்பது தொடர்பில் விளக்கினேன்.

சிவில் மக்களின் பாதுகாப்புக்காக அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வருவதற்காகப் புதிதாக இரண்டு பாதுகாப்பு பாதைகளை அறிவித்துள்ளோம். பாதுகாப்பு பிரதேசங்களுக்கு வருகின்ற மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன . அம்மக்களை விரைவில் அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவது தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. இவை தொடர்பாக நான் ரிச்சர்ட் பௌச்சருக்கு விளக்கிக் கூறினேன்.

அத்துடன் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தானில் எதிர்கொண்ட தாக்குதல் சம்பவம் தொடர்பிலும் அமெரிக்காவின் ரிச்சர்ட் பௌச்சர் என்னுடன் கலந்துரையாடினார். அதேபோன்று வியட்நாம் ஜனாதிபதியையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினேன். அவுஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சரும் என்னுடன் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார். நாம் சர்வதேச சமூகத்துக்கு எமது நிலைப்பாட்டை அறிவித்துவருகின்றோம். எமது நிலைப்பாட்டை சர்வதேச சமூகம் ஏற்றுக் கொண்டு வருகின்றது. வடக்கு மீட்கப்பட்டதுடன் அரசியல் தீர்வை முன்வைக்க அரசாங்கம் தயாராக இருக்கின்றது. அது தொடர்பில் நாங்கள் சில தமிழ்க் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம்.

விரைவில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம் . அவர்களுக்கு அதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவார். கூட்டமைப்பு தமிழ் மக்களின் நலன்கருதி அரசியல் தீர்வை முன்வைக்க எமக்கு ஒத்துழைப்பு வழங்கும் என எதிர்பார்க்கின்றோம். அத்துடன் இவ்விடயத்தில் சர்வதேச சமூகம் எமக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கும்இவ்வாறு அவர் தெரிவித்தார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வன்னியில் சிக்கியுள்ள பொதுமக்களை அமெரிக்காவின் இராணுவத்தைப் பயன்படுத்தி மீட்கும் திட்டம் குறித்து, இப்போது வாஷிங்டன் வந்துள்ள இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனனுடன் மூத்த அதிகாரிகள் இன்று முக்கிய பேச்சுக்களை மேற்கொள்ளவுள்ளனர்.
வாஷிங்னில் நடைபெறவுள்ள இன்றைய சந்திப்பின் போது வன்னியில் மோதலில் சிக்கியுள்ள 2 இலட்சத்திற்கும் அதிகமான பொதுமக்களை வெளியேற்றும் அமெரிக்காவின் திட்டத்திற்கான இந்தியாவின் ஆதரவு கோரப்படும் எனச் சொல்லப்படுகிறது.
அமெரிக்க கடற்படை மற்றும் விமானப் படையினரின் உதவியுடன் பசுபிக்கின் அமெரிக்க கட்டளை பீடத்தைச் சேர்ந்தமரைன்துரித படையணியொன்றைப் பயன்படுத்தி வன்னியிலுள்ள பொதுமக்களை மீட்பதற்கான திட்டத்தை வாஷிங்டன் தீட்டியுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் திட்டத்தை இந்திய வெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர்மேனனிற்கு அதிகாரிகள் தெளிவுபடுத்தி , இதற்கான ஆதரவைக் கோரவுள்ளனர்.
இத்திட்டம் தொடர்பாக சமீபத்தில் அமெரிக்க கட்டளைப் பீடத்தைச்சேர்ந்த அதிகாரிகள் கொழும்பு சென்று இலங்கை அரசுடன், வன்னி மக்களை வெளியேற்றும் திட்டம் குறித்து ஆராய்ந்துள்ளனர் .
இதேவேளை, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தைச் சேர்ந்த முக்கிய அதிகாரியொருவரை அமெரிக்க வெளிவிவகார அமைச்சு யாழப்பாணத்திற்கு அனுப்பி அங்குள்ள நிலைமைகளை மதிப்பீடு செய்துள்ளது . குறிப்பிட்ட அதிகாரி பொதுமக்களை வன்னியிலிருந்து வெளியேற்றும் திட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு அமெரிக்க வெளிவிவகார அமைச்சைக் கோரியுள்ளார்.

இதேவேளை, இலங்கை அரசு வேண்டுகோள் விடுப்பதையேற்று விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக் கையளிக்காத சூழலில் இவ்வாறன நடவடிக்கையை மேற்கொள்வதால் உருவாகக்கூடிய அபாயகரமான சூழ்நிலை குறித்தும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
அமெரிக்க இராணுவத்தின் தலைமையில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்கான இந்தியாவின் ஆதரவை வாஷிங்டன் கோரும் பட்சத்தில் புதுடில்லிக்கு இது தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தலாம் .
இந்தியாவின் ஒத்துழைப்பு இல்லாமல் அமெரிக்கா தமிழ்மக்களை மீட்கும் நடவடிக்கையை மேற்கொள்ளுமானால் பிராந்திய வல்லரசு என்ற இந்தியாவின் அந்தஸ்திற்கு பாதிப்பு ஏற்படலாம் என இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி கருதுகிறார் என ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன .
மீட்புப்பணி குறித்த அமெ. திட்டத்துக்கு ஆதரவளிப்பதற்கு அரசு தயக்கம்

