‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (06.03.09) செய்திகள்

posted in: செய்திகள் | 0

கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் இயங்கும் பிரபல புத்தக விற்பனை நிலையமானபூபாலசிங்கம்புத்தகசாலை உரிமையாளர் ஸ்ரீதரசிங் நேற்று மாலை பயங்கரவாத தடுப்புக் காவல்துறையினரால் கொழும்பில் கைது செய்யப்பட்டுக் கல்கிசை பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் கொழும்பில் நடத்திய வான் தாக்குதல் தொடர்பான கட்டுரையும் அது தொடர்பான படங்களும் பிரசுரிக்கப்பட்டிருந்தஆனந்த விகடன்வார இதழை விற்பனை செய்தமை தொடர்பாகவே ஸ்ரீதரசிங் கைது செய்யப்பட்டதாகத் தமக்கு அறிவிக்கப்பட்டதாக உறவினர்கள் பிரதியமைச்சர் ராதாகிருஷ்ணனிடம் முறையிட்டுள்ளனர்.

‘ஆனந்த விகடன்வார இதழை யாழ்ப்பாணத்தில் உள்ளபூபாலசிங்கம்புத்தகசாலைக்கும் மற்றும் விற்பனை நிலையங்களுக்கும் அனுப்புவதற்கான பொதியை இரத்மலானை விமான நிலையத்திற்கு அனுப்பியபோது, அதனைச் சோதனையிட்ட பொலிஸார் குறித்த விடயங்கள் தொடர்பான கட்டுரைகள் மற்றும் படங்கள் இருப்பதை கண்டு பணியாளர்களிடம் விசாரணை நடத்தினர். அதனை அடுத்து, நேற்று வியாழக்கிழமை மாலை இறக்குமதியாளரான ஸ்ரீதரசிங்கின் வெள்ளவத்தை வீட்டுக்குச் சென்ற பயங்கரவாத தடுப்புப் பொலிஸார் அவரைக் கைது செய்து கல்கிசை காவல் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இவர் கைது செய்யப்பட்டமை தொடர்பாக உறவினர்கள் பிரதி அமைச்சர் ராதாகிருஷ்ணன் மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோரிடம முறையிட்டுள்ளனர். ‘ஆனந்த விகடன்வார இதழைபூபாலசிங்கம்புத்தகசாலை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்நாட்டிலிருந்து இறக்குமதி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூரில் நேற்றிரவு விடுதலைப் புலி சந்தேக நபரொருவர் பாதுகாப்பு தரப்பினரின் சுற்றி வளைப்பின் போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர் .

விடுதலைப் புலிகளின் அப்பிரதேச தலைவரான நவநீதன் என்பவரே கொல்லப்பட்டவர் எனத் தெரிய வருவதாகக் கூறும் பொலிஸார்,தமக்குக் கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் பேரில் அந்தப் பகுதி சுற்றி வளைக்கப்பட்டுத் தேடுதல் மேற்கொள்ளப்பட்ட போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கின்றனர்.

பொலிஸ் தகவல்களின் படி கைத்துப்பாக்கி– 01, மற்றும் கைக்குண்டுகள் – 02 ஆகியன குறிப்பிட்ட நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்(ரி.எம்.வி.பி.) ஆயுதங்களை நாளை உத்தியோகபூர்வமாக அரசாங்கத்திடம் கையளிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அமைப்பின் ஊடகப் பேச்சாளரான ஆசாத் மௌலானா தெரிவிக்கின்றார்.

