மாத்தளன் மருத்துவமனைப் பகுதியில் படையினரின் எறிகணைத்தாக்குதலில் நேற்றும் 68 பொதுமக்கள் பலி; 126 பேர் காயம்

வன்னிப்பகுதியில் பாதுகாப்பு வலயப்பகுதிகள் மீது நேற்று புதன்கிழமை சிறிலங்கா படையினர் மேற்கொண்ட ஆட்லறி மற்றும் பல்குழல் பீரங்கித் தாக்குதல்களில் 21 சிறுவர்கள், கர்ப்பிணிப் பெண் அடங்கலாக 68 தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 126 பேர் காயமடைந்துள்ளனர்.

இதில் நேற்றுக் காலை 5.30 மணி தொடக்கம் முற்பகல் 6.45 மணிவரை பொக்கணைப் பகுதியை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட ஆட்லறி எறிகணைத் தாக்குதல்களில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 11 பேர் காயமடைந்தனர்.

இதே பகுதியில் மாலையில் படையினர் மேற்கொண்ட தாக்குதல்களில் ஒரு குழந்தை, ஐ.சி.ஆர். சி. பணியாளர், அடங்கலாக 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 69 பேர் காயமடைந்தனர்.

மாத்தளன் பகுதியில் காலையில் மேற்கொண்ட தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர். 9 பேர் காயமடைந்தனர். மாலையில் இதே பகுதியில் 19 பேர் கொல்லப்பட்டும் 37 பேர் காயமடைந்துமுள்ளனர்.

பாதுகாப்பு வலயப் பிரதேசத்திற்கு வெளியே உள்ள இரணைப்பாலைப் பகுதியில் காலையில் நடாத்தப்பட்ட தாக்குல்களில் 4 சிறுவர்கள் உட்பட 13 பேர் கொல்லப்பட்டும் மாலையில் 10 பேர் கொல்லப்பட்டும் 51 பேர் காயப்பட்டுமுள்ளனர்.

மே.மாக்கிறட் (வயது 40)
ந.அன்னம்மா (வயது 53)
ஆகியோர் கொல்லப்பட்டவர்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சி.கயலவன் (வயது 23)
சி.தயாநிதி (வயது 34)
நா.தினேஸ் (வயது 14)
கோ.சர்மிளா (வயது 25)
லோ.புவனேஸ்வரி (வயது 57)
கு.பாக்கியம் (வயது 45)
வ.சசிகாந்தன் (வயது 25)
த.கென்சியா (வயது 04)
செ.சுமதி (வயது 28)
ம.குணம் (வயது 50)
கோ.கோபாலதரன் (வயது 27)
லோ.நடனசபேசன் (வயது 27)
மா.டெல்லிமாக்கிறட் (வயது 40)
ம.விஜித்குமார் (வயது 84)
வீ.ஞானவேலு (வயது 47) ஆகியோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய கொல்லப்பட்டவர்கள், காயமடைந்தவர்களின் பெயர் விபரங்கள் கிடைக்கப்பெறவில்லை.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.