இந்தியாவின் நிலைப்பாட்டைக் கருத்தில் கொள்ளாமல், வன்னி மக்களை வெளியேற்றும் அமெரிக்காவின் திட்டத்திற்கு ஆதரவளிப்பதற்கு இலஙகை அரசு தயங்குகிறது என கொழும்பு வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன் காரணமாக வன்னி மக்களை வெளியேற்றும் மேற்குலகின் திட்டம் முன்னெடுக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அருகி வருகின்றன எனவும் கூறப் படுகிறது.
அமெரிக்காவின் யோசனை போன்ற ஒன்றை, இந்தியாவும் முன்வைத்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அரச வட்டாரங்கள், இந்தியா நெருங்கிய நேசநாடு என்பதால் கொழும்பு அதற்கு இணங்கியது எனவும் கூறப்படுகின்றது.
மேலும் விடுதலைப் புலிகளின் அனுமதியின்றி மக்களை வெளியேற்ற முடியாது. அமெரிக்கா விடுதலைப் புலிகளின் சம்மதமின்றி தரையிறங்கு கலங்களைப் பயன்படுத்தி பொதுமக்களை வெளியேற்ற முயல்கிறது.
அது முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன் காலத்தில் சோமாலியாவில் முன்னெடுக்கப்பட்டு , தோல்வியில் முடிந்த நடவடிக்கைக்கு ஒப்பானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த பொது சுகாதார பரிசோதகர் குழுவொன்று வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவிலிருந்து இடம் பெயர்ந்து தற்காலிக இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவென இவர்கள் அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுகாதார போஷாக்கு நலத்துறை அமைச்சின் பணிப்புரையின் பேரில் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த பொதுச் சுகாதார பரிசோதகர்கள் 20 பேரே இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவிலுள்ள இடைத்தங்கல் முகாம்களில் தற்போது தங்கியுள்ளவர்களுக்கு இந்தக் குழுவினர் சுகாதார சேவைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்MAjjhup கருணா ஓர் சுயநலவாதி எனவும், மக்கள் நலனைக் கருத்திற்
கொள்வதில்லை எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியும், கிழக்கு மக்களும் இக்கட்டான நிலையை எதிர்நோக்கிய சந்தர்ப்பத்தில் MAjjhup கருணா நாட்டிலிருக்கவில்லை எனவும், கிழக்கை அபிவிருத்தி செய்வதனை
முதன்மையாக் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது மிகவும் இன்றியமையாதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கில் வேலையற்றோர், விதவைகள் மற்றும் இடம்பெயர் மக்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்வடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், கடந்த சனிக்கிழமை ஆயுதங்கள் களைந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆயுதப் போராளிகள் இராணுவத்தில் இணைந்துகொள்ள விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் இடம்பெற்று வரும் இனப்பிரச்சினைகளினால் யுத்த களத்தில் போராட்டத்தை நடத்த தமது உறுப்பினர்கள் விரும்பவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!
கொழும்பிற்குள் பிரவேசிக்கும் தனியார் வாகனங்களை மட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தனியார் வாகனங்களை மட்டுப்படுத்தும் இந்த விசேட திட்டம் எதிர்வரும் 16ம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இதன்படி, தனியார் வாகனங்களை கட்டுபெத்த வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு சொகுசு பஸ்களின் மூலம் கொழும்பிற்குள் செல்ல வாகன உரிமையளாருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது .
குளிரூட்டப்பட்ட விசேட பஸ் சேவைகள் 16ம் திகதி வரையில் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படவுள்ளது . இந்த நடவடிக்கையின் மூலம் வாகன நெரிசலை கட்டுப்படுத்த முடியும் என போக்குவரத்து அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
எனினும், இதற்கான பஸ் கட்டணம் சாதாரண பஸ் கட்டணத்தைவிட 4 மடங்கு அதிகம் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தமிழீழக் கனவை மெய்ப்பிக்க ஐக்கிய நாடுகள் அமைப்பின் அங்கத்துவ நாடுகள் ஒத்துழைப்பு நல்க வேண்டுமென அமெரிக்க தமிழர் அமைப்பு பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தோனேஷியாவிலிருந்து பிளவடைந்து சென்ற கிழக்குத் திமோர் விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பு காட்டிய அதே கரிசனை இலங்கைத் தமிழர் கோரிக்கைகளுக்கும் அளிக்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளது.
கிழக்குத் திமோர் பிரச்சினைக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் அங்கத்துவ நாடுகள் வாக்கெடுப்பு மூலம் தீர்வொன்றினை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிழக்குத் திமோர் மக்களினால் முகங்கொடுக்க நேர்ந்த சகல மனிதாபிமான இன்னல்களையும் தமிழ்ப் பொதுமக்களும் எதிர்நோக்கி வருவதாக ஒபாமாவிற்கான தமிழர் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது .
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
யாழ்.மாநகர சபைத் தேர்தல்கள் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தல் ஆணையாளருடன் இவ்வாரம் பேச்சுக்களை மேற்கொள்வார் என்றும் தேர்தலுக்கான திகதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் அரச வட்டாரங்களை மேற்கோள்காட்டித் தகவல் வெளியாகியுள்ளது.
யாழ். மாநகரசபைக்கு விரைவில் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையாளருடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அடுத்த வாரமளவில் பேச்சுக்களை நடத்துவார் என்றும் அப்போது தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கோருவது குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் அறியப்படுகின்றது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப் பாட்டில் இருந்து யாழ்ப்பாணத்தை இரா ணுவத்தினர் கைப்பற்றியதன் பின் 1998 இல் மாநகரசபை தேர்தல் நடைபெற்றது. 11 வருட கால இடை வெளிக்குப் பின் மாந கரசபைக்கு தேர்தல் மூலம் உறுப்பினர் கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர் என்ப தும் குறிப்பிடத்தக்கது.வட பகுதியில் ஜனநாயகத்தை நடை முறைப்படுத்துவதற்கான அரசின் முதற் கட்ட நடவடிக்கையாக இது அமையலாம் என்றும் விடயமறிந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டின.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நாட்டில் நடைபெற்றுவரும் மோதல்கள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் வடக்கு, கிழக்கு பகுதிகளின் புனர்வாழ்வு, புனரமைப்பு நடவடிக்கைகளில் அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கையர்கள் தமது பங்களிப்பைச் செலுத்தவேண்டுமென வெளிவிவகார அமைச்சின் செயலர் பாலித கோஹண வேண்டுகோள் விடுத்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!
முல்லைத்தீவு யுத்தம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் படையினரின் முன்னரங்க காவல் நிலைகளுக்குள் ஊடுருவும் விடுதலைப்புலிகளின் பல்வேறு முயற்சிகளும் வீணாகிப் போயுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் நடைபெற்ற இந்தச்சமர்களில் நூற்றுக்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் படையினர் கூறுகின்றனர்.
பழமாத்தளன் மற்றும் புதுக்குடியிருப்புக்கு வடக்கேயுள்ள படையினரின் நிலைகள் மீது தற்கொலைப் படையினர். கடற்புலிகள் உட்பட இருநூறுக்கும் மேற்பட்ட புலிகள் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.