நாளை பிற்பகல் இது தொடர்பான உத்தியோகபூர்வ வைபவம் மட்டக்களப்பு நகரிலுள்ள தமது கட்சியின் தலைமையகமான மீனகத்தில் நடை பெறவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமது அமைப்பின் உறுப்பினர்கள் சிலர் பாதுகாப்பு தரப்பில் சேருவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்கள். மற்றும் சிலருக்கு சர்வதேச மற்றும் .நா அமைப்புக்களின் உதவியுடன் தொழிற் பயிற்சிகளை வழங்கவும் , வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
யாழ். நகரத்தின் பாதுகாப்புக்கென குழு ஒன்று நேற்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக 512 ஆவது படையணியினர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:
இம்மாதம் 5ஆம் திகதி (நேற்று) நடை பெற்ற பாது காப்புச் சம்பந்தமான குழுவின் கூட்டத்தில் அரசியல் கட் சிகள் அனைத் துப் பிரதிநிதிகளும் ஏனைய முக்கியஸ்தர் களும் பொலிஸாரும் கலந்துகொண்டனர். இக் கூட்டத் துக்கு நகர வட்டாரப் படைத்தளபதி தலைமை வகித்தார்.
யாழ். நகரில் பொது மக்களினதும் வணி கர்களினதும் பாதுகாப்பை உறுதி செய் வது குறித்தும் யாழ்.நகர மக்களும், வியா பா ரிகளும் எதிர்நோக்குகின்ற அனைத்துப் பிரச் சினைகள் தொடர் பாகவும் இங்கு கலந்தா தாலோசிக்கப்பட்டது. முக்கியமாக திருட் டுச் செயல்களை ஒழிப் பது, பாதையில் ஏற்படும் விபத்துக்களை கட்டுப்படுத்து தல் சட்டவிரோத மதுபான உற்பத்தி செய் தல், விற்பனை செய்தல் அதனால் ஏற்ப டும் தேவையற்ற பிரச்சினைகளைக் கட்டுப்படுத்துதல் என்பனவும் வியாபாரிகளிடம் இருந்து கப்பம் கோரல் சம்பந்தமான விடயங்களும் கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டன .
கூட்டத்தில் பாதுகாப்பு சம்பந்தமான கட்டமைப்பு ஒன்று அமைக்கப்பட்டுள் ளது. மேற்குறிப்பிட்ட செயற்பாடுகளை இல்லாதொழிக்க அல்லது கட்டுப்படுத்த அரசியல் கட்சிகள் ஊடாக மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட நடவடிக்கை எடுக்க முடிவாகியுள்ளது. அத்துடன் பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் குழு மாதத்தில் ஒரு முறை யாழ். நகர கட்டளைத் தளபதி பிரி கேடியர் ஜே.ஆர். குலதுங்க தலைமையில் கூடி ஆராய்வதற்கும் முடிவாகியது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வவுனியாவில் வங்கிப் பணியாளர்களிடம் கப்பம் கோருவதைக் கண்டித்து நேற்று வியாழக்கிழமை அனைத்து வங்கிகளும் மூடப்பட்டிருந்தன.
இதேநேரம், பெருந்தொகை கப்பம் கோரி கடந்த செவ்வாய்க்கிழமை மாலை வவுனியா நகரில் வைத்து கடத்தப்பட்ட அரச வங்கி சிரேஷ்ட அதிகாரியும் பாதுகாப்பு ஊழியரும் புதன்கிழமை இரவு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதுபற்றி மேலும் தெரியவருவதாவது;
கடந்த செவ்வாய்க்கிழமை மாலை வவுனியா விலுள்ள அரச வங்கி ஒன்றுக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு அதிகாரியொருவரை அழைத்த இனந்தெரியாதோர் அவரையும் அவருடன் சென்ற பாதுகாப்பு ஊழியரையும் கடத்திச் சென்றதுடன், இருவரையும் விடுவிக்க பெருந்தொகைப் பணத்தை கப்பமாகக் கோரியிருந்தனர்.
இந்த நிலையில், கடத்தப்பட்ட இருவரும் 30 மணிநேரத்தின் பின் புதன்கிழமை இரவு விடுவிக்கப்பட்டனர் . கடத்தல்காரர்கள் இவர்களை வவுனியா நகரில் விட்டுச்சென்றுள்ளனர்.
இதையடுத்து இந்தக் கடத்தல் மற்றும் கப்பம் கோரியதற்கு கண்டனம் தெரிவித்து வவுனியாவிலுள்ள சகல அரச, தனியார் வங்கிகளும் நேற்று பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதால் அவை மூடப்பட்டிருந்தன .
இதனால் நேற்று வங்கிகளுக்குச் சென்ற வாடிக்கையாளர்கள் பெரும் அசௌகரியம் அடைந்தனர் .
இந்தக் கடத்தல் மற்றும் கப்பக் கோரிக்கை குறித்து பொலிஸாருக்கும் படையினருக்கும் முறைப்பாடுகள் செய்யப்பட்டதும் தெரிந்ததே.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கையில் பதவியில் இருந்து வந்துள்ள அரசுகளின் அடக்குமுறை போக்கு தான், அங்கு இன மோதல்கள், படுகொலைகள் தொடர்வதற்கு காரணம் என்று கனடா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கனடா நாடாளுமன்றத்தில் அந்நாட்டு அயலுறவுத்துறை இணையமைச்சர் கென்ட் கூறுகையில் , இலங்கையில் நடைபெற்று வரும் இனப் படுகொலைகளை தாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றார் .

இலங்கையில் பதவியில் இருந்து வந்துள்ள அரசுகள் கடும் அடக்குமுறைப் போக்குடன் நடந்து வந்துள்ளதாகவும், இந்த மனப்போக்கு தான், அங்கு 37 ஆண்டு கால இனமோதல்கள் , படுகொலைகள் தொடர்வதற்குக் காரணம் என்று அவர் கூறினார்.

கனடாவில் அதிக அளவில் தமிழர்கள் வசித்து வருகின்றனர். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக ராணுவம் மேற்கொண்டு வரும் தாக்குதல்களைக் கண்டித்து, கனடா வாழ் தமிழர்கள் பல்வேறு போராட்டஙக்ளை நடத்தி வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

