இலங்கை தமிழர்களுக்காக 10-ந்தேதி உண்ணாவிரதம் : ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை : இலங்கை தமிழர்களுக்காக 10-ந்தேதி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த மத்திய அரசு இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாநில அரசும் அதற்கு உடந்தையாக இருக்கிறது . மத்திய, மாநில அரசைக் கண்டித்தும், இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், வருகிற 10ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். இலங்கைத் தமிழர்களுக்கு நமது முழுமையான ஆதரவை வெளிப்படுத்துகின்ற வகை யில், சென்னை மாநகரிலும், அனைத்து மாவட் டத் தலைநகரங்களிலும் மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் நடக்கும் . அப்பாவி தமிழர்கள் பாதுகாக்கப்பட ஒரே வழி போர் நிறுத்தம்தான் . எனவே இதை வலியுறுத்தி சென்னையில் நடைபெறும் உண்ணாவிதப் போராட்டம் எனது தலைமையில் நடக்கும் . மற்ற மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற உள்ள உண்ணாவிரத அறப் போராட்டம் மாவட்ட தலைமை நிர்வாகிகள் தலைமையில் நடக்கும் . ஒவ்வொரு மேடையிலும் இலங்கைத் தமிழர்களுக்காக நிதி திரட்ட உண்டியல் வைக்கப்படும். அதில் முதலில் நான் இலங்கைத் தமிழர்களுக்காக நிதி அளிக்க உள்ளேன். அந்தந்த மாவட்டங்களில் வைக்கப்படும் உண்டியலில் செலுத்தப்படும் நிதிகளை சம்பந்தப்பட்ட மாவட்டக் செயலாளர்கள் பின்னர் தலைமைக் கழகத்தில் ஒப்படைக்குமாறு பணித்துள்ளேன் . இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.