ஆரம்பத்தாக்குதலையடுத்து அவர்களுக்கு உதவியாக அலையலையாகச் சென்று தாக்குதலை நடத்த நூற்றுக்கும் மேற்பட்டோரைத் தயாராக வைத்திருந்தனர்.
படையினருக்கு எதிரான இந்த முன்கூட்டிய தாக்குதல் நடவடிக்கையில் பானு, லோறன்ஸ், சூசை போன்ற உயர் மட்டத் தலைவர்கள் நேரடியாக ஈடுபட்டிருந்தனர்.
அண்மைக்கால யுத்தங்களில் தங்களது உயர்மட்ட தலைவர்கள் பலரை புலிகள் இறக்கியது இதுவே முதற்தடவையாகுமென படையினர் கூறுகின்றனர்.
எனினும் புலிகளின் இந்த முன்கூட்டிய தாக்குதல் குறித்து அறிந்திருந்த படையினர் அதற்கேற்ப தங்களை நன்கு தயார்படுத்தி கடும் பதில் தாக்குதலைத் தொடுத்து புலிகளுக்கு பலத்த இழப்பை எற்படுத்தியதாகவும் படையினர் தெரிவித்தனர்.
சனிக்கிழமை புதுக்குடியிருப்புக்கு வடக்கேயும் பழமாத்தளனுக்கு தெற்கேயும் இடம்பெற்ற கடும் சமரில் 50 க்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டதுடன் அவர்களது 24 உடல்களை கைப்பற்றியுள்ளதாகவும் படையினர் கூறுகின்றனர்.
!!!!!!!!!!!!!!!!!!
இதேநேரம், புதுக்குடியிருப்பு பகுதியில் கடந்த முதலாம் திகதி முதல் படையினர் மேற்கொண்ட முன்னகர்வு முயற்சிகள் முறியடிக்கப்பட்டதில் 450க்கு மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டும் 1,272 படையினர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களது பல சடலங்களும் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக விடுதலைப்புலிக spd; rkh; Ma;Tikak; njuptpj;Js;sJ
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
யாழ்.குடாநாட்டில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும் 16 மற்றும் 17 வயது யுவதிகள் தாய்மையடையும் நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ள மகளிர் அபிவிருத்தி நிலையப் பணிப்பாளர் திருமதி சரோஜா சிவச்சந்திரன், தமது வயிற்றில் வளரும் பிள்ளைகளுக்கு தந்தை யார் என்பதை அறிவதற்காக இவர்கள் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார் .
யாழ். மாவட்டத்தில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்திருக்கின்றன. குறிப்பாக 16,17 வயதுடைய சிறுமிகள் தாய்மையடையும் செயற்பாடுகள் அதிகரித்துக் கொண்டு செல்கின்றன. தமது வயிற்றில் வளர்கின்ற குழந்தைகளுக்குத் தந்தை யார் என்பதை அறிவதற்கான டி.என். . மரபணுப் பரிசோதனைகளுக்காக பல பெண்கள் வைத்தியசாலைகளை நாடுகின்றார்கள். இந்த நிலைமைகள் வேதனையளிக்கின்றனவென்று மகளிர் அபிவிருத்தி நிலையப் பணிப்பாளர் திருமதி சரோஜா சிவச்சந்திரன் கவலை வெளியிட்டுள்ளார
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இன்று நாட்டில் பாரிய நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அரசு சர்வதேச நாணயநிதியத்திடம் கடன் கேட்டுள்ளதாகத் தெரிவிக்கும் எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இந்த நிலைமை நீடிக்குமானால் 1970 களில் ஏற்பட்ட பட்டினிவாழ்க்கையை மக்கள் எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படுமெனவும் கூறினார்.
இலங்கை மத்திய வங்கியிடம் நிதி முகாமைத்துவத்திட்டம் எதுவுமே இல்லை. நாட்டின் நிதி நிலைமையை நிர்வகிக்கும் பொறுப்பு மத்திய வங்கியிடமே உள்ளது. ஆனால், மத்திய வங்கியின் செயற்பாடுகளால் நாட்டின் முதலீடுகள் குறைந்துள்ளன. வெளிநாட்டு வருமானங்களும் குறைந்துள்ளன.
அரசாங்கத்தை நிர்வகிப்பதற்கு மத்திய வங்கியிடம் இரண்டு மாதங்களுக்குரிய நிதியே கையிருப்பில் உள்ளது. அதனால் தான் சர்வதேச நாணய நிதியத்திடம் அவசரமாக நிதி உதவி கோரப்பட்டுள்ளது.
ஆனால் அரசுக்கு நிதி வழங்குவது தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அந்த நிபந்தனைகளின் பேரிலேயே நிதி வழங்கப்படும். அதனால் நாட்டை விற்றாவது நிதியைப்பெறவும் அரசு தயாராக உள்ளது. இதேநேரம், இலங்கைக்கு நிதி வழங்குவது தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் ஆராய்ந்து வருகிறது.
நாட்டின் நிதி நிலைமைக்கு காரணம் அரசின் வீணான செலவுகளே. அதிகளவு அமைச்சர்கள் , அமைச்சுகள் மற்றும் மேலதிக செயற்பாடுகளே இந்த செலவுகளுக்கு காரணமாகும். இவற்றின் சுமைகள் மக்கள் மீது சுமத்தப்படுகின்றன.
1970 களில் பாண், அரிசி, மா, போன்ற உணவுகளுக்கு மக்கள் நீண்ட வரிசையில் நின்றதைப் போன்றதொரு நிலை மீண்டும் ஏற்படும்.
நாட்டின் பொருளாதார நிலைமைகள், நிதி நிலைமைகள் குறித்து நாம் அரசுக்கு பல தடவைகள் எடுத்துக் கூறியிருந்தோம். ஆனால், அவர்கள் அதனைக் கேட்பதில்லை.
அரசின் நிதி நிலைமையை சமாளிப்பதற்காக வெளிநாடுகளில் வாழ்கின்ற சிங்களவர்களிடம் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் கப்ரால் எமது தாய் நாட்டை பாதுகாக்க நிதி உதவி தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு மக்களை திசை திருப்புவதற்கு யுத்தத்தை காட்டி இவற்றை எல்லாம் கூறிவருகின்றனர் . வடக்கில் யுத்தம் முடிவடைந்தாலும், தெற்கில் மக்களின் வயிற்றுக்கு எதிரான யுத்தம் தொடரும்.
இவ்வாறான நிலைமைகளில் இருந்து நாட்டையும் மக்களையும் காப்பாற்றுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியாலேயே முடியும். எதிர்வரும் மேல் மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை மக்கள் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றார். எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
யாழ்.மாவட்டத்தில் 27 ஆயிரத்து 601 குடும்பங்களைச் சேர்ந்த 93 ஆயிரத்து 832 பேர் தொடர்ந்தும் நலன்புரி நிலையங்களிலும் உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளிலும் வசித்து வருவதாக யாழ்.மாவட்ட செயலக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இவர்களில் 21 ஆயிரத்து 591 குடும்பங்களைச் சேர்ந்த 73 ஆயிரத்து 672 பேர் 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் இடம்பெயர்ந்தவர்கள்.
6 ஆயிரத்து 10 குடும்பங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்து 205 பேர் மேற்படி திகதிக்குப் பின்னர் இடம்பெயர்ந்தவர்களெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்கு மேலதிகமாக படையினரின் பயன்பாட்டுக்கென மேலும் பல பிரதேசங்கள் உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதாலேயே இந்தக் குடும்பங்கள் தொடர்ந்தும் இடம்பெயர்ந்தவர்களாக வாழ்கின்றார்கள்.
இதேவேளை, 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்ற கடகோள் அனர்த்தத்தால் பருத்தித்துறையிலிருந்து இடம்பெயர்ந்த 70 குடும்பங்களைச் சேர்ந்த 272 பேர் தொடர்ந்தும் நலன்புரி நிலையங்களிலும் உறவினர்களின் வீடுகளிலும் தங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
india
!!!!!!!!!!!!!!
இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த வலியுறுத்தி .தி.மு.. சார்பில் தமிழகம் முழுவதும் இன்று திங்கட்கிழமை உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. சென்னையில் .தி.மு.. பொது செயலாளர் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்கிறார்.
காலை 9.10 மணிக்கு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ள ஜெயலலிதா மாலை 5 மணிக்கு முடிக்கிறார் . இதற்காக உண்ணாவிரதம் நடைபெறும் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேடையில் அமர்ந்து ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்கிறார் .