மன்னார் பிரதேசத்தில் ரெலிகொம் நிறுவனம் பொதுமக்களுக்கு வழங்கிய சீ.டி.எம் .. தொலைபேசிச் சேவை தொடர்ந்தும் பாதுகாப்பு காரணங்களால் துண்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த பல மாதங்களாக இந்த இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வெளியிடங்களுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளனர்.
குறிப்பாக வெளிநாடுகளில் உள்ள உறவினர்களுடன் தொடர்பு கொள்ள முடியாது அவதிப்படுகின்றனர் .
மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளும் தற்போது இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ள போதிலும் பாதுகாப்புக் காரணத்தைக் காட்டி இத் தொலைபேசி இணைப்பைத் துண்டித்திருப்பது குறித்து பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்தனர் . உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்கள் உறுதியளித்திருந்தனர். இதேவேளை, பேசாலைப் பகுதியில் ரெலிகொம் நிறுவனத்தின் ஊழியர்களின் வீடுகளுக்கு வழங்கப்பட்ட சீ.டி. எம்.. தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்படவில்லை.
இதனால் அவர்கள் தமது வீடுகளில தொலைபேசிச் சேவையை நடத்தி வருவதாகவம் தெரிவிக்கப்படுகிறது .
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அரச தரப்பில் பலர் சாப்பிடுவதற்காகவே பாராளுமன்றத்திற்கு வருவதாக .தே. . எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல குற்றம் சாட்டிய போது, இது ஒரு பக்க பிரச்சினையல்ல இரு பக்க பிரச்சினையாகும் என்று அரசதரப்பு பிரதம கொரடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தனவும் பதிலுக்கு சுட்டிக்காட்டினார்.
சபையில் எம்.பிக்களின் பிரசன்னம் இல்லாமை தொடர்பாகவே இந்தக்குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது .
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற சுற்றாடல் பாதுகாப்பு அறவீட்டு, உற்பத்தி வரி நிதிச் சட்டத்தின் கீழான கட்டளைகள் மீதான விவாதம் நடைபெற்றது.
இந்த விவாதத்தில் எதிர்க்கட்சி தரப்பில் .தே. எம்.பி.ரவிகருணாநாயக்க உரையாற்றும்போது சபையில் ஒரு சில எம்.பி.க்களே அமர்ந்திருந்தனர். இதனையடுத்துகோரம்ஒலிக்க விடப்பட்டது.
கோரம் ஒலித்துக்கொண்டிருந்த போது எம்.பிக்கள் சபைக்குள் ஓடிவந்தனர். இதற்கிடையில் ஒழுங்குப் பிரச்சினையொன்றைக்கிளப்பிய .தே.. எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல , அரச தரப்பில் பலர் சாப்பிடுவதற்காகவே பாராளுமன்றத்திற்கு வருவதாக தெரிவித்தார்.
அப்போது சபைக்குள் வந்த அரசதரப்பு பிரதம கொறடா தினேஷ் குணவர்தன, இது ஒருபக்க பிரச்சினையல்ல இருபக்க பிரச்சினையும் அதுதான். கோரத்தை அரச தரப்பு பாதுகாக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறினார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கையில் இடம்பெற்று வரும் மோதல் சூழ்நிலையை தனிப்பதற்கு சுமூகமான முறையில் தீர்வு காண அனைத்து தரப்பினரும் முனைப்பு காட்ட வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் சிக்கியுள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல புலிகள் அனுமதிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இடையறாது மனிதாபிமான நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பகைமை உணர்வுகளின் காரணமாக அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாதென அவர் தெரிவித்தள்ளார்.

வன்னிப் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் பிரச்சினைக்கு முடிந்தளவு சுமூகமான முறையில் தீர்வு காண முனைப்பு காட்ட வேண்டும் எனவும் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பொதுமக்கள் பாதுகாப்பை கவனத்திற் கொண்டு செயற்பட வேண்டியது மோதல்களில் ஈடுபட்டு வரும் தரப்பினரின் முதன்மைக் கடமை என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பை கவனத்திற் கொண்டு செயற்பட வேண்டியது மோதல்களில் ஈடுபட்டு வரும் தரப்பினரின் முதன்மைக் கடமை என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார் .

யுத்த சூழ்நிலையினால் நாட்டில் உருப்பெற்றுள்ள பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்து அரசாங்கம் அதிக அக்கறை செலுத்த வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார் .

யுத்த சு10ழ்நிலை காரணமாக இடம்பெற்ற அரசியல் படுகொலைகள் கடத்தல்கள் காணாமல்போதல்கள் போன்றவற்றுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு பாரபட்சமற்ற விதத்தில் தண்டனை வழங்கப்பட வேண்டும் என நவநீதம்பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் தனது முதலாவது அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றிய போது நவனீதம்பிள்ளை இதனைத் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என அரசாங்கம் வழங்கியுள்ள உறுதி மொழி மகிழ்ச்சியளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கையின் பொருளாதாரம் பாரிய பின்னடைவை எதிர்நோக்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
நாட்டின் முதனிலை நிறுவனங்களாகக் கருதப்படும் 41 நிறுவனங்களில் 37 நிறுவனங்கள் நட்டத்தை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அரசாங்கம் மத்திய வங்கியிடமிருந்து 182 பில்லியன் மேலதிகப் பற்றைப் பெற்றுக் கொண்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இரண்டு முன்னணி பிஸ்கட் உற்பத்தி நிறுவனங்கள் தங்களது உற்பத்திகளை குறைத்துள்ளதாகத் குறிப்பிட்டுள்ளார் .
தேயிலை உற்பத்தியிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றி போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நாட்டில் மஹிந்த சிந்தனைக்கு பதிலாக மன்மோகன் சிங்கின் சிந்தனைகளே நடைமுறைப்படுத்தப்படுவதாக புதிய இடதுசாரி கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு
கருணாரட்ன தெரிவித்துள்ளார் . நிப்போன் ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மாகாணசபை முறைமை நடைமுறையில் உள்ள போதிலும் அரசாங்கம் எவ்வித அதிகாரங்களையும் மாகாணசபைகளுக்கு வழங்குவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக சிறுபான்மை மக்களது உரிமைகளை வழங்கும் நோக்கில் மாகாணசபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் தற்போது அடக்குமுறைகளே முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அதிகாரம் நிறுவப்பட்ட போதிலும் எவருக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ஆளுனரின் வேலைக்காரரைப் போன்றே கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் நடத்தப்பட்டு வருவதாக கலாநிதி விக்ரமபாகுகருணாரட்ன தெரிவித்துள்ளார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கையில் பாரிய மனிதாபிமானப் பேரழிவொன்று இடம்பெறுவதை உலகம் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது என சர்வதேச மனித உரிமைக் கண்காணிப்பகம் விசனம் தெரிவித்துள்ளது .
பொதுமக்கள் பலியாவதைத் தடுப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையையும் ஏனைய உலக நாடுகளையும் உடனடியாகத் தலையிடுமாறும் அந்த அமைப்புக் கோரியுள்ளது.
வன்னியில் இருபக்க மோதலில் சிக்கியுள்ள மக்களை வெளியேற்றும் திட்டத்துக்கு இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் உடனடியாக இணங்கவேண்டும் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது .
சுமார் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் மக்கள் மோதல்கள் மற்றும் நிவாரணப் பற்றாக்குறைகளால் பெரும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளனர்.
பொதுமக்களை மனிதாபிமான ரீதியில் வெளியேற்றுவதே தற்போது உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையாகும் என சர்வதேச மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் ஆசியாவுக்கான இயக்குநர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் இதனுடன் தொடர்புபட்ட அரசுகளுடன் இணைந்து, இலங்கை செயலாற்ற வேண்டும் . இலங்கையில் மனிதாபிமானப் பேரழிவுகள் நிகழ்வதை உலகம் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கிறது எனத் தெரிவித்துள்ள அவர் , இலங்கையில் பொதுமக்கள் உயிரிழப்பதைத் தடுப்பதற்கு ஐக்கிய நாடுகளும், தொடர்புபட்ட நாடுகளும் முன்வர வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இந்த விடயத்தில் சர்வதேச மனிதாபிமான சட்டங்களின் அடிப்படையில் உள்ள கடப்பாடுகளையும் மனித உரிமை கண்காணிப்பகம் நினைவு படுத்தியுள்ளது .
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு சார்பான வகையில் மனித உரிமை கண்காணிப்பகம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான அனுர பிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக மனித உரிமை கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டு வரும் அறிக்கைகள் ஒரு பக்கச் சார்பாக அமைந்துள்ளதென அவர் குற்றம் சுமத்தியுள்ளார் .

