லாகூர் தாக்குதலில் இந்தியாவுக்கு தொடர்பு இல்லை: இலங்கை

கொழும்பு: லாகூரில் இலங்கை வீரர்கள் தாக்க்பப்ட்ட சம்வத்தில் இந்தியாவுக்கு எந்த தொடர்பும் இல்லை என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் லாகூர் நகரில் கடந்த 3ம் தேதி டெஸ்ட் போட்டியில் பங்கேற்க சென்று கொண்டிருந்த இலங்கை வீரர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் 6 இலங்கை வீரர்கள் காயமடைந்தனர். 7 போலீசார் பலியாயினர்.

இச்சம்பவத்தில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக பாகிஸ்தான் தேவையில்லாமல் குற்றம்சாட்டி வருகிறது.

இந்நிலையில் லாகூர் போலீஸ் கமிஷ்னர் குஸ்ரோ பெர்வைஸ், இலங்கை வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்தியாவுக்கு தொடர்பு இல்லை என்று கூறிவிட முடியாது என்றார்.

இவரை தொடர்ந்து பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் முன்னாள் தலைவர் ஹமீத் குல், அந்நாட்டின் ஜீயோ டிவிக்கு அளித்த பேட்டியில், இந்தியா, பாகிஸ்தானை பலவீனப்படுத்த பார்க்கிறது.

பாகிஸ்தானை இந்த உலகம் தீவிரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என முயலுகிறது. அதற்கான சதிகளில் ஒன்று தான் லாகூரில் இலங்கை வீரர்கள் தாக்கப்பட்டது என்றார்.

இந்நிலையில் பாகிஸ்தான் அரசு சிஐடிகளின் அறிக்கையில் இருந்து லாகூர் தாக்குதலில் இந்தியாவின் உளவு அமைபாபன் ‘ரா’வுக்கு பங்கு இருக்கிறது என்றது.

ஆனால், இவை அனைத்தையும் இலங்கை அரசு மறுத்துள்ளது. இது குறித்து இலங்கை அரசு அறிவிப்பு ஒன்று கூறுகையில், இந்தியா எங்களுடன் இருக்கிறது. இவ்விவகாரத்தில் இந்தியாவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

Source & Thanks: thatstamil.com

Leave a Reply

Your email address will not be published.