மேலும் தொண்டர்கள் உட்காருவதற்கு வசதியாக பந்தல் போடப்பட்டுள்ளது. .தி.மு .. உண்ணாவிரதத்தின் போது இலங்கை தமிழர்களுக்காக நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது . உண்ணாவிரத மேடையில் அதற்காக தனியாக உண்டியல் வைக்கப்பட்டிருக்கும்.
இந்த உண்டியலில் ஜெயலலிதா முதலில் நிதியை அளித்து உண்ணாவிரதத்தை தொடங்குகிறார். ஜெயலலிதாவின் உண்ணாவிரத போராட்டத்தில் .தி.மு.. நிர்வாகிகள், தொண்டர்கள் திரளான தொண்டர்கள் பங்கேற்கிறார்கள்.
இலங்கைத் தமிழர்களுக்காக .தி.மு.. பொதுச்செயலாளர் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருப்பது இது 2-வது தடவையாகும். இதற்கு முன்பு கடந்த 1985-ம் ஆண்டு இலங்கை தமிழர்கள் படுகொலையைக் கண்டித்து செங்கல்பட்டில் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்தார்.

அப்போதும் உண்டியல் வைத்து அவர் நிதி திரட்டி இலங்கைத் தமிழர்களுக்கு உதவினார். சுமார் 24 ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயலலிதா மீண்டும் இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளார் .
!!!!!!!!!!!!!!!!!!

இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த வலியுறுத்தி அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று அதிமுகவினர் உண்ணாவிரதம் மேற்கொள்கின்றனர். இந்த உண்ணாவிரத்தில் இலங்கை தமிழர்களுக்காக நிதி திரட்டப்படுகிறது. இதற்காக உண்ணாவிரத மேடையில் தனியாக உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நடக்கும் உண்ணாவிரத்தில் தலைமை ஏற்றிருக்கும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா, இலங்கை தமிழர்களுக்காக ரூ.5 லட்சத்தை உண்டியலில் போட்டார். இதைத்தொடர்ந்து அதிமுகவினர் பலர் உண்டியலில் பணம் போட்டனர்.

!!!!!!!!!!!!!!!!!!!!!
. உண்ணாவிரதம் இருக்கும் ஜெயலலிதாவை அதிமுக கூட்டணியில் இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தா.பாண்டியன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததுடன், உண்ணாவிரத்திலும் பங்கேற்றுள்ளார். மேலும் அவருடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களும் உண்ணாவிரத்தில் பங்கேற்றுள்ளனர்.

உண்ணாவிரதம் நடைபெறும் சேப்பாக்கம் பகுதியில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உண்ணாவிரதம் நடைபெறும் இடத்தில் கூட்டம் அதிகமாக இருந்தால், அந்த பகுதியில் போக்குவரத்தில் மாற்றம் செய்யவும் பொலிஸார் முடிவு செய்துள்ளனர
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கைத் தமிழர்களுக்காக .தி.மு. பொதுச் செயலர் ஜெயலலிதா இரு‌க்கு‌ம் உண்ணாவிரதம், நாடு தழுவிய அளவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பா .. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்
இது தொட‌‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், தமிழ்நாட்டில் மிகப் பெரிய சக்தி .தி.மு.. அதன் பொதுச் செயலர் ஜெயலலிதா உண்ணாவிரதம் நடத்துவது இலங்கைத் தமிழர்களுக்கு மிகுந்த ஆறுதல் தருவதாகும். அது அவர்களை நம்பிக்கை கொள்ளச் செய்யும். அத்துடன் அவரது உண்ணாவிரதப் போராட்டம் நாடு தழுவிய அளவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வலிமையான செய்தியை உணர்த்துவதாக அமையும். அது இலங்கை அதிபர் ராஜப‌க்சேவுக்கு கடும் எச்சரிக்கை விடுப்பதாகவும் அமையும்.

சர்வதேச சமூகத்திடம் உதவிகளை எதிர்பார்த்து நிற்கும் இலங்கைத் தமிழர்கள், மிக நெருங்கிய உறவு கொண்ட தமிழகத் தமிழர்களிடமிருந்து அதிகமாக எதிர்பார்க்கிறார்கள். இலங்கைத் தமிழர்களின் துயர நிலை குறித்து அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற உலக நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் ஆழ்ந்த கவலை தெரிவித்து உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.

இத்தகைய சூழ்நிலையில்தான் இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் நடத்த ஜெயலலிதா முடிவு செய்தார். கடந்த 30 ஆண்டு கால இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இப்போதுதான் மனித அவலநிலை உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

இலங்கைத் தமிழர்கள் பட்டினிக் கொடுமையால் அதிக அளவில் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. அங்குபாதுகாப்பு வளையம்என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளிலேயே தடை செய்யப்பட்ட கொத்து வெடிகுண்டுகளை வீசி இலங்கை ராணுவம் படுகொலை செய்து வருகிறது. இவற்றை எல்லாம் தடுத்து நிறுத்தும் கடமையும், பொறுப்பும் நமக்கு உள்ளது எ‌ன்று ராமதாஸ் கூ‌றியு‌ள்ளா‌ர் .
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி பா... மகளிர் சங்கம் சார்பில் நாளை நடைபெற இரு‌ந்த உண்ணாவிரதம் த‌ள்‌‌ளிவை‌க்க‌ப்படு‌‌கிறது எ‌ன்று அ‌க்க‌ட்‌சி‌த் தலைவர் கோ..மணி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
இது தொட‌‌‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், இலங்கையில் போர் நிறுத்தம் செய்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் நாளை (10ஆ‌ம் தேதி) சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் இல்லம் அருகில் நடைபெற இருந்த உண்ணாவிரத போராட்டம் த‌ள்‌ளிவைக்கப்படுகிறது.