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமை கண்காணிப்பகமும் அதன் உறுப்பினர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருவதாக அனுர பிரியதர்சன யாபா சுட்டிக்காட்டியுள்ளார்.

வன்னி மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குவதில் சில தாதமங்கள் ஏற்பட்ட போதிலும் மக்களை அரசாங்கம் கைவிடவில்லை என அவர் தெரிவித்துள்ளார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
world
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சென்னை உய‌ர்நீ‌திம‌ன்‌ற‌த்‌தி‌ல் நடந்த மோதல் பற்றி விசாரணை நடத்திய நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா, உ‌ச்சநீ‌திம‌ன்ற தலைமை நீதிபதியிடம் நே‌ற்று அறிக்கை தாக்கல் செய்தார். இ‌ந்த வ‌ழ‌க்கு இ‌ன்றுவிசாரணை‌க்கு வரு‌கிறது.

சென்னை உய‌ர்நீ‌திம‌ன்ற வளாகத்தில், கடந்த 19ஆ‌ம் தேதி வழ‌க்க‌றிஞ‌ர்களு‌க்கு‌ம், காவ‌ல் துறை‌யினரு‌க்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இ‌ந்த மோத‌ல் தொட‌ர்பாக உ‌ச்சநீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்குகளை விசாரித்தநீ‌‌திம‌‌ன்ற‌ம், மோதல் சம்பவம் பற்றி விசாரணை நடத்துவதற்காக நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் விசாரணை குழுவை நியமித்தது. 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து, நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா குழு‌வின‌ர் சென்னை வந்து இரு தரப்பினரிடமும் , அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தி முடி‌த்தது.

இந்த நிலையில், நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா டெல்லியில் உ‌ச்சநீ‌திம‌ன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனை அவருடைய இல்லத்தில் சந்தித்து விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த அறிக்கையை ஆதாரமாகக் கொண்டு, உ‌ச்ச ‌‌நீ‌திம‌‌ன்ற‌த்‌தி‌ல் இன்று மீண்டும் வழக்கு விசாரணை நடைபெறுகிறது .

‌நீ‌திப‌திக‌ள்பிற‌ப்‌பி‌க்கு‌ம் உத்தரவின் அடிப்படையில், வழ‌க்க‌றிஞ‌ர்கள் தங்கள் போராட்டம் குறித்து முடிவு எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
!!!!!!!!!!!!!!!!
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெ‌ரியா‌ர்திரா‌‌விட‌ர் கழக‌த் தலைவ‌ர் கொளத்தூர் மணியின் ‌‌விடுதலை பிணை மனுவைதி‌ண்டு‌க்க‌ல் நீ‌திம‌ன்ற‌ம்நிராக‌ரி‌த்தது
திண்டுக்கல்லில் கடந்த பிப்ரவரி மாதம‌் 26ஆ‌ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக பெரியார் திராவிடர் கழக மாநில தலைவர் கொள‌த்தூ‌ர் ம‌ணிமீது திண்டுக்கல் வடக்கு காவ‌‌ல்துறை‌யின‌ர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர் .

இதை‌த் தொட‌ர்‌ந்து நகர காவ‌ல்துறை துணை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான காவ‌ல்துறை‌யின‌ர், சேலம் மாவட்டம் மேட்டூர் பொன்நகருக்கு சென்று கொளத்தூர் மணியை அவருடைய வீட்டில் வைத்து கைது செய்தனர். பின்னர் அவரை திண்டுக்கல்லுக்கு அழைத்து வந்துநீ‌திம‌ன்ற‌த்‌தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தற்போது கொளத்தூர் மணி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே கொளத்தூர் மணிக்கு ‌‌விடுதலைபிணை கேட்டு, அவர் சார்பாக வழ‌க்க‌றிஞ‌ர் கணேசன் திண்டுக்கல் 2-வது நடுவ‌ர் ‌‌‌நீ‌திம‌‌ன்ற‌‌த்‌தி‌ல் மனு தாக்கல் செய்‌திரு‌ந்தா‌ர்.

