‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (07.03.09) செய்திகள்

posted in: செய்திகள் | 0

சிறிலங்கா இராணுவத்தின் 55 ஆவது டிவிசன் படையணியின் பின்தளப் பகுதியை தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு அணிகள் ஊடறுத்து தாக்கியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


இது தொடர்பாக கொழும்பு ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சாலையின் தென்பகுதியில் கடுமையான சமர் நடைபெற்றது . விடுதலைப் புலிகளின் அணிகள் அலை அலையாக ஊடறுத்து தாக்குதலை நடத்தியுள்ளர்.
55 ஆவது படையணியின் பின்னணி நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை நிலைகளுக்குள் ஊடுருவிய விடுதலைப் புலிகள் பெருமெடுப்பிலான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
சாலைப் பகுதியில் 55 மற்றும் 58 ஆவது படையணிகள் இணைப்பை ஏற்படுத்தியிருந்த புள்ளியை மையப்படுத்தியே விடுதலைப் புலிகளின் தாக்குதல் நடைபெற்றது.
இத்தாக்குதலில் இரு தரப்பிலும் ஏற்பட்ட சேதங்கள் குறித்தான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை . அது தொடர்பான தகவல்கள் பின்னர் அறியத்தரப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஐக்கிய நாடுகள் சபையின் குழுவில் மூத்த மனித உரிமை ஆலோசகர் இடம்பெறுவதனை சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாக நீதித்துறை பணிப்பாளர் மொகான் பீரீஸ் மனித உரிமைகள் ஆணையாளரிடம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிய வருவதாவது:
மனித உரிமை மீறல்களில் ஈடுபடுபவர்களை தண்டிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு சிறிலங்கா அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
அனைத்துக்கட்சி குழுவின் செயற்பாடுகளை முதன்மைப்படுத்தி வருவதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் குழுவில் மூத்த மனித உரிமை ஆலோசகர் இடம்பெறுவதை சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் பீரீஸ் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கையில், வன்னிப் பகுதியில் சிக்குண்டுள்ள மக்களை அமெரிக்க பசுபிக் கட் டளை அணியின் உதவியுடன் வெளியேற்றுவதற்கான அனுமதி அளிக்கும் சூழல் வரும் வரை, இரண்டு தரப்புகளும் சம்மதம் தெரிவிக்கும் வரை அந்தச் செயற்பாட்டில் நாம் ஈடுபடமுடியாது .”

இவ்வாறு தெரிவித்திருக்கின்றார் தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணைச் செயலாளர் றிச்சார்ட் பவுச்சர். பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு எந்தெந்த உதவிகளை எங்களால் செய்ய முடியுமோ அவற்றைச் செய்வதற்கு முயற்சிப்போம் என்றும் அவர் கூறினார்.

போர்ப் பிரதேசத்தில் சிக்குண்டுள்ள மக்களை அமெரிக்கப் பசுபிக் கட்டளை அணியின் உதவியுடன் வெளியேற்றி இலங்கை அரசிடம் ஒப்படைக்கத் திட்டமிடப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்தது தெரிந்ததே . துணைச் செயலாளர் றிச்சர்ட் பவுச்சர் நேற்று நடத்திய தொலைபேசியூடான செய்தியாளர் மாநாட்டில் மேற்படி விடயம் குறித்துக் கேட்கப்பட்டது. அப்போதே அவர் அத்தகைய ஒரு செயற்பாட்டுக்கு அனுமதியளிக்கும் சூழல் ஒன்று உருவாகும் வரை மக்களை அப்புறப்படுத்தும் விடயத்தில் அமெரிக்கா ஈடுபட முடியாது என்று சொன்னார்.

சிக்குண்டுள்ள பொதுமக்களை முன்னர் குறிப்பிட்ட திட்டத்தின் பிரகாரம் வெளியேற்றுவதற்கு இரண்டு தரப்பபுக்களும் அனுமதிக்க வேண்டும் என்றும் றிச்சர்ட் பவுச்சர் குறிப்பிட்டார்.

வன்னியில் உள்ள நிலைமை குறித்து ஆராய்ந்து எந்தெந்த வகைகளில் அப்பகுதி மக்களுக்கு உதவ முடியும் என்ற சாத்தியக் கூறுகளை அடையாளம் காண எமது அதிகாரிகள் சிலரை அனுப்புகின்றோம். அப்பகுதியில் அவலப்படும் பொதுமக்களுக்கு எந்தெந்த உதவி செய்யமுடியுமோ அதைச்செய்ய முயல்வோம் என்றும் துணைச் செயலாளர் கூறினார். இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு சம உரிமைகளை கொடுத்து அவர்களைக் கௌரவத்துடன் நடத்துவதற்கு ஏற்பாடு செய்வது அவசியம்.

