மொனறாகல பகுதியில் காவல்துறையினரின் சோதனைச் சாவடி மீது தாக்குதல்: 2 பேர் பலி

சிறிலங்காவின் மொனறாகல மாவட்டத்தில் உள்ள புத்தள பகுதியில் காவல்துறையினரின் சோதனைச் சாவடி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஊர்காவல் படையைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக சிறிலங்கா இராணுவத்தின் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளதாவது:

புத்தள கோணகங்காஆரா பிரதேசத்தில் உள்ள காவல்துறையினரின் சோதனைச் சாவடி மீது இன்று புதன்கிழமை 9:00 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் ஊர்காவல் படையைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். சோதனைச் சாவடியும் சேதமடைந்துள்ளது.

இத்தாக்குதலை விடுதலைப் புலிகளே நடத்தியுள்ளனர். அப்பகுதியில் மேலதிக படையினர் குவிக்கப்பட்டு தேடுல் நடவடிக்கை நடத்தப்பட்டது என்றார் அவர்.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.