இலங்கை கிரிக்கட் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுடன் நைஜீரிய, உஸ்பெகிஸ்தான் மற்றும் ஆப்கான்களுக்கு தொடர்பு

கடந்த மூன்றாம் திகதி லாகூரில் இலங்கை தேசிய கிரிக்கட் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல்களுடன் உஸ்பெகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் நைஜீரிய தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் இயங்கிவரும் தீவிரவாத அமைப்புக்களின் செயற்பாடுகளினால் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தீரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு பாகிஸ்தானிய அரசாங்கம் காத்திரமான முனைப்பு காட்டவில்லை எனவும் அமெரிக்க குற்றம் சுமத்தியுள்ளது.

தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற குறித்த இடத்திலிருந்து 200 மீற்றர் தொலைவில் லாஹ_ரின் மிகப் பெரிய காவல்துறை நிலையம் அமைந்துள்ளதாகவும், தாக்குதல்சம்பவம் 20 நிமிடங்கள் வரை நீடித்த போதிலும், காவல்துறையினர் தாமதமாகவே சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தானைச் சேர்ந்த சில உயர் அதிகாரிகள் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு துணைபோவதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.

இதேவேளை, இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என இலங்கை அரசாங்கம் குற்றம் சாட்டியிருந்தமையும் தமிழீழ விடுதலைப்புலிகள் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தமையும் இங்கு  குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.