கனடாவில் அமெரிக்க துணைத் தூதரகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்

வன்னியில் சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித அவலத்தை உடனடியாக தடுத்து நிறுத்தவும், சிறிலங்கா அரசிற்கு அழுத்தம் கொடுக்குமாறும் அமெரிக்க அரச தலைவர் ஒபாமாவை வேண்டி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் கனடாவில் நடைபெற்றது.

இந்நிகழ்வு ரொறன்ரோ நகரில் 360 University Avenue இல் அமைந்துள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தின் முன்பாக நேற்று செவ்வாய்க்கிழமை (03.03.09) பிற்பகல் 1:00 தொடக்கம் மாலை 6:00 மணி வரை நடைபெற்றது.

கடும் குளிரையும் பொருட்படுத்தாது சிறுவர், முதியோர், பெண்கள் என பல்வேறு தரப்பினரும் தமிழீழத் தேசியக் கொடியுடன் கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் தேசியக் கொடிகளையும் தாங்கிய வண்ணம் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர்.

– ஒபாமா உன்னால் மட்டும்தான் முடியும்

– எங்கள் தலைவன் பிரபாகரன்

– எங்களுக்கு வேண்டும் தமிழீழம்

– விடுதலைப் புலிகள் சுதந்திர போராட்ட வீரர்கள்

– விடுதலைப் புலிகளே எங்கள் ஏகப்பிரதிநிதிகள்

– தடையை நீக்கி; விடுதலைப் புலிகளை அங்கீகரி

போன்ற முழக்கங்களை மக்கள் மிக எழுச்சியுடன் எழுப்பினர்.

இந்நிகழ்வு தொடர்ந்தும் இன்றும் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமையும் இதே இடத்தில் இதே நேரத்தில் மீண்டும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.