ஈரானுக்கு அமெரிக்கா அழைப்பு

வாஷிங்டன் : ஆப்கானிஸ்தானில் ஐ.நா., சார்பில் நடக்கும் மாநாட்டில் கலந்து கொள்ளும்படி ஈரானுக்கு அழைப்பு விடுக்கப்படுமென அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபராக புஷ் இருந்த போது, ஈரானை “ரவுடி நாடு’ என குறிப்பிட்டிருந்தார். ஒபமா அதிபராக பொறுப்பேற்ற பின், ஈரானுடன் சமாதானப் போக்கை ஏற்படுத்திக் கொள்ள முயற்சி செய்து வருகிறார்.

இது குறித்து வெள்ளை மாளிகை அதிகாரி ராபர்ட் ஜிப்ஸ் குறிப்பிடுகையில், “”போரினால் சிதைந்த ஆசிய நாடு என்ற தலைப்பில் வரும் 31ம் தேதி ஆப்கானிஸ்தானில் ஐ.நா., சார்பில் மண்டல மாநாடு நடைபெற உள்ளது. அண்டை நாடு என்ற முறையில் இந்த மாநாட்டில் பங்கேற்கும் படி ஈரானுக்கு அழைப்பு விடுக்கப்படும். இந்த மாநாட்டில் ஈரான் பங்கேற்பதன் மூலம் ஆக்கப்பூர்வமான தீர்வுகள் ஏற்பட வழிவகுக்கும்,” என்றார். இந்த மாநாட்டில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் கலந்து கொள்கிறார்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.