படிப்பில் இங்கிலாந்து மாணவர்களை மிஞ்சும் இந்திய, சீன மாணவர்கள்

லண்டன்: படிப்பில் இங்கிலாந்து மாணவர்களை விட இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்த மாணவர்கள் அபாரமாக படிப்பதாக இங்கிலாந்து அரசின் கல்வி மற்றும் திறன் துறை வெளியிட்டுள்ள தகவல் தெரிவிக்கிறது.

இங்கிலாந்து கல்வி தர அலுவலகத்தின் தலைவராக இருந்தவர் மைக் டாமிலின்சன். இவர் இங்கிலாந்து அரசின் கல்வி மற்றும் திறன் துறை ஆலோசகராக இருக்கிறார்.

இவர் டெலிகிராப் அளித்துள்ள பேட்டியில்,

இங்கிலாந்தில் உள்ள இந்தியா மற்றும் சீன வம்சாவளி குழந்தைகள் படிப்பில் அதிக திறமை கொண்டவர்களாக உருவாகி வருகின்றனர். இவர்களது கற்கும் ஆற்றல் வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் இவர்கள் அதிக அளவில் டாக்டர்கள், வக்கீல்கள் மற்றும் கணக்காளர்கள் போன்ற தொழிலுக்கு செல்கின்றனர்.

ஆனால், இங்கிலாந்து குழந்தைகள் வகுப்பறையில் தடுமாறி வருகின்றனர். இதற்கு இந்திய மற்றும் சீன பெற்றோர்கள் அளவுக்கு இங்கிலாந்து பெற்றோர்கள் தங்களது குழந்தையை கவனிக்காததும், அவர்களில் வளர்ச்சியில் போதிய பங்களிப்பு செய்யாததும் தான் காரணம்.

இதனால் இங்கிலாந்து குழந்தைகளின் செயல்திறனும், தேர்ச்சி விகிதமும் குறைந்துள்ளன என்றார் டாமிலின்சன்.

இங்கிலாந்தில் படிப்பில் சிறந்து விளங்கும் இனத்தவரில் சீனர்கள் முதலிடத்தில் உள்ளனர். தேசிய அளவில் தேர்வுகளில் 86 சதவீதம் சீனர்கள் தேர்வு பெற்று விடுகின்றனர். இந்தியர்கள் 85 சதவீதத்துடன் 2வது இடத்தில் உள்ளனர். ஆனால் சீனர்களின் அதே தரத்துடன்தான் இந்திய மாணவர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து மாணவர்களுக்கு 80 சதவீதத்துடன் 3வது இடமே கிடைத்துள்ளது.

பரீட்சைகளில் தேர்ச்சி விகிதத்தில் இந்தியர்களின் சதவீதம் 59.1 சதவீதமாக உள்ளது. இங்கிலாந்து மாணவர்களின் சதவீதம் 44.3 ஆக உள்ளது.

Source & Thanks : aol.in

Leave a Reply

Your email address will not be published.