ராகு‌ல்கா‌ந்‌தி ‌பிரதம‌ர் ஆவது ப‌ற்‌றி எ‌ம்.‌பி‌.க்க‌ள் முடிவு செ‌ய்வா‌ர்க‌ள் ‌: இளைஞ‌ர் கா‌ங்‌கிர‌ஸ் செயல‌ர்

கா‌ங்‌கிர‌‌‌ஸ் க‌ட்‌சி ‌மீ‌ண்டு‌ம் ‌ஆ‌‌ட்‌சி‌க்கு வ‌ந்தா‌ல் ராகு‌ல் கா‌ந்‌தி பிரதம‌ர் பத‌வி ஏ‌ற்பது கு‌றி‌த்து நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் ஒ‌ன்று கூடி முடிவு செ‌ய்வா‌ர்க‌ள் எ‌ன்று அ‌கில‌ இ‌ந்‌திய இளைஞ‌ர் கா‌‌ங்‌கிர‌ஸ் ‌க‌ட்‌சி‌யி‌ன் செயல‌ர் ‌ஜிஜே‌ந்‌‌திர ‌சி‌ங் கூ‌றினா‌ர்.

த‌மிழக கா‌ங்‌கிர‌ஸ் க‌‌ட்‌சி‌யி‌ன்‌ தலைமை அலுவலகமான ச‌த்‌தியமூ‌ர்‌த்‌தி பவ‌னி‌ல் இ‌ன்று ‌த‌மிழக மா‌‌நில, மாவ‌ட்ட இளைஞர‌ணி தலைவ‌ர்களுட‌ன் அ‌கில‌ இ‌ந்‌திய இளைஞ‌ர் கா‌‌ங்‌கிர‌ஸ் ‌க‌ட்‌சி‌யி‌ன் செயல‌ர் ‌ஜிஜே‌ந்‌‌திர ‌சி‌ங், அ‌கில இ‌ந்‌திய இளை‌ஞ‌ர் கா‌ங்‌கிர‌ஸ் தலைவ‌ர் அசோ‌க் த‌ன்வா‌ர் ஆ‌கியோ‌ர் ஆலோசனை நட‌த்‌தின‌ர்.

‌பி‌ன்ன‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அ‌கில‌ இ‌ந்‌திய இளைஞ‌ர் கா‌‌ங்‌கிர‌ஸ் ‌க‌ட்‌சி‌யி‌ன் செயல‌ர் ‌ஜிஜே‌ந்‌‌திர ‌சி‌ங், கா‌ங்‌கிர‌‌‌ஸ் க‌ட்‌சி ‌மீ‌ண்டு‌ம் ‌ஆ‌‌ட்‌சி‌க்கு வ‌ந்தா‌ல் ராகு‌ல் கா‌ந்‌தி பிரதம‌ர் பத‌வி ஏ‌ற்பது கு‌றி‌த்து நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் ஒ‌ன்று கூடி முடிவு செ‌ய்வா‌ர்க‌ள் எ‌ன்றா‌ர்.

கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி ‌‌மீ‌ண்டு‌ம் ஆ‌ட்‌சி‌க்கு வ‌ந்தா‌ல் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங்தா‌ன் ‌பிரதம‌ர் எ‌ன்று ராகு‌ல்கா‌ந்‌தி கூ‌றியதை ப‌ற்‌றி கே‌‌ட்டத‌ற்கு, இ‌ப்போதை‌க்கு எதுவு‌ம் சொ‌ல்ல முடியாது. தே‌ர்த‌ல் முடி‌ந்த ‌பிறகு நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் முடிவு செ‌ய்வா‌‌ர்க‌ள் எ‌‌ன்றா‌ர்.

ம‌க்களவை‌த் தே‌ர்த‌ல் முடி‌ந்த ‌பிறகு இளைஞ‌ர் கா‌ங்‌கிர‌ஸ் ‌நி‌ர்வா‌கிக‌ள் தே‌ர்த‌ல் நடைபெற உ‌ள்ளது எ‌ன்று தெ‌ரி‌வி‌த்த ‌ஜிஜே‌ந்‌‌திர ‌சி‌ங், ஒரு மாத‌ம் க‌ழி‌த்து இளைஞ‌ர‌ணி‌யினரு‌க்கு அடையாள அ‌‌ட்டை கொடு‌ப்போ‌ம் எ‌ன்று‌ம் அ‌ந்த அடையாள அ‌ட்டை உ‌ள்ளவ‌ர்க‌ள் ம‌ட்டுமே வா‌க்க‌ளி‌த்து இளைஞர‌ணி ‌நி‌ர்வா‌கிகளை தே‌ர்‌ந்தெடு‌ப்பா‌ர்க‌ள் எ‌ன்றா‌ர்.

உல‌கிலேயே இளைஞ‌ர் கா‌ங்‌கிர‌ஸ்தா‌ன் ஒரு ஜனநாயக ‌ரீ‌‌தி‌யிலான அமை‌ப்பு எ‌ன்று கூ‌றிய அவ‌ர், எனவே ஜனநாயக முறை‌ப்படி தே‌‌ர்த‌ல் ‌பிரசார‌ம் செ‌ய்வோ‌ம் எ‌ன்றா‌ர்.

மு‌ன்னா‌ள் தே‌ர்த‌ல் ஆணைய‌ர் ஜே.எ‌ம்.‌லி‌‌‌‌ங்டோ வ‌ழிகா‌ட்டுத‌‌லி‌ன் பே‌‌ரி‌ல் இளைஞர‌ணி‌யி‌ன‌ர் செய‌ல்படு‌கிறா‌ர்க‌ள் எ‌ன்று கூ‌றிய ‌ஜிஜே‌ந்‌‌திர ‌சி‌ங், கட‌ந்த 5 ஆ‌ண்டுக‌ளி‌ல் கா‌‌ங்க‌ிர‌‌ஸ் க‌ட்‌சி ந‌ல்ல ‌தி‌ட்ட‌ங்களை செய‌ல்படு‌த்‌தியு‌ள்ளது எ‌ன்று‌ம் இதனா‌ல் கா‌ங்‌‌கிர‌ஸ் க‌ட்‌சி ‌மீண‌்டு‌ம் ஆ‌ட்‌சி‌க்கு வரு‌ம் எ‌ன்‌று‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

ம‌க்களவை‌த் தே‌‌ர்த‌லி‌ல் கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி‌க்கு ம‌க்க‌ள் ஆதரவு அ‌ளி‌‌க்க வே‌ண்‌டு‌ம் எ‌ன்று‌ம் அவ‌ர் கே‌ட்டு‌க் கொ‌ண்டா‌ர்.

பே‌ட்‌டி‌யி‌ன் போது கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி‌‌யி‌ன் த‌மிழக இளைஞர‌ணி தலைவ‌ர் மயுரா ஜெய‌க்கும‌ா‌ர் உட‌ன் இரு‌ந்தா‌ர்.

Source & Thanks : webdunia.com

Leave a Reply

Your email address will not be published.