விசுவமடு பகுதியில் கடும் மோதல்: சிறிலங்கா படைத்தரப்பு

சிறிலங்கா படையினரால் இரண்டு மாதங்களுக்கு முன்னர் கைப்பற்றப்பட்ட விசுவமடு பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை கடுமையான மோதல்கள் நடைபெற்றதாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக படைத்தரப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது:

விசுவமடுவில் நிலைகொண்டுள்ள 57 ஆவது படையணியினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

நேற்று முன்தினம் சனிக்கிழமை காலை 6:30 நிமிடமளவில் தொடங்கிய கடுமையான மோதல் மாலை 4:30 நிமிடம் வரை நீடித்துள்ளது என படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

எனினும், இந்த மோதல்களின் போது படைத்தரப்புக்கு ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து படைத்தரப்பு தகவல் எதனையும் வெளியிடவில்லை.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.