வன்னியில் பட்டினியில் இருந்து மக்களை காப்பாற்ற விடுதலைப் புலிகள் துரித நடவடிக்கை

வன்னியில் சிறிலங்கா அரசாங்கத்தின் தடைகளினால் பெரும் உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் பட்டினி அவலத்தை தடுக்கும் செயற்பாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குழந்தைகளுக்கு பால்மா வழங்கப்படுவதற்கான நிலையங்கள் அமைக்கப்பட்டு காலையில் பால்மா வழங்கப்படவுள்ளதுடன் கஞ்சி வழங்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டு கஞ்சி வழங்கப்பட்டு வருகின்றது.

இதில் சிறுவர்களுக்கு பயற்றம் கஞ்சியும் பெரியவர்களுக்கு உப்புக்கஞ்சியும் வழங்கப்பட்டு வருகின்றது.

மேலும், பட்டினி நிலையில் உள்ள குடும்பங்களுக்கும் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதேவேளையில் விடுதலைப் புலிகளால் மலசல கூடம் அமைக்கப்பட்டு வருவதுடன் கிணறுகள் வெட்டும் செயற்பாடுகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்காக மக்கள் வாழும் பகுதிகள் ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதேவேளையில் ஆதரவற்ற வீதிகளில் கைவிடப்பட்ட பசியால் வாடும் முதியவர்களும் உரிய வகையில் உணவுகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.