வடகிழக்கில் பாரியளவு மனித அவலங்களைத் தடுப்பதற்கு உடனடி யுத்தநிறுத்தம் தேவை – டெஸ்மன் டுட்டு

வடகிழக்கு பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் யுத்தத்தினால் ஏற்பட்டுள்ள பாரியளவு மனித அவலங்களையும், மனித உரிமை மீறல்களையும் தடுப்பதற்கு உடனடி யுத்தநிறுத்தம் தேவை என நோபள் சமாதான விருதாளரும், பேராயருமான டெஸ்மன் டுட்டு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

டெஸ்மன் டுட்டு உள்ளிட்ட புத்தஜீவிகளினால் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவையில் பிரித்தானியா நிரந்தர உறுப்பு நாடு என்ற வகையில் இலங்கையில் மனித பேரவலத்தை தடுப்பதற்கு உடனடி போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு அழுத்தம் கொடுக்க முடியும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஐக்கிய நாடுகளின் பிரகடனத்தின் அடிப்படையில் ஆயுத போராட்டம் இடம்பெறும் நாடுகளின் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதற்கு அமைவாக இலங்கை விவகாரத்தில் தலையீடு செய்ய முடியும் எனவும் அக்குழாம் தெரிவித்துள்ளது. இதனை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பேரவையில் பிரித்தானியா வலியுறுத்த வேண்டும்.

யுத்தம் இடம்பெறும் பகுதிக்கு சுயாதீன ஊடகவியலாளர்கள் செல்ல விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக சரியான தகவல்களை அறிந்து கொள்வதில் பெரும் சிரமம் ஏற்ட்படுள்ளது.

இதேவேளை மனித உரிமை விழுமியங்களை மதிக்கும் பொருட்டு யுத்தத்தில் ஈடுபடும் தரப்பினர் நடந்து கொள்ள வேண்டும. எனவும் தெரிவித்துள்ளனர்.

Source & Thanks : pathivu.com

Leave a Reply

Your email address will not be published.