இ‌ந்த மனு‌வைவிசா‌ரி‌த்த நீ‌திப‌தி ராதாகிருஷ்ணன், கொளத்தூர் மணியின் ‌‌விடுதலைபிணை மனுவைநிராக‌ரி‌‌த்தா‌ர்
!!!!!!!!!!!!!!!!
தேசத் தந்தை மகாத்மா காந்தி பயன்படுத்திய 5 பொருட்களை, இந்தியத் தொழிலதிபர் விஜய் மல்லையா 18 லட்சம் டாலருக்கு ஏலத்தில் எடுத்துள்ளார்.

நியூயார்க்கில் ஏன்டிகுவோரம் என்ற ஏல நிறுவனம், கலிபோர்னியாவைச் சேர்ந்த ஜேம்ஸ் ஓடிஸ் என்பவரிடம் இருந்த காந்தியின் 5 பொருட்களை ஏலம் விட்டது. இந்த ஏலத்தில் இ‌ந்‌தியத் தொழிலதிபர் விஜய் மல்லையா சா‌ர்பில் டோனி பேடி ஏலத்தில் கலந்து கொண்டார்.

மகாத்மா காந்தி பயன்படுத்திய கடிகாரம், மூக்கு கண்ணாடி, தட்டு, பேழை, ஒரு ஜோடி காலணி உள்ளிட்ட 5 பொருட்களையும் மொத்தம் 18 லட்சம் டாலருக்கு டோனி பேடி ஏலத்தில் எடுத்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டோனி பேடி, ஏலம் விடப்பட்ட காந்தியின் பொருட்களை விஜய் மல்லையா வாங்கியதன் மூலம் தேசத்தந்தையின் பொருட்கள் மீண்டும் நாட்டிற்கே கிடைத்துள்ளது . இவற்றை இந்திய அரசுக்கு பரிசாக வழங்க மல்லையா திட்டமிட்டுள்ளார்.

இன்னும் 2 வாரங்களில் காந்தியின் பொருட்களை ஏன்டிகுவோரம் ஏல நிறுவனம் மல்லையாவிடம் அளித்து விடும் என்பதால் விரைவில் அவை இந்தியாவுக்கு கொண்டு வரப்படும். இதனால் இந்திய மக்கள் பெருமகிழ்ச்சியடைவார்கள் என தாம் நம்புவதாகக் கூறினார்.

முன்னதாக காந்தியின் பொருட்களை ஏலம் விடுவதை நிறுத்த வேண்டுமானால் இந்திய அரசு பாதுகாப்பிற்காக செலவிடும் தொகையை குறைத்துக் கொண்டு, ஏழைகளின் நலனுக்காக ஒதுக்கும் நிதியை அதிகரிக்க வேண்டும் என அமெரிக்காவைச் சேர்ந்த ஜேம்ஸ் ஓடிஸ் இந்திய அரசுக்கு நிபந்தனை விதித்தார் .

இந்த நிபந்தனையை இறுதி நிமிடத்தில் இந்தியா ஏற்க மறுத்ததைத் தொடர்ந்து காந்தியின் பொருட்களை ஏலத்தில் விட ஓடிஸ் அனுமதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கையில் உடனடி போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்குமாறு ம‌த்‌‌திய அரசை வலியுறுத்தி வரு‌ம் 10‌ஆ‌ம் தே‌தி நட‌க்க இரு‌‌ந்த உ‌ண்ணா‌விரத‌ப் போரா‌ட்ட‌த்‌தி‌ற்கு கா‌வ‌ல்துறை‌யின‌ர் அனும‌தி அ‌ளி‌க்க மறு‌த்து‌வி‌ட்டதா‌ல் வரு‌ம் 9ஆ‌ம் தே‌தி உ‌ண்ணா‌விரத‌ப் போரா‌ட்ட‌ம் நடைபெறு‌ம் எ‌ன்று ...‌தி.மு.. பொது‌ச் செயல‌ர் ஜெயல‌லிதா தெ‌‌ரிவ‌ி‌த்து‌ள்ளா‌ர்
இது தொட‌ர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும், அதற்கு உறுதுணையாக இருந்து வரும் தி.மு.. அரசை கண்டித்தும், இலங்கையில் உடனடி போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும்,

இலங்கை தமிழர்களுக்கு முழுமையான ஆதரவை வெளிப்படுத்துகின்ற வகையிலும் ...தி.மு.. சார்பில் வ‌ரு‌ம் 10ஆ‌ம் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தேன்.

இந்த நிலையில் அன்றைய தினம் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி மறுத்து விட்ட நிலையில் மேற்படி உண்ணாவிரத அறப்போராட்டம் 9ஆ‌ம் தேதி (திங்கட்கிழமை) அன்று சென்னை மாநகரிலும், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் புதுச்சேரி மாநிலத்திலும் நடைபெறும்.

சம்பந்தப்பட்ட மாவட்ட செயலர்கள் மேற்கண்டவாறு உரிய ஏற்பாடுகளை செய்து உண்ணாவிரத போராட்டத்தை சிறப்பான முறையில் நடத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் எ‌ன்று ஜெய‌ல‌லிதா கூ‌‌றியு‌ள்ளா‌‌ர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் எல்.கே.அத்வானி, தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தை நாளை தொடங்குகிறார். நாளை மாலை நாகர்கோவிலில் நடக்கும் பா .. கூட்டத்தில் அவர் பேசுகிறார்.

