யாழ்ப்பாணத்தில் புலிகளின் சிறப்பு அணிகள் ஊடுருவல் – படைப் புலனாய்வுத்துறை எச்சரிக்கை

யாழ் குடாநாட்டில் தமிழீழ விடுதலைப்புலிகளின் சிறப்பு அணிகள் சில ஊடுருவி நிலைகொண்டுள்ளதாக சிறீலங்கா படைப்புலனாய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிறப்புப்பயிற்சி பெற்ற ஆண், பெண் போராளிகள் பலர் இவ்வாறு ஊடருவியுள்ள அணியில் இடம்பெற்றிருப்பதாகவும் மேலும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்தே யாழ் குடாநாட்டில் அண்மைய நாட்களில் படையினரது சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகள் மற்றும் ஆள் அடையாள பரீசிலிப்பு என்பன அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

கடந்த திங்கட்கிழமை யாழ் பல்கலைக்கழகத்தில் நடாத்தப்பட தேடுதலைத் தொடர்ந்து இந்தத் தகவல் வெளியாகியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

யாழ் குடாநாட்டிற்குள் ஊடுருவியுள்ள விடுதலைப்புலிகள் ஆயுதங்களை பதுக்கி வைத்திருக்கலாம் என்னும் அச்சத்தில் சிறீலங்கா படையினர் பல்கலைக்கழகம், தொழில்நுட்பக் கல்லூரி, கல்வி நிலையங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்கள் என்பனவற்றினை சுற்றிவளைத்து பாரிய தேடுதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறீலங்கா படையினரின் இவ்வாறான நடவடிக்கைகள் யாழ் மக்கள் மத்தியில் கடும் அச்சதினை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலைப் புலிகளின் ஊடருவல் என்ற பெயரில் யாழ் மக்களுக்கு உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தி, அவர்களை மேலும் அடக்கி ஒடுக்க சிறீலங்கா படையினர் முனையலாம் என்ற கருத்தும் மக்கள் மத்தியில் நிலவுகின்றது.

Source & Thanks : pathivu.com

Leave a Reply

Your email address will not be published.