இத்தகைய சூழ் நிலையில் விடுதலைப்புலிகள் பொது மக்களை தொடர்ந்தும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது மக்களுக்கு மேலும் சிரமத்தையே கொடுக்கும் என்றும் மேலும் தெரிவித்துள்ளார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வவுனியா பிரதேசத்தில் உள்ள அரசாங்க வங்கியொன்றின் முகாமையாளர் மற்றும் பணியாளரைக் கடத்தி மூன்று கோடி ரூபா கப்பமாக பெற்றுக் கொள்ள முயற்சித்த இரண்டு பொலிஸ் புலனாய்வு அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கருணா குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற போர்வையில் குறித்த பொலிஸ் அதிகாரிகள் குழு கப்பம் பெற்றுக்கொள்ள முயற்சி மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த பொலிஸ் அதிகாரிகளுடன் மேலும் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கப்பம் கோரல் நடவடிக்கையுடன் உயர் பொலிஸ் அதிகாரியொருவருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இந்திய மருத்துவ குழுவொன்று எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கை வரவுள்ளது. வன்னியில் காயமடைந்து திருகோணமலை வரும் பொதுமக்களுக்கு சிகிச்சை மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கும் வகையிலேயே இந்த குழு இலங்கை வருகின்றது. புல்மோட்டை வைத்தியசாலையில் அவசர மருத்துவ பிரிவை அமைக்கும் நோக்கிலேயே இந்த மருத்துவ குழு இலங்கை வருவதாக இந்தியத் தூதுரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை அரசாங்கத்துடன் ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே இலங்கை வரும் இக்குழுவினர் மருத்துவ சேவைகளை வழங்கவுள்ளனர். இந்த மருத்துவ குழுவில் அனுபவம் வாய்ந்த 8 நிபுணர்களும் மற்றும் சத்திர சிகிச்சை வல்லுனர்களும் சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகளும் இடம்பெறுகின்றனர்.

தேவையான மருந்து பொருட்களையும் இந்தக் குழுவினர் எடுத்து வரவுள்ளனர். இதேவேளை, 70 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்து பொருட்கள் மற்றும் சாதனங்களையும் இந்த குழுவினர், இலங்கை சுகாதார அமைச்சிடம் கையளிக்கவுள்ளனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சிறிலங்காவின் நிதி நெருக்கடியை குறைப்பதற்கு ஏதுவாக 2 பில்லியன் டொலர்களை வழங்குவதற்கு உலக நிதி அமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டின் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
உலகில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உலக நிதி அமைப்பு உதவிகளை மேற்கொண்டு வருகின்றது.
இதன் அடிப்படையில் சிறிலங்காவுக்கு 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு அது இணக்கம் தெரிவித்துள்ளது என்றார் அவர
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தின் போது 43 டொலர்களுக்கு மசகு எண்ணெய் கொள்வனவு செய்யப்பட்டு ஒரு லீற்றர் பெற்றோல் 75 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது . ஆனால், இன்று 29 டொலர்களுக்கு மசகு எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகின்ற போதிலும் பெற்றோல் ஒரு லீற்றர் 120 ரூபாவுக்கே விற்பனை செய்யப்படுகின்றது.

அரசாங்கம் ஏன் மக்களுக்கு இவ்வாறான அநீதியை இழைக்கின்றது என்று ஐக்கிய தேசிய கட்சி எம் .பி. ரவி கருணாநாயக்க நேற்று சபையில் கேள்வி எழுப்பினார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நாட்டின் பிரதான இரண்டு கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சிகளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பண உதவி வழங்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது . ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஆளும் கட்சி விடுதலைப் புலிகளுக்கு இரகசியமாக 700 மில்லியன் ரூபாவினை வழங்கியதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கப்பட்ட விதம் குறித்து மங்கள சமரவீரவும் ஸ்ரீபதி சூரியாரச்சியும் அம்பலப்படுத்தியுள்ளதாக ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில் திறைசேரியிலிருந்து விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அமைச்சர் தினேஸ் குணவர்தனா தெரிவித்துள்ளார்.

அரச நிதிநிர்வாக அமைப்பினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சி விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கியுள்ளமை அம்பலப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!
வன்னிலிருந்து இடம்பெயர்ந்து வந்த இளைஞர்கள் படையினரால் கைது செய்யப்பட்டு சேனபுர புனர்வாழ்வு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
படையினரால் கைது செய்யப்பட்ட 16 இளைஞர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வந்தனர். பின்னர் இவர்கள் அனைவரும் வவுனியா நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.

ஆறுபேருக்கு விடுதலைப் புலிகளுடன் நேரடித் தொடர்பிருப்பதாக நீதிமன்றத்தில் காவல்துறையினர் தெரிவித்ததையடுத்து 6 பேர் பொலநறுவை மாவட்டம் வெலிகந்த சேனபுர புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பு வவுனியா மாவட்ட நீதிபதி .ஜி அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டார்.