எனவே உண்ணாவிரத போராட்டத்திற்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து கலந்து கொள்ள இருக்கும் பாட்டாளி மகளிர் சங்கத்தை சேர்ந்தவர்கள் உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைக்கப்பட்டதை இதையே அறிவிப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும் எ‌ன்று கோ..ம‌ணி கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.
!!!!!!!!!!!!!!!
இர‌ண்டு ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்பு உ‌த்தர‌ப்‌பிரதேச‌த்தை உலு‌க்‌கிய மதரசா கூ‌ட்டு‌க் க‌‌ற்ப‌ழி‌ப்பு வழ‌க்‌கி‌ல் கு‌ற்ற‌ம்சா‌ற்ற‌ப்ப‌ட்ட 5 பேரு‌க்கு எ‌திராக போ‌திய ஆதார‌ங்க‌ள் இ‌ல்லை எ‌ன்று கூ‌றி அவ‌ர்களைநீ‌திம‌ன்ற‌ம்விடுதலை செ‌ய்து உ‌த்தர‌வி‌ட்டது.

அலகாபா‌த் பெருநகரநீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் இ‌வ்வழ‌க்குவிசாரணை‌க்கு வ‌ந்தபோது, கு‌ற்ற‌ம்சா‌ற்ற‌ப்ப‌ட்டவ‌ர்க‌ள்தா‌ன் கு‌ற்ற‌த்தை‌ச் செ‌ய்தா‌ர்க‌ள் எ‌ன்பதை போ‌திய ஆதார‌ங்களுட‌ன் அரசு தர‌ப்புநிரூ‌பி‌க்க‌வி‌ல்லை எ‌ன்று‌ம் , தகு‌ந்த ஆதார‌ங்க‌ள் சம‌ர்‌ப்‌பி‌க்க‌ப்பட‌வி‌ல்லை எ‌ன்று‌‌ம்நீ‌திப‌திபி‌ரஜே‌ஷ் குமா‌ர்மி‌ஸ்ரா கூ‌றினா‌ர்.

கட‌ந்த 2007ஆ‌ம் ஆ‌ண்டு ஜனவ‌ரி 17ஆ‌ம் தே‌தி அலகாபா‌த் நகர‌த்‌தி‌ல் கரே‌லி எ‌ன்ற இட‌த்‌தி‌ல் உ‌ள்ள மதரசா‌வி‌ல் இரு‌ந்து இர‌ண்டு சிறு‌மிக‌ள் வெ‌ளி‌யி‌ல் இழு‌த்து‌ச் செ‌ல்ல‌ப்ப‌ட்டு கூ‌ட்டாக‌க் க‌ற்ப‌ழி‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.

இதுகு‌றி‌த்து மதரசாநி‌ர்வா‌கி கொடு‌த்த புகா‌ரி‌ன் பே‌ரி‌ல், ஒழு‌க்க‌‌க்கேடான நட‌த்தை எ‌ன்று கு‌ற்ற‌ம்சா‌ற்ற‌ப்ப‌ட்டவ‌ர்க‌ள்மீது காவல‌ர்க‌ள் முத‌ல்க‌ட்ட வழ‌க்கை‌ப் ப‌திவு செ‌ய்தன‌ர் .

இதுகு‌றி‌த்து அ‌தி‌ர்‌ச்‌சி தெ‌ரி‌வி‌த்த கா‌ங்‌கிர‌ஸ் ம‌ற்று‌ம் பகுஜ‌ன் சமா‌ஜ் க‌ட்‌சிக‌ள் உ‌ண்மையான கு‌ற்றவா‌ளிகளை‌க் கா‌ப்பா‌ற்ற முய‌ற்‌சி நட‌க்‌கிறது எ‌ன்று புகா‌ர் தெ‌ரி‌வி‌த்தன .

இதையடு‌த்து உ‌த்தர‌ப்‌பிரதேச‌த்‌தி‌ல் மாயாவ‌தி தலைமை‌யிலான பகுஜ‌ன் சமா‌ஜ் அரசு அமை‌ந்தபிறகு இ‌வ்வழ‌க்குமீ‌ண்டு‌ம்விசா‌ரி‌க்க‌ப்ப‌ட்டது.
!!!!!!!!!!!!!!!!
‌‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங்‌கி‌ற்கு சொ‌ந்தமாக முடிவெடு‌க்கு‌ம் ச‌க்‌தி இ‌ல்லை எ‌ன்று கூ‌றியு‌ள்ள பா.ஜ.க. ‌பிரதம‌ர் வே‌ட்பாள‌ர் எ‌ல்.கே. அ‌த்வா‌னி, மா‌ற்ற‌த்‌தி‌ற்காக வா‌க்க‌ளி‌க்குமாறு ம‌க்க‌ளு‌க்கு வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்தா‌ர்.

டேராடூ‌னி‌ல் நட‌த்த‌ப்ப‌ட்ட தே‌ர்த‌ல் ‌பிர‌ச்சார‌ப் பேர‌ணி‌யி‌ல் பே‌சிய அ‌த்வா‌னி, “நமது நா‌ட்டு வரலா‌ற்‌றி‌ல் முத‌ல்முறையாக சொ‌ந்தமாக முடிவெடு‌க்கு‌ம் அ‌திகார‌மி‌ல்லாத ‌பிரதம‌ர் பத‌வி‌யி‌ல் உ‌ள்ளா‌ர். முடிவுக‌ள் எ‌ல்லா‌ம் சோ‌னியா கா‌ந்‌தியா‌ல் எடு‌க்க‌ப்படு‌கி‌‌ன்றன. 10, ஜ‌ன்ப‌த் சாலை‌யி‌ல் ‌பிரதம‌ரி‌ன் அலுவலக‌ம் உ‌ள்ளது, ஆனா‌ல் உ‌ரிமைக‌ள் இ‌ல்லை” எ‌ன்று கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர்.

