பயங்கரவாதிகள் பற்றி துப்பு கொடுத்தால் 1 கோடி ரூபாய் பரிசு *லாகூர் தாக்குதல் தொடர்பாக 24 பேர் கைது

லாகூர் : இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர் பாக 24 பேரை, பாகிஸ் தான் புலனாய்வு நிறுவனத்தினர் கைது செய் துள்ளனர். இருந்தாலும், தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 12 பேரில் யாரும் கைது செய்யப்படவில்லை. அவர்கள் பற்றி துப்பு கொடுத்தால் ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என பாகிஸ் தான் அரசு அறிவித்துள்ளது.


பாகிஸ்தான் லாகூர் நகரில், நேற்று முன்தினம் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் சென்ற பஸ் மீது, பயங்கரவாதிகள் 12 பேர் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் கிரிக்கெட் வீரர்கள் ஏழு பேர் காயம் அடைந்தனர். அவர்களின் பாதுகாப்புக்காக சென்ற போலீசார் உட்பட எட்டு பேர் பலியாயினர். வெள்ளை நிற காரில் வந்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதி கள் தப்பி விட்டனர்.இதையடுத்து, தாக்குதலுக்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியை, பாகிஸ்தான் புலனாய்வு நிறுவன அதிகாரிகளும், போலீசாரும் துவக் கினர். லாகூரின் குல்பெர்க் ஏரியாவில் விருந்தினர் இல்லங்கள் மற்றும் விடுதிகளில் அவர்கள் நடத் திய சோதனையில், சந்தேகத்திற்குரிய 24 பேர் கைது செய்யப்பட்டனர்.இருந்தாலும், இவர்களில் யாரும் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளாக இருக்க வாய்ப்புகள் இல்லையென, தொலைக்காட்சி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

1 கோடி ரூபாய் பரிசு: கைது செய்யப்பட்டவர்கள் எல்லாம் 20 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள்; ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள். குல்பெர்க் பகுதியில் உள்ள விடுதி ஒன்றிலிருந்து ரத்தம் தோய்ந்த ஆடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. வேறு 14 இடங்களில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதற்கிடையில், கிரிக்கெட் வீரர்கள் மீதான தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகள் பற்றி துப்புக் கொடுப்பவர்களுக்கு, ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படுமென பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசு அறிவித்துள்ளது. அதே நேரத்தில், லாகூரில் நேற்று முன்தினம் நடந்த தாக்குதல்களுக்கு பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளே காரணமாக இருக்கலாம்.இலங்கை கிரிக்கெட் அணியினருக்கு போதுமான பாதுகாப்பளிக்க, பாகிஸ்தான் அரசு தவறி விட்டது. மிகப்பெரிய நபர்களுக்கு கூட பாதுகாப்பற்ற நாடாக பாக்., மாறியுள்ளதென, பாக்., பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

மும்பை தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப் பட்டது. அதில், கோபமடைந்த அமைப்புகள் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம். பஞ்சாபி பயங்கரவாதிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் இது.இந்த தாக்குதல் சம்பவத்தால், பாகிஸ்தானுக்கு வெளிநாட்டு விளையாட்டு அணி எதுவும் நீண்ட காலத்திற்கு வராது. மும்பை தாக்குதல் லாகூருக்கும் விஜயம் செய்து விட்டது என்றும் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.மேலும், இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோகித் பொகோலகாமாவிடம், இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களைக் கண்டுபிடித்து இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதாக அதிபர் சர்தாரி உறுதி கூறினார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.