ஏனைய பத்துப்பேரையும் விடுதலை செய்யுமாறும், அவர்களை வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் பெற்றோருடன் இணைக்குமாறும் காவல்துறையினருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சிறீலங்கா அரசினால் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள சண்டே ரைஸ்ம் பத்திரிகையின் பத்தி எழுத்தாளர் ஊடகவியலாளர் ஜே. எஸ். திஸ்ஸநாயம் விடுதலை செய்யப்பட வேண்டும் என, உலகின் முன்னணி ஊடக மற்றும் மனித உரிமைகள் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
9 அமைப்புக்களின் பிரதிநிதிகள் நேற்று (வெள்ளிக்கிழமை) சிறீலங்கா அரசிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ள போதிலும், அரச தரப்பில் இருந்து இதுவரை எந்தவித பதிலும் வழங்கப்படவில்ல
அனைத்துலக மன்னிப்புச்சபை, எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு, ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் கூட்டமைப்பு , அனைத்துலக ஊடக சம்மேளனம் போன்ற அமைப்புக்களை உள்ளடக்கிய ஊடக, மற்றும் மனித உரிமை அமைப்புக்களே இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளன.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான சிறீலங்கா படைகளின் தாக்குதலை விமர்சித்து பத்தி எழுதிய திஸ்ஸநாயம் தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் பார்வை மற்றும் உடல் நலக்குறைவினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன .
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கான .நா.வின் உதவித் திட்டங்கள் அரசாங்கத்தின் ஊடாகவே முன்னெடுக்கப்படுமென்று அமைச்சரும் பாதுகாப்பு ஊடகப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது;
உள்ளூரில் இடம்பெயர்ந்தோருக்கான நலன்புரி கிராமங்கள் அரசாங்கத்தினால் சிறந்த முறையில் நிர்வகிக்கப்படுகின்றதென்பதை இதனை நேரடியாக பார்வையிட்டவர்கள் கண்டுகொண்டுள்ளனர். இவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை அரசு மேற்கொண்டுள்ளது.
இடம்பெயர்ந்து கல்வியை இடை நடுவில் நிறுத்தியவர்களுக்காக பாடசாலைகள் உட்பட சுகாதார வசதிகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுகின்றது.
குடும்பங்களுடன் வந்து தங்குவதற்கான தனித்தனி வீடுகள் அமைக்கும் வேலைகளை அரசு விரிவுபடுத்தி வருகின்றது. .நா.வின் மனித உரிமைகளுக்கான இணைச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் இந்த நலன்புரி கிராமங்களுக்குச் சென்று நேரடியாகப் பார்வையிட்டு திருப்தியடைந்துள்ளார் . இது எமக்கு மகிழ்ச்சியளிக்கின்றது.
இதேபோல் பல்வேறு நாடுகளின் தூதுவர்கள் அங்கு சென்று சூழ்நிலைகளை பார்வையிட்டு திருப்தி தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ .நா. அமைப்புகள் முன்வந்துள்ளதையிட்டு நன்றி தெரிவிக்கின்றோம்.
இலங்கை இறைமையுள்ள நாடுகள் என்ற வகையிலும் மக்களுக்குத் தேவை எதுவென்பதை அரசாங்கம் தெரிந்து வைத்துள்ள நிலையில் இவர்களின் உதவிகள் அரசின் திட்டங்களுக்கே பங்களிக்க முடியும். இத் திட்டங்கள் அரசினால் முகாமைத்துவம் செய்யப்பட்டு உரிய முறையில் முன்னெடுக்கப்படும்.
கடந்த காலங்களில் சர்வதேச தொண்டர் நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் நேரடியாகச் செயற்பட்டன. இதன் விளைவாக வன்னியில் நீர்த் தடாகம் மற்றும் உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய அச்சு இயந்திரங்களை படையினர் மீட்டதன் மூலம் காணக்கூடியதாகவிருந்தது . இதனை தவிர்ப்பதற்காகவே அரசு இந்நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அதுபோல் இந்நிறுவனங்கள் இலங்கைக்கு வழங்கும் நிதி, அவ்வமைப்பின் நாடுகளின் ஊழியர்கள் சம்பளம் மற்றும் புதிய தொழில்நுட்பம் போன்ற செயற்பாட்டின் காரணமாக 70 சதவீதமான நிதி திரும்பிச் செல்வதால் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார் .
!!!!!!!!!!!!!!
கடற்படைத் தளபதி வைஷ் அட்மிரல் வசந்த கர்ணகொட அண்மையில் அமெரிக்காவின் ஹவாய்த் தீவுக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
ஹவாய்த்தீவிலுள்ள பசுபிக் பிராந்திய கடற்படைக் கட்டளைத் தளபதியின் அழைப்பையேற்றே அட்மிரல் வசந்த கர்ணகொட அங்கு விஜயம் செய்திருந்தார்.
இதன்போது அவர் பசுபிக் பிராந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் ரொபேர்ட் எவ் . வில்வாட்டைச் சந்தித்துப் பேசினார்.
இருதரப்பு உறவுகள், இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைவரங்கள் தொடர்பாகவும் இருவரும் கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
!!!!!!!!!!!!!!!
மன்னாரில் இளம் பெண் ஒருவரை சித்திரவதைக்குட்படுத்தி பாலியல் வல்லுறவு மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட பாதுகாப்புத் தரப்பினர் பதினான்கு பேர் மீதான வழக்கு விசாரணை தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை அநுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி மகிந்த சமயவர்த்தன முன்னிலையில் நடைபெற்றபோது, சாட்சிகள் சாட்சியமளிக்க வராததன் காரணமாக வழக்கு விசாரணையை முடிவுக்கு கொண்டுவந்ததாக நீதிபதி தெரிவித்தார்.
இந்த வழக்கு விசாரணையுடன் தொடர்புடைய சாட்சிகள் எவரும் சாட்சியமளிக்க முன்வருவார்களானால் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் நீதிபதி மன்றில் தெரிவித்தார்.
கடற்படை மற்றும் பொலிஸாரைச் சேர்ந்த 14 பேர் மீது இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
2001 ஆம் ஆண்டு மன்னார் நகரில் கைது செய்யப்பட்ட இளம் பெண்ணை விசாரணைக்கு கொண்டு சென்று இக் குற்றங்களை புரிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான வழக்கு விசாரணை முதலில் மன்னார் நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்றது .
பின்னர் பாதுகாப்பு காரணங்களால் எதிரிகளின் வசதி கருதி அநுராதபுரம் மேல் நீதிமன்றத்துக்கு சட்டமா அதிபரால் மாற்றப்பட்டது.
தற்போதைய போக்குவரவு பிரச்சினை மற்றும் பாதுகாப்புக் காரணங்களால் சாட்சிகள் மன்னாரில் இருந்து அநுராதபுரத்துக்கு சென்றுவர முடியாதிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
!!!!!!!!!!!!!!
கிழக்கு மாகாண சபையை இம் மாகாணத்தில் வாழும் சகல இன மக்களுக்கும் சேவையாற்றும் உயிரோட்டமுள்ள அத்தியாவசியமான சகல அதிகாரங்களும் கொண்ட மாகாண சபையாக மாற்ற வேண்டும் . தற்போது கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் கதிரைகளை சூடேற்றும் கைங்கரியத்தை மட்டுமே செய்ய முடிகிறது. இவ்வாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், இளைஞர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான .எம்.ஜெமீல் கல்முனை மாநகர வைத்தியசாலை அடிக்கல் நாட்டு விழாவில் கௌரவ அதிதியாகக் கலந்து கொணடு உரையாற்றும் போது தெரிவித்தார் . அவர் அங்கு மேலும் கூறுகையில்;
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூலம் அரசியல் முகவரியை பெற்று பின் இக் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் எதிர்வரும் தேர்தலில் ஓரம் கட்டுவதே எமது நோக்கமாகும்.
இன்று கிழக்கு மாகாண சபைக்கு உரிய அதிகாரங்கள் வழங்கப்படாமையால் அது பொம்மைகளின் காட்சிக் கூடமாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.இதனை அரசாங்கம் உடனடியாக உயிரோட்டமுள்ள மக்களுக்கு சேவையாற்றக் கூடிய சபையாக மாற்றவேண்டும்.
கிழக்கு மாகாண சபைக்கு தேவையான அதிகாரங்களை வழங்குங்கள் என முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான பஷீர் சேகு தாவுத் தலைமையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களாகிய நாங்கள் போராடி வருகின்றோம்.
எங்களை நம்பி வாக்களித்த கிழக்கு மாகாண மக்களுக்கு எதையாவது நாங்கள் செய்ய வேண்டும். அபிவிருத்தி என்ற போர்வையில் மக்களை ஏமாற்றுவதனை தவிர்த்து மக்களின் அத்தியாவசியமான தேவைகளை அடையாளம் கண்டு நிறைவு செய்து கொடுக்க வேண்டியது எமது கடமையாகும். அந்த வகையில் கடற்கோள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கரையோர பிரதேச மக்களின் நன்மை கருதி நிர்மாணிக்கப்படவுள்ள இவ் வைத்தியசாலை மூலம் அனைவரும் சிறந்த பயன்களைப் பெற வேண்டும் என்று குறிப்பிட்டார்.
!!!!!!!!!!!!!!!!!!

