சரஸ் விமானம் விழுந்து விபத்து – 3 விமானிகள் பலி

பெங்களூர்: 14 அமர்ந்து செல்லும் வகையில் இந்திய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள சரஸ் குட்டி விமானம் நேற்று பெங்களூரில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த 3 விமானிகளும் உயிரிழந்தனர்.

பெங்களூர் அருகே பிதாதியில் இந்த விபத்து நடந்தது. என்.ஏ.எல் இந்த விமானத்தை வடிவமைத்துள்ளது.

நேற்று மாலை இந்த விமானத்தை பரிசோதனைக்காக ஓட்டிச் சென்றனர். அப்போது சேஷகிரிஹள்ளி என்ற இடத்தில் மாலை மூன்றே முக்கால் மணியளவில் விமானம் திடீரென தீப்பிடித்து எரிந்து கீழே விழுந்து நொறுங்கியது.

இதில் விமானம் முற்றிலும் எரிந்து போய் விட்டது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த இளையராஜா, பிரவீன் மற்றும் ஷா ஆகிய விமானிகள் உயிரிழந்தனர்.

மூன்று பேரும் விமானப்படை வி்மானிகள் ஆவர். அனுபவம் வாய்ந்த விமானிகள் உயிரிழந்திருப்பது பெரும் இழப்பாகும் என என்.ஏ.எல் தெரிவித்துள்ளது.

Source & Thanks : thatstamil.com

Leave a Reply

Your email address will not be published.