மக்களவை தேர்தல் அறிவிப்பு கடந்த 2ஆம் தேதி வெளியானதுமே, அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரமாகி விட்டன. வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரமே தொடங்கி விட்டது.

இந்நிலையில், பா.. மூத்த தலைவரும் , பிரதமர் வேட்பாளருமான எ‌ல்.கே.அத்வானி நாளை (7ஆம் தேதி) நாகர்கோவில் வருகிறார். மாலை 3 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா திடல் மைதானத்தில் நடக்கும் பா .. பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழகத்தில் பிரசாரத்தை தொடங்குகிறார்.

பா.. செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத், தேசிய செயலர் திருநாவுக்கரசர் , மாநில தலைவர் இல.கணேசன், துணைத்தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். அத்வானி வருகையையட்டி நாகர்கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

!!!!!!!!!!!!!!!!!!!!!!
மகாராஷ்டிராவில் சிவசேனா மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் இடையே சமரசப் பேச்சுவார்த்தை நடந்து வரும நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பிரதமர் வேட்பாளராக நின்றால் அவருக்கு ஆதரவு அளிப்போம் என்று சிவசேனா கூறியது, பாரதிய ஜனதா தலைவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பதில் பல்வேறு மாநிலங்களில் பாஜகவிற்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியுடன் கூட்டணி முறியும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக பெரிய கட்சியாக விளங்குகிறது பாஜக. கடந்த 2004ஆம் ஆண்டு அக்கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்த அதிமுக, தெலுங்கு தேசம் உள்ளிட்ட சில கட்சிகள் தற்போது விலகி உள்ளன. மகாராஷ்டிராவில் 20 ஆண்டுகளாக இணைந்து செயல்பட்ட சிவசேனா கட்சியுடன் தொடர்ந்து செயல்படுவதில் தற்போது பாஜகவிற்கு சிக்கல் எழுந்துள்ளது. அத்வானி பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளதை ஏற்க முடியாது என்று சிவசேனா தலைவர் பால்தாக்கரே தெரிவித்துள்ளார். ஒரிசாவில், தொகுதி பங்கீடு செய்வதில் பிஜு ஜனதா தளத்திற்கும், அக்கட்சிக்கும் இடையே பிரச்னை எழுந்துள்ளது. பாஜக, வேட்பாளர்களை அறிவித்திருக்கும் 3 தொகுதிகளில், பிஜு ஜனதா தளமும் வேட்பாளர்களை அறிவித்துள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பீகாரில், பாஜகவிற்கு இம்முறை குறைவான இடங்களை ஒதுக்கீடு செய்யவே ஐக்கிய ஜனதா தளம் விரும்புகிறது. அதனை ஏற்றுக்கொள்ள மறுத்தால், அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவது என்று நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தனித்துப் போட்டியிடப் போவதாக பாஜக அறிவித்துள்ளது. அசாம் மாநிலத்தில், அசாம் கனபரிஷத்துடன் தொகுதி உடன்பாடு செய்து கொண்டுள்ள பாஜக, 8 இடங்களில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. வரும் தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வலுவான கூட்டணி அமைத்து பாஜகவால் செயல்பட முடியுமா என்பது தற்போது பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தமிழ்நாட்டில் தி.மு..வு‌டன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு நடத்த காங்கிரஸ் கட்சியில் 5 உறுப்பினர் குழுவை அக் கட்சியின் தலைவர் சோனியா காந்தி நியமித்துள்ளார். இந்த தகவலை தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.

தி.மு..வுடன் தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் கட்சி பேச்சு நடத்த உள்ளது. இதற்காக 5 உறுப்பினர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வி. தங்கபாலு, மத்திய அமைச்சர்கள் .சிதம்பரம், ஜி.கே.வாசன், .வி.கே.எஸ். இளங்கோவன் , சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் சுதர்சனம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கட்சி நிர்வாகிகள் நியமனத்தில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு விரைவில் சுமூக தீர்வு காணப்படும். அனைத்து தரப்பினரும் ஏற்கக் கூடிய வகையில் பிரச்சனை தீர்க்கப்படும் எ‌ன்று குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.

!!!!!!!!!!!!!!!!!!!!!

ஆஸ்கார் விருது பெற்றஸ்லம்டாக் மில்லியனர்குழந்தை நட்சத்திரத்தின் வீடு இடிக்கப்படுகிறது. .

“ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அசாருதீன் இஸ்மாயில் நடித்திருக்கிறார். அசாருதீனின் தந்தை சட்ட விரோதமாக மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி குடியிருப்பதாக கூறப்படுகிறது.

அவருடைய தாய் காசநோயால் அவதிப்படுகிறார். இந்த நிலையில் இஸ்மாயிலின் தந்தை சட்ட விரோதமாக கட்டி உள்ள வீட்டை ஒரு வாரத்தில் இடித்து தரைமட்டமாக்கப் போவதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்மாயிலின் தந்தை வீடு கட்டி இருக்கும் இடம் நகராட்சி விளையாட்டு மைதானத்துக்காக ஒதுக்கப்பட்டது என்றும், அந்த வீடு விரைவில் இடிக்கப்படும் என்றும் உதவி மாநகராட்சி ஆணையர் உமாசங்கர் கூறியிருக்கிறார்.