india
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை நிகழாமல் இருந்தாலும் கூட ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசாங்கம் மிகப்பெரிய அளவில் முன்வந்து துணை நின்றிருக்காது என்று இந்திரா காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பிரிவின் பொதுச் செயலாளராக பதவி வகித்து அண்மையில் விலகிய தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!
úTôÄv R¥V¥ NmTYm ùRôPoTô] ¿§T§ c¡ÚxQô®u A±dûLûV HtL Ø¥VôÕ Guß YZdL±OoLs A±®jÕs[]o.
¿§Uu\l ×\dL¦lûTj ùRôPoYRô GuTÕ Ï±jÕ Ø¥Ü ùNnV YZdL±OoL°u áhÓ SPY¥dûLd ÏÝ áhPm ùNuû]«p Cuß SûPùTß¡\Õ.
ùNuû] EVo ¿§Uu\j§p ©lWY¬ 19-p SûPùTt\ úUôRp NmTYm ùRôPoTôL ®NôWûQ SPjR ¿§T§ c¡ÚxQô Lªh¥ûV EfN ¿§Uu\m ¨VªjRÕ.
¿§T§ c¡ÚxQô R]Õ A±dûLûV EfN ¿§Uu\j§p ®VôZd¡ZûU NUol©jRôo.
CÕ Ï±jÕ RªrSôÓ YZdL±Oo NeLj RûXYo Gv.©WTôLWu á±VRôYÕ:
R¥V¥ NmTYm ùRôPoTôL R]Õ ®NôWûQ YWm×dÏ EhThÓ ¿§T§ c¡ÚxQô A±dûLûVf NUol©dL®pûX. G]úY, AYWÕ A±dûLûV HtL Ø¥VôÕ. ¿§Uu\l ×\dL¦l×l úTôWôhPjûRj ùRôPoYRô GuTÕ Ï±jÕ Cuß Ø¥Ü ùNnVlTÓm’ Gu\ôo.
ùNuû] EVo ¿§Uu\ YZdL±OoLs NeLj RûXYo Bo.£.TôpL]LWôw á±VRôYÕ:
©lWY¬ 19 NmTYeLs ϱjÕ ®NôWûQ SPjR UhÓúU ¿§T§ c¡ÚxQô ¨VªdLlThPôo. B]ôp, ARtÏ Øu]RôL SûPùTt\ NmTYeLs ùRôPoTôL R]Õ A±dûL«p AYo ùR¬®jÕs[ôo.
úTôÄ^ôo Esú[ ÖûZYRtÏ AàU§ A°jRÕ Vôo, R¥V¥dÏ EjRW®hPÕ Vôo úTôu\ûY Lªh¥«u ®NôWûQ YWmTôL ¨oQ«dLlThPÕ.
B]ôp, CkR NmTYm ùRôPoTôL GkR úTôÄv A§Lô¬«u ùTVûWÙm c¡ÚxQô ϱl©hÓf ùNôpX®pûX. CkR A±dûL ùRôPoTôL YZdL±OoL°u áhÓ SPY¥dûLd ÏÝ áhPj§p ®Yô§lúTôm Gu\ôo.
R¥V¥«p ùRôPo×ûPV úTôÄv A§Lô¬Lû[l T¦¿dLm ùNnVd úLô¬ YZdL±OoLs EVo ¿§Uu\m G§úW ùRôPo EiQô®WRj§p DÓThÓ YÚ¡u\]o.
EiQô®WRl TkR#p úT£V YZdL±OoLÞdLô] NêL ¿§l úTWûYj RûXYo úL.TôÛ, “c ¡ÚxQô A±dûL êXm ¨VôVm ¡ûPdÏm Guß Sm©ú]ôm. B]ôp, ¨VôVm ¡ûPdL®pûX Guß ùR¬¡\Õ. EfN ¿§Uu\m úLhP úLs®LÞdÏ, CÕYûW LôYpÕû\ A§Lô¬Ls T§X°dL®pûX. AWÑ EiûUûV ê¥ Uû\d¡\Õ. SUÕ EQoÜLs U§dLlTP®pûX’ Gu\ôo
.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!

