வன்னியில் எறிகணை மற்றும் வான் தாக்குதல்களில் நேற்று 32 தமிழர்கள் படுகொலை

வன்னியில் சிறிலங்கா படையினர் நேற்று நடத்திய எறிகணை மற்றும் வான் தாக்குதல்களில் 32 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 64 பேர் காயமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இரணைப்பாலை, மாத்தளன் பகுதிகளில் உள்ள மக்கள் வாழ்விடங்கள் மீது நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை தொடக்கம் சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதேவேளையில் சிறிலங்கா அரசாங்கத்தால் மக்கள் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் வான் படையினரும் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இரண்டு தாக்குதல்களிலும் 32 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 64 பேர் காயமடைந்துள்ளனர்.

இரா.மகேந்திரன் (வயது 32)

செல்வராணி (வயது 52)

அ.சிறி (வயது 28)

சு.இராசதுரை (வயது 36)

சு.சோமசுந்தரம் (வயது 52)

ந.அருளம்மா (வயது 63)

அ.ஆனந்தமூர்த்தி (வயது 23)

ம.மகேஸ்வரி (வயது 24)

கே.சசிகலா (வயது 20)

க.மகேஸ்வரி (வயது 29)

ஜோ.ஜெயரூபன் (வயது 31)

ஜோ.லூக்காஸ் (வயது 61)

உ.உதயதாஸ் (வயது 15)

ச.நவநீதா (வயது 46)

ந.மிரேஸ் (வயது 16)

எஸ்.செபஸ்தியன் (வயது 50)

சி.கபிலன் (வயது 16)

தி.பிரேமா (வயது 54)

ப.ஜீவமலா் (வயது 49)

ஜெ.சர்மிளா (வயது 15)

ஜோ.தியாகன்பன் (வயது 17)

தி.தியாகசீலன் (வயது 26)

ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட போது ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

ம.மகேஸ்வரி (வயது 24)

சு.ரவீனாஸ் (வயது 14)

கே.பிரதீபா (வயது 10)

வே.விநாயகமூர்த்தி (வயது 70)

சு.சோதிலிங்கம் (வயது 30)

அ.மார்க்கிரெட் (வயது 70)

ஆகியோர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட போது உயிரிழந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.