கொழும்பில் கைதுசெய்யப்படும் தமிழ் இளைஞர்கள் வதை முகாம்களில்

கொழும்பின் பல பகுதிகளிலும் கைதுசெய்யப்படும் தமிழ் இளைஞர்கள் இரகசிய தடுப்பு முகாம்; ஒன்றில் தடுத்துவைக்கப்பட்டு கடும்சித்திவதைகளுக்குள்ளாக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி குற்றஞசாட்டியுள்ளார்.

மட்டக்களப்பு,அம்பாறை,திருகோணமலை,வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் இருந்து தொழில் நிமித்தம் கொழும்பில் தங்கியிருந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு சித்திரவதைகளுக்குள்ளாக்கப்பட்டுவருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இவர்கள் உறவினர்களின் வீடுகளில்,நண்பர்களுடன்,தனியாக வாடகைக்கு எடுத்து தங்கியிருந்த வேளையிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூhத்தி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை பார்வையிட அவர்களின் மனித உரிiமைகள் சட்டத்தரணிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லையென மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை பார்வையிட அனுமதிபெற்றுத்தருமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தினமும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துவருவதாகவும் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன.

Source & thanks : swissmurasam.net

Leave a Reply

Your email address will not be published.