«|RÛX p¿†ÛRL· Lyp RÛXYŸ ‡£UÖY[YÁ ÙRցPŸ LºPÁ SÛPTVQ• ÚU¼ ÙLցPÖŸ. CRÁ ‘Á ÙNÁÛ] ‡£•‘V ‡£UÖY[YÁ ÚS¼¿ LÖÛX TÖ.U.L. RÛXYŸ PÖePŸ WÖURÖÛN N‹‡†‰ BÚXÖNÛ] SP†‡]ÖŸ.

ÙNÁÛ] ‡VÖLWÖV SL¡¥ E·[ ÙTÖjh R–² Y[Ÿop A\eLyPÛ[ A¨YXL†‡¥ C‹R BÚXÖNÛ] SÛPÙT¼\‰.

‘Á ˜R¥-AÛUoNŸ L£QÖŒ‡ÛV AYW‰ C¥X†‡¥ ‡£UÖY[YÁ N‹‡†‰ ÚTp]ÖŸ. C‹R N‹‡” 1 U‚ ÚSW• SÛPÙT¼\‰. C‰ T¼½ ‡£UÖY[YÂP• ÚLyP ÚTÖ‰ “C‰ U¡VÖÛR Œ–†RUÖ] N‹‡”” GÁ\ÖŸ.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கை படுகொலையை கண்டித்து அதிமுக வரும் 9ம் தேதி நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இலங்கை தீவில் ஈழத் தமிழர்களை பாதுகாக்கவும், தமிழின படுகொலை நடத்தும் சிங்கள அரசின் அராஜகத்தை தடுக்க தவறியதோடு மட்டுமல்லாமல் அந்த அரசுக்கு ராணுவ ரீதியாக ஆயுதங்களும், உதவியும் வழங்கும் மத்திய அரசு மற்றும் அதற்கு துணை போகும் மாநில அரசுகளை கண்டித்தும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் வரும் 9ம் தேதி நடைபெற இருக்கும் உண்ணாநிலை அறப்போராட்டம், தாய் தமிழகத்துக்கு மக்கள் ஈழத் தமிழர்கள் படும் துன்பத்தில் கொந்தளிக்கும் வேதனையை வெளிப்படுத்தும் அறப்போராட்டமாகும்.

இந்த போராட்டத்திற்கு மதிமுக ஆதரவையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறது. உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெறும் அனைத்து இடங்களிலும் மதிமுகவினர் தங்களது ஆதரவினையும், போராட்டம் வெற்றிப் பெறுவதற்கான வாழ்த்துக்களையும் தெரிவிப்பர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கை‌த் தமிழர்களுக்காக .‌தி.மு..பொது‌ச் செயல‌ர் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருப்பது காலம் கடந்த முயற்சி என்று பா... ‌நிறுவன‌ர் ராமதாஸ் தெ‌‌ரி‌வி‌த்தா‌ர்.

சென்னை தியாகராயநகரில் உள்ள பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை அலுவலகத்தில் பா.. நிறுவன தலைவர் ராமதாசை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று சந்தித்துப் பேசினார்.

இதை‌த் தொட‌‌ர்‌ந்து செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர்,” இலங்கையில் போர் நிறுத்தம் கோரி .தி.மு. . பொதுச் செயலாளர் ஜெயலலிதா மேற்கொள்ள இருக்கும் உண்ணாநிலை போராட்டம் சற்று காலம் கடந்த நடவடிக்கைதான் என்ற போதிலும், வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

முல்லைத்தீவில் கொத்துக்கொத்தாக குண்டுகள் வீசப்படுகின்றன. மருத்துவ உதவி கிடைக்காமல் ஈழத் தமிழர்கள் தவிக்கின்றனர் . இந்த சூழலில் அவர்களுக்காக ஜெயலலிதா உண்ணாநிலை மேற்கொள்வது, அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் ஒன்றாகும்என்றார்.

கூட்டணி தொடர்பாக ஜெயலலிதாவை சந்திக்கப் போவதாகவும் , முதலமைச்சர் கருணாநிதியை சந்திக்கப் போவதாகவும் மாறி, மாறி செய்திகள் வெளிவருகின்றனவே எ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ள் கே‌ட்டத‌ற்கு, இதுபோல யூகங்களின் அடிப்படையில் வெளியாகும் செய்திகளுக்கெல்லாம் பதில் கூற முடியாது எ‌ன்றா‌ர்.

பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து பா.. பொதுக்குழு விரைவில் கூடி முடிவெடுக்கும் எ‌ன்று‌ம் எந்த தேதியில் பொதுக்குழு கூடும் என்பது ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் . அதுவரை நாங்கள் எந்த தலைவரையும் சந்திக்க மாட்டோம் எ‌ன்று ராமதாஸ் மேலும் கூறினார்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
.தி.மு.க கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத் மீது, இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை‌த் தொட‌ர்‌ந்து அவரை கைது செ‌ய்ய திருப்பூர் போலீஸார் செ‌ன்னை வ‌ந்து‌ள்ளன‌ர்.

