இலங்கை: மும்பை தமிழர்கள் மாபெரும் மனித சங்கிலி

மும்பை: இலங்கையில் போர் நிறுத்தம் அறிவிக்க வலியுறுத்தி மும்பையில் நடந்த மாபெரும் மனித சங்கிலி போராட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்டனர். இப்போராட்டம் விழித்தெழு இளைஞர் இயக்கம் சார்பில் நடத்தப்பட்டது.

தமிழர்கள் அதிகம் உள்ள மாதுங்கா கிங் சர்க்கிளில் ஆரம்பித்த இந்த மனித சங்கிலில் சயான், குர்லா, காட்கோபர், விக்ரோலி, பாண்டுப், முலுண்டு, தானே வரை நீண்டது.

அதில் பங்கேற்றவர்கள் ‘கொல்லாதே கொல்லாதே தமிழர்களை கொல்லாதே’, ‘இந்திய அரசே இந்திய அரசே சிங்களவனுக்கு ஆயுதம் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்காதே’, ‘இலங்கையின் அதிபர் ராஜபக்சே வா ராட்சச பக்சேவா’ போன்ற கோஷங்களை எழுப்பினர்.

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மூன்று மணி நேரம் இந்த மனித சங்கிலிப் போராட்டம் நடந்தது.

Source & Thanks : thatstamil.com

Leave a Reply

Your email address will not be published.