எங்களுடைய வீடு இடிக்கப்பட்டால் நாங்கள் நடுத்தெருவில்தான் நிற்க வேண்டும் என்று அசாருதீனின் தந்தை கூறுகிறார். எங்களுக்கு வீடு கொடுக்க போவதாக அறிவிப்பு வெளியானது. அதை இப்போதே கொடுத்தால் எங்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று அவர் கூறுகிறார்

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
world
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு ஈரானுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று, அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வாஷிங்டன்னில் வெள்ளை மாளிகைச் செய்தித் தொடர்பாளர் ராபர்ட் கிப்ஸ் கூறும்போது, ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து விவாதித்து முடிவெடுக்க, இம்மாதம் 31 ஆம் தேதி மாநாடு ஒன்று நடத்தப்படுகிறது. இதற்கான இடம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

இம்மாநாட்டில் கலந்து கொள்ளும்படி, பூகோளரீதியாக ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள ஈரான் உள்ளிட்ட எல்லைப் பகுதி நாடுகளுக்கு அமெரிக்கா அழைப்பு விடுக்கும். மாநாட்டில் பங்கேற்று ஆப்கானிஸ்தான் பிரச்சனைக்கு ஈரான் தீர்வு தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

எனினும் இந்த மாநாட்டின் போது வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், ஈரான் தலைவர்களைச் சந்திப்பாரா என்பது குறித்து இப்போது எதையும் கூற முடியாது என்றார்
!!!!!!!!!!!!!!!!!!!!
பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு இம்மாதம் 31ஆம் தேதி முதல் , அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.

அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்ற பின்னர், தனது முதலாவது ஐரோப்பியப் பயணமாக இம்மாதம் 31 ஆம் தேதி லண்டனுக்குச் செல்கிறார். அங்கு, ஏப்ரல் 2ஆம் தேதி நடைபெறும் ஜி – 20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.

இதைத் தொடர்ந்து 3, 4 ஆம் தேதிகளில் பிரான்ஸ், ஜெர்மன் நாடுகளின் நடைபெறும் நேட்டோ மாநாட்டில் ஒபாமா கலந்து கொள்ளவிருக்கிறார் . அப்போது,பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோசி, ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் ஆகியோருடன் ஒபாமா முக்கிய ஆலோசனை நடத்துக்கிறார். இதைத் தொடர்ந்து செக் குடியரசுக்கும் பயணம் மேற்கொள்ள ஒபாமா திட்டமிட்டுள்ளார்.

லண்டனில் நடைபெறும் ஜி– 20 மாநாட்டில் உலக நாடுகளில் நிலவும் தற்போதையப் பொருளாதாரச் சூழல் குறித்து முக்கியமாக விவாதிக்கப்படுகிறது .