மார்ச் 1 ம் தேதி அனைத்து மாணவர் கூட்டமைப்பு சார்பில் திருப்பூரில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பேசிய நாஞ்சில் சம்பத், இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகக் கூறி திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் நே‌ற்று நள்ளிரவு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, அவரை கைது செய்ய திருப்பூர் காவ‌ல்துறை‌யின‌ர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். நாஞ்சில் சம்பத் சென்னையில் இருப்பதாகவும், அவரை கைது செய்ய திருப்பூர் காவ‌ல்துறை‌யின‌ர் சென்னைக்கு விரைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தன்னிச்சியாக 24 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்ததை அடுத்து, அந்த கட்சியுடனான தங்களது கூட்டணி முறிந்துவிட்டதாக, சமாஜ்வாடி கட்சி அறிவித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளை கேட்டது. ஆனால் 17 தொகுதிகள் தருவதற்கு சமாஜ்வாடி கட்சி முன்வந்தது. இதனால் கூட்டணி பேச்சு வார்த்தையில் இழுபறி நீடித்து வந்தது.

இந்நிலையில் 24 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி தன்னிச்சையாக நேற்று முன்தினம் அறிவித்தது. அதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரும் அடங்குவர்.

கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவித்தது சமாஜ்வாடி கட்சித் தலைவர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி முறிந்துவிட்டதாக, சமாஜ்வாடிக் கட்சி அறிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சி பொதுச் செயலாளர் அமர்சிங் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், எப்போது தன்னிச்சையாக வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டதோ அப்போதே கூட்டணியின் மரண சாசனம் எழுதப்பட்டுவிட்டது என்றார்.

எனினும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் ஆகியோரை எதிர்த்து தனது கட்சி வேட்பாளர்களை நிறுத்தாது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரை சமாஜ்வாடி கட்சி பொதுச் செயலாளர் அமர்சிங் நேற்று டெல்லியில் சந்தித்தார். அப்போது கூட்டணி குறித்து இருவரும் விவாதித்தனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!
world
!!!!!!!!!!!!!!!!!!
ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேயின் புறநகர் பகுதியில் அந்நாட்டுப் பிரதமர் மோர்கன் ஸ்வன்கிரை சென்ற கார் விபத்துக்குள்ளானதில் அவர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹராரேயின் தெற்குப் பகுதியில் நடைபெற உள்ள பேரணியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோர்கன், தனது மனைவி சூசன், உதவியாளர் ஆகியோருடன் நேற்று காரில் சென்றார். அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தின் மீது பிரதமரின் கார் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது . இதில் மோர்கனின் மனைவி சூசன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய செய்தித் தொடர்பாளர் ஜேம்ஸ் மரிடாடி, பிரதமர் கோர்கன், அவரது உதவியாளர் ஆகியோர் உயிருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை எனக் கூறினார். எனினும் பிரதமரின் மனைவி சூசன் குறித்து அவர் எந்தத் தகவலும் வெளியிடவில்லை.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அமெரிக்க மருத்துவமனைகளில் இந்தியா உள்ளிட்ட அயல்நாட்டு செவிலியர்களை நியமிக்க அந்நாட்டு அதிபர் பராக் ஹுசைன் ஒபாமா எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்
மருத்துவத்துறையில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து வெள்ளை மாளிகையில் நடந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அதிபர் ஒபாமா, அமெரிக்காவில் செவிலியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், அயல்நாடுகளில் இருந்து செவிலியர்களை இறக்குமதி செய்வது நன்மை தராது .

