நாங்கள் கேட்ட 30 கேள்விகளுக்கு பதில் எங்கே? பாக்.,கின் உள்நோக்கம் அம்பலம்

இஸ்லாமாபாத்: மும்பைத் தாக்குதல் தொடர்பாக நாங் கள் எழுப்பிய 30 கேள்விகளுக்கு விரைவில் பதில் தாருங்கள் என, இந்தியாவை பாகிஸ்தான் அரசு கேட்டுக் கொண்டுள் ளது. இச்சம்பவம் தொடர்பாக காவலில் இருப்பவர்களை வெளியில் விடும் உள்நோக்கத்துடன் இம்மாதிரி கருத்தை எழுப்புகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.மும்பைத் தாக்குதலுக்கு பாகிஸ் தான் பயங்கரவாதிகளும், அங்கு செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுமே காரணம் என, இந்திய அரசு குற்றம் சாட்டியது. இதுதொடர்பான ஆதாரங்களையும் பாகிஸ்தான் அரசிடம் அளித்தது.அதன்படி, பாக்., அரசு சில நடவடிக் கைகளை எடுத்தது. அத்துடன் இந்தியா கொடுத்த ஆதாரங்களுக்கு கடந்த மாதம் 12ம் தேதி பதில் அளித்தது. அதில், 30 கேள்விகளை எழுப்பி, அதற் குப் பதில் அளிக்கும்படியும் கேட்டுக் கொண்டது.


பாகிஸ்தான் கேட்டிருந்த இந்த 30 கேள்விகளுக்குமான பதிலை மும்பை போலீசார் தயாரித்து மத்திய அரசிடம் அளித்துள்ளனர். மத்திய உள்துறை இதைப் பரிசீலித்த பின், பாக்., அரசிடம் அளிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதே விளக்கங்கள் அமெரிக்க புலனாய்வுத் துறைக்கும் தரப்பட்டிருக்கின்றன.இந்நிலையில், தாங்கள் கேட்ட 30 கேள்விகளுக்கான பதிலை விரைவில் தர வேண்டும் என, இந்திய அரசை பாகிஸ் தான் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் இதுதொடர்பாக மேலும் கூறியதாவது:மும்பைத் தாக்குதல் தொடர்பாக நாங்கள் எழுப்பிய 30 கேள்விகளுக்கு இந்தியா இதுவரை பதில் தராதது துரதிர்ஷ்டமானது. விரைவில் பதில் தர வேண்டும் என, இந்திய அரசை கேட்டுக் கொள்கிறேன். பதில் தரும் என, நம்புகிறோம்.அப்போது தான் எங்கள் நாட்டு விசாரணை அதிகாரிகள் ஆதாரங்களைச் சேகரித்து, உரிய முறையில் விசாரணை நடத்தி குற்றம் செய்தவர்களை நீதியின் முன் நிறுத்த முடியும். இந்த விவகாரத்தில் இந்திய உள்துறை அமைச்சகம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

மும்பைத் தாக்குதல் தொடர்பாக நாங்கள் கைது செய்த நபர்களின் காவல் முடிய இன்னும் 13 நாட்களே உள்ளன. அதற்குள் இந்திய அரசு பதில் தந்தால் நல்லது. இல்லையெனில், அவர்களின் காவலை நீட்டிக்க முடியாது. எங்கள் நாட்டுச் சட்டப்படி, குற்றம் சாட்டப் பட்ட ஒருவரின் காவலை 30 நாட்களுக்கு மேல் நீட்டிக்க முடியாது.இவ்வாறு ரகுமான் மாலிக் கூறினார்.மும்பைத் தாக்குதல் தொடர்பாக இந்தியா கொடுத்த ஆதாரங்களின்படி, லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த ஜாகீர் ரகுமான் லக்வி, சரார் ஷா, அபு அல் குவாமா மற்றும் ஹமாத் அமீன் சாதிக் ஆகிய நான்கு பேரை பாகிஸ்தான் அரசு கைது செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.அமெரிக்கா, பிரிட்டன் கொடுத்த நெருக்கடியையும் கருத்தில் கொண்டு கைது செய்த பாகிஸ்தான், மும்பைத் தாக்குதலில் லஷ்கர்-இ-தொய்பா காரணம் என்ற அளவுக்கு விசாரணை வருவதில் அக்கறை காட்டவில்லை.இந்த விஷயத்தில் பாகிஸ்தான் சரியாக விசாரணை மேற்கொள்ளவில்லை என்று அமெரிக்கா கருத்து தெரிவித்த பின் தற்போது பாகிஸ்தான் 30 கேள்விகள் குறித்து அக்கறைப்படுவது போல இதை எழுப்புகிறதோ என்ற கேள்வி எழுகிறது.

மேலும், அமெரிக்கா, பிரிட்டன் உட்பட பல மேற்கத்திய நாடுகளிடம் பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் சில விவரங்களைத் தெரிவித்துள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு பாகிஸ்தானில் விரிவான நெட்வொர்க் கை கொண்டுள்ளது. அந்த அமைப்பை வேரறுக்க, அரசு ஏதாவது நடவடிக்கைகள் எடுத்தால், அது நாட்டிற்குள் பெரிய அளவிலான பாதுகாப்புப் பிரச் னைகளை உருவாக்கி விடும். அதனால், அந்த அமைப்பின் நடவடிக்கைகளை ஒடுக்குவது என்பது நடக்காத காரியம்.அதற்குப் பதிலாக, அந்த அமைப் பின் முகாம்களைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையம் அமைக்கலாம். அதன் மூலம் அங்கு பயிற்சி பெறுவோர் வெளியே சுதந்திரமாகச் சென்று, தாக்குதல்கள் நடத்துவதைத் தடுக்கலாம். இதை மட்டுமே இப்போதைக்குச் செய்ய முடியும்.இவ்வாறு பாக்., பாதுகாப்பு அதிகாரிகள் கூறினர்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.