இ‌ந்‌தியா ஒரு ஜனநாயக நாடு எ‌ன்பதா‌ல், எ‌ந்த ஒரு ‌விடய‌த்‌திலு‌ம் ‌பிரதம‌ரி‌ன் வா‌ர்‌த்தையே இறு‌தியாக வே‌ண்டு‌ம். எனவே, ந‌ல்லதொரு மா‌ற்ற‌த்‌தி‌ற்காக பா.ஜ.க.‌வி‌ற்கு ம‌க்க‌ள் வா‌க்க‌ளி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று அ‌த்வா‌னி வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்தா‌ர்.
!!!!!!!!!!!!!!!!!!
இந்தியாவின் சக்தி வாய்ந்த பிருத்வி ஏவுகணை சோதனை நேற்று ஒரிசாவில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

இந்தியா மீது எதிரி நாடுகள் போர் தொடுக்கும் பட்சத்தில், அதனை எதிர்கொண்டு தடுப்பதற்காக நவீன முறையில் பிருத்வி ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை, நடுவானிலேயே, எதிரி நாட்டு ஏவுகணைகளை தடுத்து அழிக்கும் சக்தி படைத்தது . இந்நிலையில், நேற்று ஒரிசா மாநில கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட போர்கப்பலில் இருந்து, பிருத்வி ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்ததாகவும், பிருத்வி வான் பாதுகாப்பு ஏவுகணை, இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது என்றும் தெரிவித்தனர். அண்மையில், ராஜஸ்தான் பாலைவனத்தில் , இந்தியாவின் பிரேமோஸ் ஏவுகணை சோதனையும், போர் விமானங்கள் ஒத்திகையும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
!!!!!!!!!!!!!!!
சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே இன்று பதவியேற்று கொண்டார். தமிழக கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா, புதிய தலைமை நீதிபதிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
!!!!!!!!!!!!!!!!
இலங்கையில் வாழும் தமிழர்களின் பரிதாப நிலைக்கு காங்கிரஸ் அரசாங்கமே காரணமாகும். இலங்கை தமிழர்களைக் காக்க மத்திய அரசாங்கம் எதுவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை . பாரதீய ஜனதா கட்சி ஆட்சியமைத்தால் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்று இந்திய எதிர்க்கட்சித் தலைவரும் பா... பிரதமர் வேட்பாளருமான எல்.கே. அத்வானி தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அத்வானி இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறியதாவது , “பா... ஆட்சி அமைத்தால் தமிழர் வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் . 100 நாட்களில் இலங்கை தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும். இந்நிலையில் இலங்கை மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் வாழும் தமிழர்கள் தொடர்பாக கவலைப்படும் தமிழக மக்களை பாராட்டுகின்றேன். இலங்கையில் உள்ள தமிழர்களின் பரிதாப நிலைக்கு காங்கிரஸ் அரசுதான் காரணம். அவர்களை பாதுகாக்க மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை . ஆகவே தமிழகத்தில் உள்ள மக்கள் இலங்கையில் கொல்லப்படும் தங்கள் சகோதரர்களுக்காக படும் வேதனைகளை, கவலைகளை என்னால் புரிந்துகொள்ள முடிகின்றது.

பாகிஸ்தானில் இருந்து வருகிற பயங்கரவாதமானாலும் சரி, வங்காள தேசத்தில் இருந்து வரும் தீவிரவாதமாக இருந்தாலும் சரி, அவற்றைக் கட்டுப்படுத்துவதிலும் இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படும் பிரச்சினையாக இருந்தாலும் சரி இவை அனைத்திலும் காங்கிரஸ் அரசு நிர்வாகம் தோற்றுப் போய்விட்டது . எனவே முடிவு எடுக்கும் அதிகாரம் பிரதமர் கையில் இருக்கவேண்டும் என்று நீங்கள் வருகிற தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்தா

world
!!!!!!!!!!!!!!!!!
வட‌கிழ‌க்கு மாகாண‌த்‌தி‌ல் ஆஃ‌ப்க‌ன் எ‌ல்லை‌யி‌ல் இ‌ஸ்லா‌மிய‌த்தீ‌விரவா‌திக‌ளி‌ன்மீது பா‌கி‌ஸ்தா‌ன் படை‌யின‌ர் ஹெ‌லிகா‌ப்ட‌‌ர் மூல‌ம் நட‌த்‌திய தா‌க்குத‌லி‌ல் 15 ‌தீ‌விரவா‌திக‌ள் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர் எ‌ன்று அ‌ந்நா‌ட்டு அ‌திகா‌ரிக‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

துணை இராணுவ‌ப்படை காவ‌ல் அ‌திகா‌ரிக‌ள் 13 பேரை‌க் கொ‌ன்றவ‌ர்க‌ள் எ‌ன்று ச‌ந்‌தே‌கி‌க்க‌ப்படு‌ம் தா‌லிபா‌ன் போரா‌ளிக‌ள் மொஹ‌ம்மது எ‌ன்ற பழ‌ங்குடி‌யின‌ர் பகு‌தி‌‌யி‌ல் பது‌ங்‌கி‌யிரு‌ப்பதாக‌க்கிடை‌த்த தகவலையடு‌த்து இ‌ந்த‌த் தா‌க்குத‌ல் நட‌த்த‌ப்ப‌ட்டு‌ள்து.

