பணத்தகராறில் பள்ளி மாணவரை கொலை செய்த சக மாணவர் கைது

விருதுநகர் : விருதுநகர் அருகே பணத் தகராறில் எட்டாம் வகுப்பு மாணவரை கொலை செய்த சக மாணவர் கைது செய்யப்பட்டார். விருதுநகர் மாவட்டம் வள்ளியூரை சேர்ந்தவர் ராஜேந்திரன


டாஸ்மாக் பாரில் வேலை செய்து வருகிறார். இவரது ஒரே மகன் சதீஷ்குமார் (14). அங்குள்ள இந்து நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்தார். சதீஷ்குமாருக்கு நேற்று பிறந்தநாள் என்பதால் பள்ளிக்கு சென்று அனைவருக்கும் சாக்லெட் வழங்கிவிட்டு வீட்டிற்கு வந்தார். தந்தை ராஜேந்திரன் வேலைக்கு சென்றுவிட்டார். அவரது தாய் அருகில் உள்ள வீட்டிற்கு சென்றுவிட்டார். சதீஷ்குமார் மட்டுமே இருந்தார். அப்போது வீட்டிற்கு ராஜேந்திரன் சாப்பிட வந்தார். அங்கு கட்டிலில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சதீஷ்குமார் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இது குறித்து ராஜேந்திரன் ஆமத்தூர் போலீசில் புகார் செய்தார்.

போலீஸ்விசாரணையில், சதீஷ்குமாருடன் படிக்கும் மாணவரான இதே கிராமத்தைச் சேர்ந்த சந்திவீரன், வாக்மேன் வாங்குவதற்காக கொடுத்த பணத்தில் சதீஷ்குமார் 250 ரூபாய்க்கு வாக்மேன் வாங்கினார். மீதமுள்ள 150 ரூபாயை தர வில்லை. பிறந்த நாள் என்பதால் சதீஷ்குமாரிடம் பணம் இருக்கும் என்ற எண்ணத்தில் வீட்டுக்கு வந்த சந்திவீரன் பணம் கேட்ட போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் சதீஷ்குமாரை அரிவாள்மனையால் கழுத்தை அறுத்து சந்திவீரன் கொலை செய்தார் என்பது தெரியவந்தது. போலீசார் சந்திவீரனை கைது செய்தனர்.

Source & Thanks : Dinamalar

Leave a Reply

Your email address will not be published.