மட்டக்களப்பில் சிறிலங்கா படையினர் மீது குண்டுத் தாக்குதல்: மூவர் காயம்

மட்டக்களப்பு மாவட்டம் கொம்மாந்துறையில் நேற்று சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கைக்குண்டுத் தாக்குதலில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

கொம்மாந்துறை 6 ஆம் கட்டை பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு 9:15 நிமிடமளவில் சிறிலங்கா படையினர் மீது விடுதலைப் புலிகள் கைக்குண்டுத் தாக்குதலை நடத்தினர்.

இதில் சிறிலங்கா படையைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்துள்ளனர் என விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்தனர்.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.