இதுகு‌றி‌த்து மொஹ‌ம்மது பகு‌தி‌யி‌ல் உ‌ள்ள அரசு அ‌திகா‌ரியான மேரா‌ஜ் கா‌ன் கூறுகை‌யி‌ல், நே‌ற்று (ஞா‌யி‌ற்று‌க்‌கிழமை ) இரவு இராணுவ‌த்‌தின‌ர் தா‌க்குதலை‌த் தொட‌ங்‌கியதாகவு‌ம், சலா‌ம் கொரூனா எ‌ன்ற இட‌த்‌தி‌ல் பது‌ங்‌கி‌‌யிரு‌ந்தவ‌ர்க‌ள் அனைவரு‌ம் கொ‌ல்ல‌‌ப்ப‌ட்டு‌வி‌ட்டதாகவு‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அண்டை நாடான வ‌‌ங்கதேச‌த்‌தில், ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் இரண்டு ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார்.

தலைநகர் டாக்காவில் இருந்து 75 கி.மீ. தொலைவிலுள்ள தாங்கைல் மாவட்டத்தில் இன்று காலை இந்த விபத்து நேரிட்டதாக, காவல்துறை உயரதிகாரி அப்துல் மன்னான் தெரிவித்தார்.

தாழ்வாகப் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளாகி நெல் வயலில் விழுந்து நொறுங்கியதாக, அவர் மேலும் கூறினார்.

விபத்துக்கான காரணம் தெரியவில்லை . எனினும் அண்மையில் நடந்த எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்களின் கலகத்திற்கும் இச்சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
!!!!!!!!!!!!!!!!
சீனாவின் ஆக்கிரமிப்பு திபெத் பகுதியில் மீண்டும் கலவரம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக புத்தமத தலைவர் தலாய்லாமா அச்சம் தெரிவித்துள்ளார்.

சீனாவின், திபெத் பகுதியில் , கடந்த ஆண்டு ஏற்பட்ட வன்முறை கலவரத்தில், சீன ராணுவத்தினரின் துப்பாக்கிச்சூட்டில் ஐம்பதுக்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து, பல்வேறு நாடுகளில் வசிக்கும் திபெத்தியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம், பேரணி நடத்தினர். சீனாவுக்கு எதிராக திபெத்தியர்களை தூண்டிவிடுவதாக தலாய்லாமா மீது சீன அரசு குற்றம்சாட்டியது . எனினும், திபெத் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த சீன அரசு நிபந்தனை விதித்தது . திபெத் பகுதிக்கு சுதந்திரம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை சீன அரசு நிராகரித்துவிட்டது . இந்நிலையில், அங்கு மீண்டும் கலவரம் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், திபெத்தியர்கள் மீது தாக்குதல் நடத்த சீன ராணுவம் திட்டமிட்டு வருவதாகவும் புத்தமத தலைவர் தலாய்லாமா அச்சம் தெரிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!
பாக்தாதின் முக்கிய பொலிஸ் ஆட்சேர்ப்பு நிலையத்தில் நடத்தப்பட்ட ஒரு தற்கொலைத்தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டதாக இராக்கிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்த ஆட்சேர்ப்பு நிலையத்துக்கு வெளியே நின்றிருந்த ஆட்களின் மத்தியில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற ஒருவர், தன்வசம் இருந்த குண்டை வெடிக்கச் செய்த இந்த தாக்குதலில், மேலும் குறைந்தது 40 பேர் காயமடைந்துள்ளனர்.
இறந்தவர்களில் சிலர் இராக்கிய பொலிஸாராவர். ஏனையவர்கள் ஆட்சேர்ர்ப்புக்காக வந்திருந்தவர்களும் , பொதுமக்களுமாவர்.
அண்மைய வருடங்களில் இராக்கிய அரசாங்கத்துக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களால், பொலிஸில் சேர வருபவர்கள் அடிக்கடி இலக்கு வைத்து தாக்கப்படுகிறார்கள்.
!!!!!!!!!!!!!!!
இராக்கில் இருந்து அடுத்த ஆறுமாதத்தில் பன்னீராயிரம் படையினரை வாபஸ் பெறப்போவதாக அமெரிக்க இராணுவம் கூறுகிறது.
அடுத்த வருடம் ஆகஸ்டு மாதத்துக்கு முன்னதாக இராக்கில் இருந்து அமெரிக்காவின் தாக்குதல் படையணியை வெளியேற்றுவது என்ற அதிபர் ஒபாமாவின் திட்டத்தின் முதல்படி இதுவாகும் .
அடுத்த மாதங்களில் நடக்கவிருக்கும் வெளியேற்றத்துக்குப் பின்னரும் இராக்கில் இன்னமும் ஒரு லட்சத்து இருபதினாயிரம் அமெரிக்கப் படையினர் இருப்பார்கள்.
எந்தளவு வேகத்தில் இந்த படை வெளியேற்றம் இருக்கும் என்பதன் ஒரு பகுதி இந்த வருட பின்பகுதியில் நடக்கவிருக்கும் தேசிய தேர்தல் வெற்றிகரமாக நடக்கின்றதா என்பதில் தங்கியுள்ளது.
!!!!!!!!!!!!!!
1 euro = 144.48 sl / 65.50in
1us $ =114.20sl / 51.77in
i swiss fr = 98.36 sl /44.59in
1 uk pound = 160.87 sl /72.93 in
i saudi riyal = 30.45sl /13.80in

Leave a Reply

Your email address will not be published.