நாட்டின் பிரதான இரண்டு கட்சிகளும் புலிகளுக்கு பணம் வழங்கியதாக குற்றச்சாட்டு

நாட்டின் பிரதான இரண்டு கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சிகளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பண உதவி வழங்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஆளும் கட்சி விடுதலைப் புலிகளுக்கு இரகசியமாக 700 மில்லியன் ரூபாவினை வழங்கியதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கப்பட்ட விதம் குறித்து மங்கள சமரவீரவும் ஸ்ரீபதி சூரியாரச்சியும் அம்பலப்படுத்தியுள்ளதாக ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில் திறைசேரியிலிருந்து விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அமைச்சர் தினேஸ் குணவர்தனா தெரிவித்துள்ளார்.

அரச நிதிநிர்வாக அமைப்பினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சி விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கியுள்ளமை அம்பலப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.