அதற்குப் பதிலாக அமெரிக்காவில் உள்ள செலிவியர்களுக்கு போதிய பயிற்சி அளித்து அவர்களைத் தரம் உயர்த்தி பற்றாக்குறையை போக்குவதே சிறந்த தீர்வாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இருந்து பயிற்சி பெற்ற செவிலியர்களுக்கு விசா வழங்கும் நடைமுறைகளை விரைவுபடுத்தி அவர்களுக்கு உடனடியாக விசா வழங்குவதற்கு வகை செய்யும் புதிய சட்டம் கடந்த வாரம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில், நடந்த விவாதத்தில் பேசிய ஒபாமா, அமெரிக்காவிலேயே ஏராளமான பெண்கள் செவிலியர் பணியை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அரசுதான் அவர்களுக்கு உரிய பயிற்சிகளை அளித்து அவர்களை சிறந்த செவிலியர்களாக மாற்று நடவடிக்கையை எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ஒபாமாவின் இந்த கருத்து காரணமாக இந்தியா, சீனா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து அமெரிக்கா சென்று பணியாற்றும் செவிலியர்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடும் எனத் தெரிகிறது.
!!!!!!!!!!!!!!!!!!!
பெண்களுக்கெதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருமாறு மீண்டும் அழைப்பு விடுத்துள்ள .நா. செயலாளர் நாயகம் பான்கீமூன், உண்மையான ஆண்கள் பெண்களைத் துன்புறுத்தமாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
நாளை கொண்டாடப்படவிருக்கும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றிலேயே பான்கிமூன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கெதிரான வன்முறைகளின் தாக்கம் வார்த்தைகளால் விபரிக்க முடியாதவையாகவும் அளவிட முடியாதவையாகவும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள பான், பெண்கள் விட்டுக்கொடுக்கும் தன்மையைக் கொண்டவர்களாகவும் ஆண்கள் அடிக்கடி சண்டைக்குணம் கொண்டவர்களாகவும் காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் பெண்கள் எதிர்கால சந்ததியினரை உருவாக்குகிறார்கள். உலகின் பெரும்பாலான பகுதிகளில் அவர்கள் நாட்டிய பயிர்களே எமக்கு உணவாகிறது. எமது சமூகங்களை ஒன்றிணைக்கும் இழைநாராக பெண்கள் விளங்குகின்றனர். பெண்ளுக்கெதிரான வன்முறைகளை அனைவர் மீதும் நடத்தப்படும் தாக்குதல்களாகத் கருதவேண்டும். இவை எமது உயர்ந்த நாகரிகத்தின் அடித்தளத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்களாகும். எனவே இவ்வாறான வன்முறைகள் வெறுக்கத்தக்கவையாகவும் .நா. சாசனத்திலுள்ள ஒவ்வொரு பிரிவுக்கும் எதிரானவையாகவும் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
உலகம் பூராகவும் ஐந்தில் ஒருபெண் பாலியல் பலாத்காரத்தினால் பாதிக்கப்படும் அதேவேளை , சில நாடுகளில் மூன்றில் ஒரு பெண் வீதம் அடித்து துன்புறுத்தல் அல்லது ஏனைய வகை துஷ்பிரயோகங்களை எதிர்கொள்வதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்ததையடுத்துபெண்களுக்கெதிரான வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவர ஒன்றிணைவோம்என்ற அழைப்புடன் கடந்த வருடம் பான் உலகளவிலான பிரசாரத்தை ஆரம்பித்திருந்தார்.
அண்மையில் கொங்கோ ஜனநாயகக் குடியரசுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது அங்கு துப்பாக்கி முனையில் 4 படைவீரர்களால் மிருகத்தனமான முறையில் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 18 வயது யுவதியொருவரை சந்தித்ததாக தெரிவித்த பான், இச்சம்பவத்தால் அப் பெண் உடல் ரீதியாக மட்டும் துன்புறுத்தப்படவில்லை, சமூகம் அப்பெண்ணை களங்கப்பட்டவளாக நோக்குவதால் மனதளவிலும் அப்பெண் பெரும் துன்பத்தை அனுபவிக்கிறார். வெட்கம் என்ற தவறான சிந்தனையால் ஈர்க்கப்பட்ட குறிப்பிட்ட பெண்ணின் குடும்பமும் சமூகம் தீண்டத்தகாதவளாக அவளை ஒதுக்கி வைக்கின்றதென தனது ஆதங்கத்தையும் கவலையையும் வெளிப்படுத்திய பான்கிமூன், “”வன்முறையினால் உண்டாகும் விளைவுகள் கண்ணுக்கெட்டாத தூரத்திற்கு அப்பாலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இது மரணம், காயம் , மருத்துவ செலவீனம் மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு வழிவகுக்கிறது. பெண்களுக்கெதிரான வன்முறை சிறியதாக இந்தாலும் அது பல பிரச்சினைகளை உருவாக்குகிறதுஎனத் தெரிவித்துள்ளார் .
எனவே “”இவ்வாறான துன்புறுத்தல்களுக்கெதிர? ஆண்கள் கருத்துகளை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும். அதேவேளை, உண்மையான ஆண்கள் பெண்களைத் துன்புறுத்தமாட்டார்கள் என்ற கருத்தை ஆண்களின் மனங்களில் பதிய வைக்க வேண்டியதும் அவசியமாகும்.
மாற்றத்திற்கான தருணத்தை நாம் சந்தித்துள்ள இவ்வேளையில் பெண்களுக்கெதிரான வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சிறந்த ஒத்துழைப்புக்கு அனைவரிடமும் வேண்டுகோள்விடுக்கின்றேன்என பான் தெரிவித்தார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
லெபனானின் ஹிஸ்புல்லாஹ் இயக்கத்தின் அரசியல் பிரிவுடன் தாம் மீண்டும் தொடர்புகளை ஏற்படுத்தியிருப்பதாக பிரிட்டன் தெரிவிக்கின்றது.
லெபனானின் அரசியல் நிலைவரங்கள் சாதகமான நிலைக்குத் திரும்பியதைத் தொடர்ந்தே இந் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
10 மாதங்களுக்கு முன்னர் ஐக்கிய அரசாங்கமொன்றை அமைக்கும் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்ட ஹிஸ்புல்லாஹ் இயக்கம் அரசாங்கத்துடன் இணைந்தது.
