இந்திய நர்சுகளுக்கு வாய்ப்பு தடுக்கிறார் அதிபர் ஒபாமா

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஒபாமா, வெளிநாடுகளுக்கு வேலை வழங்குவதற்கு தெரிவித்து வந்த எதிர்ப்பை தொடர்ந்து, தற்போது வெளிநாட்டில் இருந்து நர்ஸ் பணிகளுக்கு ஆள் எடுப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் சமீப காலங்களாக, நர்சுகளுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் இந்தியா, சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் அந்நாடுகளுக்கு சென்று பணியாற்றுகின்றனர்.இதுகுறித்து அமெரிக்க காங்கிரசை சேர்ந்த லூயிஸ் காப்ஸ் என்பவர் கூறுகையில், “அமெரிக்காவில் அடுத்த ஏழாண்டுகளில் ஐந்து லட்சம் நர்சுகள் பற்றாக்குறை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது’ என்றார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, வெள்ளை மாளிகையில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய ஒபாமா கூறியதாவது:வெளிநாடுகளில் இருந்து நர்ஸ் பணிகளுக்கு ஆள் எடுக்க வேண்டும் என்பதில், எவ்வித அர்த்தமும் இல்லை. குடியேற்ற விவாதம் தொடர்பாக மக்கள் கோபத்தில் உள்ளனர். நாம் அமெரிக்காவில் உள்ள மக்களுக்கு நர்ஸ் பயிற்சி வழங்குவது குறித்து இதுவரை கவனத்தில் கொள்ளவில்லை.

இவ்வாறு அமெரிக்க அதிபர் ஒபாமா கூறினார்.இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் இருந்து பயிற்சி நர்சுகளை எளிதாக பணி நியமனம் செய்வதற்கான சிறப்பு நர்சிங் விசா சட்டம், கடந்த வாரம் அமெரிக்க சட்டசபையில் அறிமுகப்படுத்தப்பட்டது, குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.