பிரான்ஸில் நடைபெறும் நேட்டோ உச்சி மாநாட்டில் ஆப்கானிஸ்தான்பாகிஸ்தான் நிலவரம் முக்கிய விவாதப் பொருளாக இருக்கும்.
!!!!!!!!!!!!!!!!!!!
ûRYôàPu úTfÑYôojûR SPjR RVôWôL CÚlTRôL º] ©WRUo ùYu ´VôúTô ùR¬®jÕs[ôo.
SPl× Bi¥p ØRpØû\VôL ®VôZd¡ZûU á¥V º] SôPôÞUu\ áhP ùRôPdL ¨Lrf£«p ´VôúTô úT£VÕ:
ûRYôàPu ¿iPLôXUôL ¨X® YÚm TûLÙQoûY Ø¥ÜdÏd ùLôiÓYW º]ô ®Úmס\Õ. CRtLôL AkRSôhÓPu AW£Vp çVôL úTfÑ SPjR RVôWôL CÚd¡ú\ôm. CÚSôÓL°ûP«Xô] E\Ü úUmTP úYiÓm. CÚRWl×dÏm CûPúV AûU§ JlTkRm HtTP úYiÓm Guß AYo á±]ôo.
G²àm úTfÑYôojûRdÏ Gq®RUô] ®`VeLs GpXôm GÓjÕd ùLôs[lTÓm GuTÕ Es°hP ®YWeLû[ AYo ùR¬®dL®pûX.
´VôúTô®u CkR úTfÑ Ï±jÕ ûRYôu EP]¥VôL T§p GûRÙm ùR¬®dL®pûX.
¡ZdÏ B£Vô®p Es[ ¾Ü SôÓ ûRYôu. º]ô®u ùRu¡ZdÏ LPtLûW«p CÚkÕ ÑUôo 300 ¡.Á. ùRôûX®p AûUkÕs[Õ. CkSôÓ ReLÞdÏf ùNôkRUô]Õ Guß º]ô E¬ûU ùLôiPô¥ YÚ¡\Õ. CR]ôp CÚSôÓL°ûPúV TX BiÓL[ôL ©Wfû] ¿¥d¡\Õ
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
©¬h¥x ©WRUo LôoPu ©ùWüu A°jR 2 T¬ÑLs AùU¬dL A§To JTôUôûY ªLÜm ùS¡ZûYjR].
R]dÏ £\kR T¬ÑLû[ A°jRRtLôL LôoPu ©ùWüû] JTôUô ùRôûXúT£«p ùRôPo× ùLôiÓ Su± ùR¬®jRôo.
©¬h¥x Øu]ôs ©WRUo ®uùNuh Nof£#u YôrdûL YWXôß ×jRLØm, úT]ôÜmRôu JTôUôûY ùS¡ZûYjR AkRl T¬ÑL[ôÏm.
CÕ Ï±jÕ ùYsû[ Uô°ûL ùY°«hÓs[ ùNn§d ϱl×:
AùU¬dL A§To JTôUôûYf Nk§dL YkR LôoPu lùWüu AYÚdÏ CWiÓ T¬ÑLû[ A°jRôo. CkR T¬ÑLs JTôUôÜdÏ ªÏkR U¡rf£ A°jÕs[]. ©ùWüu A°jR ×jRLm ùYsû[ Uô°ûL AÛYXLj§p Es[ AùU¬dL A§T¬u R²lThP èXLj§p CPm ùTßm. AYo A°jR, UWjRôp AZLô] Øû\«p Y¥YûUdLlThP úT]ô vúPiÓ A§T¬u AÛYXL úUû_«p TVuTôhÓdÏ ûYdLlTÓm Gußm ùR¬®dLlThÓs[Õ.
CWiPôm EXLl úTôo LôXLhPj§p ©¬h¥x ©WRUWôL ùTôßlúTt\ ®uùNuh Nof£p ReLs SôhûP ùYt±lTôûRdÏ AûZjÕf ùNu\ôo. AYWÕ YôrdûL YWXôtßl ×jRLj§u ØRp T§l× ©W§ûV JTôUôÜdÏ ©ùWüu YZe¡Ùs[ôo.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சூடானிய அதிபர் ஒமார் அல் பஷீர் மீதான போர்க்கால குற்றச்சாட்டுகள் தொடர்பில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதை .நா. பாதுகாப்பு சபை ஓராண்டு காலத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்துவதற்காக ஆப்பிரிக்க ஒன்றியம் தனது பிரதிநிதிகள் குழுவொன்றை .நா.வுக்கு அனுப்புகிறது.
ஆப்பிரிக்க ஒன்றியத்தின் அவசரக் கூட்டமொன்றில் இம்முடிவு எட்டப்பட்டது.
தார்பூர் வன்முறை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அதிபர் பஷீர் மீது பிடி ஆணை பிறப்பித்திருந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை வருகிறது.
மொத்த ஆப்பிரிக்காவுக்குமான ஒரு விவகாரம் இது என்று கூறி தன்னோடு நட்புறவு கொண்டுள்ள ஆப்பிரிக்க ஒன்றிய நாடுகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தைப் புறக்கணிக்குமாறு சூடான் வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் செயலுக்கு பல ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!
உக்ரைனின் அரசுத்துறை எரிசக்தி நிறுவனமான நஃப்டோகாஸ், ரஷ்யாவிடம் இருந்து தான் சென்ற மாதம் பெற்ற எரிசக்திக்காக செலுத்த வேண்டிய தொகை முழுவதையும் தற்போது செலுத்தியுள்ளது .
ரஷ்யப் பிரதமர் விளாதிமிர் புடின் விதித்திருந்த காலக்கெடுவுக்குள் அது தொகையை செலுத்தியுள்ளது .
வருகின்ற சனிக்கிழமை முடிகின்ற காலக்கெடுவுக்குள் கட்டணத் தொகை செலுத்தப்படவில்லை என்றால் எரிசக்தி வழங்குவதை மீண்டும் நிறுத்த நேரிடும் என்று புடின் எச்சரித்திருந்தார் .
உக்ரைன் செலுத்த வேண்டிய தொகையின் கடைசி தவணையும் தற்போது செலுத்தப்பட்டுவிட்டது என்பதை ரஷ்ய எரிசக்தி நிறுவனம் காஸ்புரோம் உறுதிசெய்துள்ளது.
இவ்வாண்டில் முன்னதாக உக்ரைனுடன் ஏற்பட்ட ஒரு தகராற்றின் ஒரு பகுதியாக அந்நாட்டுக்கு எரிசக்தி வழங்குவதை இரண்டு வார காலத்துக்கு ரஷ்யா நிறுத்திவைத்திருந்தது.
அதன் விளைவாக கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பிய நாடுகளில் பல லட்சம் பேர் குளிரில் வாட நேர்ந்திருந்தத
!!!!!!!!!!!!!!!!
sports
நியூஸீலாந்துக்கு எதிராக இந்தியா விளையாடி வரும் 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி 3வது முறையாக மழையால் நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய அணி 28.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய நேரப்படி இன்று அதிகாலை துவங்கிய இப்போட்டியில் இந்திய அணி பூவாதலையா வென்று முதலில் பேட் செய்து வருகிறது. ஆட்டத்தின் 19வது ஓவரில் மழை குறுக்கிட்டது. அப்போது இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்திருந்தது.

இதையடுத்து மீண்டும் ஆட்டம் துவங்கிய போது இரு அணிகளுக்கும் தலா 44 ஓவர்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆட்டத்தின் 24வது ஓவர் முடிவில் மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 151 ரன்கள் சேர்த்திருந்தது.

மீண்டும் ஆட்டம் துவங்கிய போது இரு அணிகளுக்கும் தலா 34 ஓவர்கள் வழங்கப்படுவதாக கூறப்பட்டது. எனினும் 28.4வது ஓவரில் மூன்றாவது முறையாக மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்திருந்தது. அணித்தலைவர் தோனி 23 ரன்கள், ரெய்னா 13 ரன்கள் எடுத்துள்ளனர்.

துவக்க வீரர்களாக களமிறங்கிய சேவாக் 54 ரன்கள், சச்சின் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய கம்பீர் 30 ரன்கள், யுவராஜ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.
!!!!!!!!!!!!!!
1euro =144.56 sl /65.38in
1 us $ = 114.10 sl /51.60in
1 swiss fr = 99.17 sl /44.85in
1 uk pound =162.86 sl/73.65 in
1 saudi riyal =30.42sl /13.76in

Leave a Reply

Your email address will not be published.