ஈராக்கிலுள்ள போராளிகளுக்கு பயிற்சி வழங்கும் குற்றச்சாட்டில் ஹிஸ்புல்லாஹ்வின் இராணுவப் பிரிவை கடந்த வருடம் பிரிட்டிஷ் அரசாங்கம் தடைவிதிக்கப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் உள்ளடக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஹிஸ்புல்லாஹ்வின் எம்.பி.க்கள் உட்பட அதன் அரசியல் பிரிவுடன் உத்தியோகபூர்வ மட்ட தொடர்புகளை ஏற்படுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாகத் தெரிவித்துள்ள பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஹிஸ்புல்லாஹ்வையும் உள்ளடக்கிய லெபனானின் ஐக்கிய அரசுக்கு தம்மால் முடிந்த ஆதரவை பிரிட்டன் வழங்குமெனத் தெரிவித்தார்.
மேலும், ஹிஸ்புல்லாஹ் இயக்கம் வன்முறைகளைக் கைவிட்டு .நா. பாதுகாப்புச் சபையின் தீர்மானத்திற்கு அமைய லெபனானின் அரசியலில் அவ் அமைப்பின் ஜனநாயக ரீதியிலான ஆக்கபூர்வமான பங்களிப்பை அதிகரிப்பதே எமது நோக்கமெனத் தெரிவித்துள்ளதுடன் ஹிஸ்புல்லாஹ்வின் இராணுவப் பிரிவுடன் பிரிட்டன் எவ்வித தொடர்பையும் ஏற்படுத்தாது எனத் தெரிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!
டார்பூர் பிராந்தியத்திலிருந்து உதவி அமைப்புகளை வெளியேற்றும் தீர்மானத்தை சூடான் மறுபரிசீலனை செய்ய வேண்டுமென .நா.பொதுச் செயலாளர் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார் .
இத் தீர்மானம் சூடானில் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு பாரிய ஆபத்தை ஏற்படுத்துமென பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
சூடானிய ஜனாதிபதி ஒமர் அல் பஷீருக்கெதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்ததைத் தொடர்ந்தும் சூடானில் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த உதவி அமைப்புகளை நாட்டைவிட்டு வெளியேறுமாறு ஜனாதிபதி பஷீர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பில் .நா.வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
13 உதவி அமைப்புகளை வெளியேற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் இது அங்குள்ள மக்களுக்கு பாரிய அபாயத்தை தோற்றுவிக்கும். இவ் அமைப்புகள் டார்பூரிலுள்ள 47 இலட்சம் மக்களுக்கான உதவி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் சூடானிலுள்ள தமது அமைப்புகளின் பணியாளர்கள் மற்றும் சொத்துகளின் பாதுகாப்புத் தொடர்பிலும் கவலை வெளியிட்டுள்ள .நா.உபகரணங்கள், பணம் மற்றும் ஏனைய சொத்துகளை பறிமுதல் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் தெரிவித்துள்ளது.
டார்பூர் தொடர்பாக அங்குள்ள உதவி அமைப்புகளே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு தகவல்கள் அனுப்பியுள்ளதாக சூடானிய அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஆனால் இக்குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள சூடானிலுள்ள வெளிநாட்டு உதவி அமைப்புகள் தாம் அங்கிருந்து வெளியேறினால் பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வு சிக்கல் நிலைக்கு உள்ளாகுமெனவும் எச்சரித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக சூடான் ஜனாதிபதி பஷீர் தெரிவிக்கையில்; சூடானிலுள்ள இயற்கைவாயு , எண்ணை மற்றும் ஏனைய வளங்களை சுரண்டுவதற்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகின்றன.
சூடான் காலனித்துவ ஆட்சிக்கு அடிபணியப் போவதில்லையென்ற காரணத்தினாலேயே பலரும் சூடானை இலக்குவைக்கக் காரணமாய் உள்ளது. நாம் கடவுளுக்கு மட்டுமே அடிபணிகின்றோமெனத் தெரிவித்தார் .
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பின்னர் தனது மக்கள் மத்தியில் முதற்தடவையாக உரையாற்றுகையிலேயே பஷீர் இவ்வாறு கூறினார். இதேவேளை இவர் உரையாற்றிய சமயம் “”மதத்தைப் பாதுகாக்க நாம் தயார்‘, “”அமெரிக்கா கீழே விழும்என்ற கோஷங்களை மக்கள் தொடர்ந்து எழுப்பியிருந்தனர்.
சூடான் ஜனாதிபதி பஷீருக்கெதிரான பிடியாணையை அமெரிக்கா வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!
º] LPtTûP 60-m BiÓ ùLôiPôhPjÕdÏ BVjRUô¡ YÚ¡\Õ.
CûR AkSôhÓ Tj§¬ûL Juß ùYs°d¡ZûU ùR¬®jÕs[Õ. º] LPtTûP«u 60-m BiÓ §]m HlWp 23-m úR§ ªLÜm ©WUôiPUôL ùLôiPôPlTPÜs[Õ. B]ôp CkR ùLôiPôhPm GeÏ SûPùT\Üs[Õ GuTÕ Ï±jÕ AWÑ RWl©p Gq®Rj RLYÛm CpûX. LPtTûP ùLôiPôhPj §]jRuß LPtTûP UôùTÚm §hPeLû[ A±®dLXôm Guß G§oTôodLlTÓ¡\Õ. Es Sôh¥p ùNôkR ùRô¯pÖhT ER®ÙPu ®Uô]m Rôe¡ LlTûX Y¥YûUlTÕ Utßm ùY° SôÓL°p CÚkÕ A§ SÅ] ®Uô]m Rôe¡ LôlTpLû[ YôeÏYÕ Ï±jÕ A±®dLlTPXôm Guß AkR Tj§¬ûL ùR¬®jÕs
!!!!!!!!!!!!!!!!!!!!!
அமெரிக்காவில் வேலையில்லாதோரின் எண்ணிக்கை கடந்த 25 வருடங்களில் இல்லாத அளவுக்கு அதிகமாக இருப்பதாக அமெரிக்க அரசாங்கம் வெளியிட்ட புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.
கடந்த மாதத்தில் ஆறரை லட்சம் பேர் வேலை இழந்துள்ளார்கள். இதனால் வேலையில்லாதோரின் மொத்த எண்ணிக்கை அரை வீதத்தால் அதிகரித்து 8.1 சதவீதத்தை எட்டியுள்ளது.
சில்லறை விற்பனைத்துறை மற்றும் பொழுதுபோக்குத்துறை ஆகியவை உட்பட பல்வேறுபட்ட தொழிற்துறைகளில் வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது.
தொழில்சார் நிபுணர்கள் சேவைகள், வணிக சேவைகள், தொழிற்சாலைகள் மற்றும் கட்டிட நிர்மாணத்துறை ஆகியவையே மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
Australia v South Africa ;,ilapyhd JLg;ngLj;jhl;lg;Nghl;bapy; Ml;lj;ij Muk;gpj;jAustralia mzp 89 Xtupy; 4 tpf;Nfl; ,og;gpw;f;F 303 Xl;lq;fSld; MLfpwJ

1 euro =144.50sl /65.44 in
1us $ = 114.20sl / 51.72in
1 swiss fr =98.66sl /44.68in
1uk pound =160.89sl /72.87 in
1 saudi riyal= 30.49sl /13.81in

Leave a Reply

Your email address will not be published.