சிறீலங்காவின் அன்னியச் செலாவணி இருப்பு அசுர வேகத்தில் குறைவு – அரசு உதவி கோரல்

சிறீலங்காவின் அன்னியச் செலாவணி இருப்பு வெகு விரைவாக குறைந்து செல்வதால், அச்சமடைந்துள்ள சிறீலங்கா அரசாங்கம் அனைத்துலக நாணய நிதியத்திடமும் ஏனைய நிதி நிறுவனங்களிடமும் உதவி புரியுமாறு கோர ஆரம்பித்துள்ளது.

சிறீலங்காவிற்கு பிரதான அன்னியச் செலாவணி வருவாயைப் பெற்றுக்கொடுக்கும் சுற்றுலாத்துறை மற்றும் பெருந்தோட்டத் தொழில் என்பனவற்றின் ன்னியச் செலாவணி வருமானம் முன்னரைவிட குறைவடைந்துள்ளன.

இதேவேளை, சிறீலங்கா அரசு மிகப்பெரும் பாதீட்டை ஒதுக்கீட்டுடன் தமிழர் தாயகத்தின் மீது போர் தொடுத்துள்ளதாலும், அதற்காக முற்று முழுதாக நாட்டின் உள்நாட்டு இருப்புக்களை பயன்படுத்துவதாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக பொருண்மிய வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மிகப்பெரும் பொருண்மிய நெருக்கடிக்குள் சிறிது சிறிதாக சென்று கொண்டிருக்கும் சிறீலங்காவை காப்பாற்றும் பொருட்டு, சர்வதேசத்திடம் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களைக் காண்பித்து உதவிகள் பெற்றுக்கொள்ள சிறீலங்கா அரசு நினைப்பது கடந்த சில நாட்களாக சிறீலங்காவின் ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கைகள் மூலம் புலப்படுகின்றது.

அதாவது வன்னியில் இருத்து இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உதவ உதவி செய்யும்படி உலகின் மனிதாபிமான தொண்டு நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அரசுகளிடம் சிறீலங்கா கேட்டு நிற்கின்றது.

ஏற்கனவே கிழக்கு மாகாணத்தினை ஆக்கிரமித்து இவ்வாறு புனர்வாழ்வுக்கு என வழங்கப்பட்ட நிதியின் மூலமே சிறீலங்கா அரசு தற்போதைய போரை நடாத்ததி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : pathivu.com

Leave a Reply

Your email address will not be published.